பயனர்:தோழர் வலிப்போக்கன்/மணல்தொட்டி

                            விழலுக்கு இறைத்த நீராய்................

உலகில் பல தவளைகள் வாழ்கின்றனவாம். அந்த பல தவளைகளுள் ஒரு தவளைகள் விசத்தன்மை உடையனவாம். தவளைகளிலே விசத்தன்மையுடைய தவளைகளும் இருக்கின்றனவா ? என்று வினவியபோது,ஆம்.என்றும் உண்மைதான் என்று பதில் கிடைத்தது.

இப்படித்தான்,இந்த தவளைகள் போன்றுதான் மனிதர்களும் இருக்கிறார்கள். இந்த மனிதர்களிலே விசத்தன்மை வாய்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள்.

தவளைகள் சிந்திக்கத் தெரியாதவை, செக்கு மாடுகளைப்போல் உழலுபவை, ஆனால் மனிதர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள் அந்தச் சிந்தனையை வாழ்வுக்கும் வளத்துக்கும் பயன்படுத்த தெரிந்தவர்கள். அதெ்தகைய சிந்தனையை பயன்படுத்திதான். விசத்தன்மையுள்ள மனிதர்களும் விசத்தன்மையான நடவடிக்கைகளை செய்ல்படுத்துகிறார்கள்.

இந்த விசத்தன்மையுள்ள மனிதர்களைப் பற்றி அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள், பயம்கொண்டோ,ஒதுங்கியோ சென்று தங்களை தற்காத்துக் கொள்கிறார்கள். தெரியாதவர்கள் அந்த விசத்தன்மையுள்ள மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். அல்லது பலிகடாவாகிறார்கள்.

இந்த விசத்தன்மையுள்ள மனிதர்களால் பெரும்பான்மை மனிதர்களுக்கு என்னென்ன கேடுகள் விளைகின்றன. அவர்களால் மனித சமுதாயத்திற்கு எப்படிபட்ட தீங்குகள் ஏற்ப்படுகின்றன.

சாதிவெறி,மதவெறி,இனவெறி,கலவரப்பலி,கொலை.களவு,பாலியல்பலத்காரம், இப்படி பல நிவர்த்திக்க முடியாத பல கேடுகள்.

பொய்யுரையையே சாதனையாக்கி ஆட்சிக்கு வரும் விசத்தன்மையான மனிதர்களால் விலைவாசிழ ஏற்றம், வேலையில்லா திண்டாடாட்டம்,வறட்சி,கொள்ளை,ஊழல் அடக்குமுறை இப்படியான சீர்கேடுகள்.

சமூகத்தின் மீதும்,மற்ற மனிதர்கள் மீதும் அக்கறை கொண்ட சமூக சிந்தனை கொண்ட சிந்தனையாளர்களாலும், சமூக பற்றாளார்களாலும் விசத்தன்மையுள்ள மனிதர்களின் சீர்கேடுகளை எதிர்த்தும் போராடியும் வந்துள்ளார்கள்.

அப்படிபட்ட சிந்தனையாளர்களின் சிந்தனைகளும், போராட்டங்களும், அவர்தம் தியாகங்களும் இன்று விசத்தன்மையுள்ள மனிதர்களின் அதிகாரபலத்தாலும், வன்முறை.அடக்குமுறை பலத்தாலும் இன்று விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது.

விசத்தன்மையுள்ள மனிதர்களின் விசத்தனங்கள் பெருகுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. விசத்தன்மையற்ற தவளைகள்போன்ற விசத்தன்மையற்ற மனிதர்களும், தங்களின் சுயநல சிந்தனைகளாலும், கோழத்தனங்களிலாலும், பயந்து ஒதுங்கும் போக்காலும்,சமூக் சிந்தனையாளர்களின் வழியை தொடர்ந்து பின்பற்றாததாலும்தான், விசத்தன்மையுள்ள மனிதர்களின் சாதிவெறி கொணடாட்ங்களும், மதவெறி.இனவெறி விழாக்களும், துரோகிகளின் நினைவு நாட்களும் பல்கி பெருகி கேள்வி கேட்பாரின்றி வளர்ந்து நிற்கின்றன.