பயனர்:நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு/மணல்தொட்டி
இந்த கனவு உங்களுக்கு வந்திருக்கா?
கனவுகள் காண்போமா?
கனவு என்றால் என்ன?
➠ பொதுவாக பத்து வயதுக்கு மேலான அனைவரும் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஆறுமுறை சுநுஆ (சுயினை நுலந ஆழஎநஅநவெ) எனப்படும் துரிதமான கண்ணசைவு நேரங்களில் கனவு காண்கிறார்கள்.
➠ இந்த துரிதக் கண்ணசைவு நேரங்களில் நாம் விழித்திருக்கும் நிலையைப் போலவே நமது மூளை இயங்குகிறது. ஆனால் மூளையின் எல்லாப் பகுதிகளும் இந்த நிலையில் இயங்குவதில்லை.
➠ இந்த சுநுஆ (தூங்க ஆரம்பிக்கும் வேளை) முன்னிரவில் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களும் பின்னிரவில் 30லிருந்து 34 நிமிடங்களும் நீடிக்கின்றன. எனவே கனவு கிட்டத்தட்ட அரைமணி நேரம் நீடிக்கலாம் எனத் தெரிகிறது.
➠ துரிதக் கண்ணசைவு இல்லாத, மூளை சாதாரணமாக இயங்கத் துவங்கும் விடியற்காலை நேரங்களிலும் கனவுகள் வருகின்றது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் சாதாரணமாக நாம் 4லிருந்து 6முறை இரவில் கனவு காண்பதாகச் சொல்லப்படுகிறது.
➠ ஆனால் நாம் தூங்கும் நேரங்களில் மட்டும் தான் கனவுகள் வருகின்றன என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. பகலில் சில நேரங்களில் நாம் விழித்திருக்கும் போதுகூட அசந்த நிலையில் நம்மைச் சுற்றி இருப்பதை மறந்திருக்கும்போது கூடப் பகல் கனவுகள் வருகின்றன.
➠ தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்துவிடுகின்றன. சில வேளைகளில் பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், அதுவே சில சமயம் நல்ல கனவு காணும் போது எழும்பவே கூடாது என்று இருக்கும்.
விழுவது போல் கனவு
➠ நீங்கள் எங்கேயோ இருந்து முடிவே இல்லாமல் விழுந்து கொண்டே இருப்பது போல் கனவு காண்பீர்கள். இது பலரால் காணப்படும் ஓர் பொதுவான கனவாகும். உளவியல் ரீதியாக இந்தக் கனவுக்கு அர்த்தம் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி விட்டு, நீங்கள் பாதுகாப்பற்ற, பயந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பது தான். மேலும் நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் (உதாரணத்திற்கு பரீட்சையில்) தோற்றுவிட்டீர்கள் என்றாலும் இப்படியான கனவு வரக்கூடும்.
யாரோ துரத்துவது போல் கனவு
➠ யாராவது உங்களைத் துரத்துவது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை கண்டு ஓடிவிடுகின்றீர்கள் என்கிறது உளவியல் அர்த்தம். நீங்கள் எந்தப் பிரச்சனையை பார்த்து ஓடி விடுகின்றீர்கள் என்பதைப் பொறுத்து, யார் அல்லது எது உங்களைத் துரத்துகின்றது என்பது தெரியவரும்.
-
படவிளக்கம்1
-
படவிளக்கம்2 ===
-
படவிளக்கம்1
-
படவிளக்கம்2