பயனர்:நா.லோகேஸ்/மணல்தொட்டி

   வளரும் கவிஞன் 
     நா.லோகேஸ்
      

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருக்கின்ற சுஜ்ஜல்கரை கிராமத்தை சேர்ந்தவர் இவர்.அருகில் இருக்கின்ற கடம்பூர் மலைப்பகுதியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த இவர்.அங்கு பணியாற்றிய தமிழாசிரியர் நாகராசன் ஐயா உதவியுடன் பத்தாம் வகுப்பு முதலே சிறந்த கவிதைகளை எழுத ஆரம்பித்தார்.மேலும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஈரோடு மாவட்ட அளவில் நடந்த கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமும். பாலின வன்முறை குறித்தான கவிதைப் போட்டியில் முதற் இடத்தையும் பெற்று சத்தியமங்கலம் மலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்தது மட்டுமின்றி. 2020 ஆண்டு பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் வாழ்த்துரையோடு ' மொட்டுக்கள் பூவாசம் ' என்ற கவிதை புத்தகத்தையும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே வெளியிட்டார். கோயமுத்தூர் பேரூர் தமிழ்க் கல்லூரியில் பயிலும் இவர் கோவையில் நடைப்பெற்ற சிறுவாணி இலக்கிய திருவிழாவில் மூன்றாம் இடத்திற்கான பரிசை கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் அவர்களிடம் பெற்றார்.2024 ஆம் ஆண்டில் ஈரோடு வானொலியில் இது நம்ம ஆளு பகுதியில் இவருடைய கவிதைப் பயணம் ஒலிப்பதிவு செய்து புகழ்பெற்றது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் 2024 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கவிதைப்போட்டியில் முதல் இடத்தை பெற்று ‌சிறந்த கவிஞர் கண்மணி ராசா விடம் இருந்து பரிசு பெற்று பெருமை சேர்த்தார் . இராமலிங்கர் பணிமன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று பெருமையாற்றினார். மக்காச்சோளமும் குச்சி கிழங்கு மட்டுமே பயிரிடும் கிராமத்தில் ஒரு இளம் கவிஞர் வந்திருப்பது புகழ் சேர்கிறது.

மேலும் இவருக்கு கடம்பூர் மலைப்பள்ளி ஆசிரியர்கள் வளரும் கவிஞன் என்ற பட்டத்தையும் தந்துள்ளார்கள். மேலும் இவர் சிறுகதைகள் மற்றும் நூல் மதிப்புரை போன்றவற்றில் சிறப்பாக பங்களித்து இருக்கிறார்.