பயனர்:திருமதி. பிரியா/மணல்தொட்டி

நன்னூல்  தொகு

நன்னூல் அறிமுகம்

தமிழ் மொழியின் இலக்கணத்தை விளக்கும் நூல்கள் பல. அவற்றுள் எழுத்து, சொல்

பொருள் , யாப்பு, அணி என்னும் ஐந்தையும் தொகுத்துப் பேசும் நூலாக விளங்குவது

தொல்காப்பியம் பழமையும் முழுமையும் கொண்ட நூலை அடியொற்றி எழுந்த நூல்களில்

குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருப்பது நன்னூல்.

இந்நூல் எழுதப்பட்ட காலம் 12ஆம் நூற்றாண்டு;

ஐந்திலக்கண நூலாகச் செய்யப்பட்ட நன்னூலின் பொருள், யாப்பு, அணி என்பன பின்னர்

அழிந்துபட்டதாகக் கூறப்படுகிறது. உரையாசிரியர் மயிலைநாதர் காலத்திற்குப் பின்னரே பாயிரவியல் நன்னூலின்  உறுப்பாகக் கொள்ளப்பட்டது தற்போது எழுத்து, சொல் என்னும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.