பயனர்:தேவகுமார்/மணல்தொட்டி
மதமும் மனிதனும்
"காலம் தனது ஒட்டத்தினை வேகமாக செலுத்தும்
கணலாய் சில கதைகள் அது உணர்தும்”
மதமும் காலவோட்டத்தில் மக்கள் மனதில் அதி வேகமாய் ஊடுருவி அவர்களை தனக்குள்ளேயே முழ்கடித்துவிடும். மதம் என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல்வேறு நபர்களும் பல்வேறுபட்ட விளக்கங்களைத் தரலாம் என் அறிவுக்கு எட்டிய வகையில் மதம் என்பது மனிதனின் மனப் பயத்தின் வெளிப்பாடால் தோன்றிய ஒன்றாகும். பின்னாலின் அறிவுத் தெளிவினால் நற்சிந்தனையாளர்களால் அது சீரமைக்கப்பட அச் சிந்தையாளர்களே இறைவனாகவும் இறை தூதர்களாகவும் ஏற்கப்பட்டனர். இவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருப்பெற்ற கொள்கைகள் மதமாய் மனித மனத்தில் ஆழப்பதிந்தன.