பயனர்:நேரியதூண்டலாளர் சே.அருண்/மணல்தொட்டி
சின்னசுருளி அருவி (chinna suruli falls)
தொகுசின்னசுருளி அருவி என்பது தமிழ்நாட்டின் தேனிமாவட்டத்தில் கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து 15கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இந்த அருவியின் நீர்வரத்தையே குடிநீர் ஆதாரமாக கொண்ட 15 திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
பொருளடக்கம்
- 1. அமைவிடம்
2. பேருந்து வசதி 3. அனுமதி நேரம் 4. ஏற்ற காலம் 5. தங்கும் வசதி 6. மேற்கோள்கள்
அமைவிடம்
தொகுதேனி மாவட்டத்தில் சுருளி அருவி என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது கம்பம் நகரில் இருந்து 8கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெரிய சுருளி எனப்படும் சுருளி அருவியை அனைவரும் அறிவர். மேற்கு தொடர்ச்சி மலையின் வருசநாடு மலைப்பகுதியின் மேகமலை வனப்பகுதியின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது பெரிய சுருளி எனவும், மேகமலை வனப்பகுதியின் கிழக்கு சரிவில் அமைந்துள்ள அருவி சின்ன சுருளி எனவும் அழைக்கபடுகிறது.
பேருந்து வசதி
தொகுதேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வருசநாடு செல்லும் பேருந்தில், கடமலைக்குண்டு எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து வாடகை கார்,ஆட்டோ மூலம் சின்ன சுருளியை சென்றடையலாம்.
அனுமதி நேரம்
தொகுதமிழ்நாடு அரசின் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி பொதுமக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும். அருவியில் குளிப்பதற்கு காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரை அனுமதிக்கப்பட்ட நேரம் ஆகும்.
ஏற்ற காலம்
தொகுபொதுவாக எல்லா பருவகாலத்திலும் அருவியில் நீர் வரத்து இருக்கும் என்றாலும், மேற்குத்தொடர்ச்சி மலையின் பருவமழைக்காலங்களில் நீர் வரத்து அதிகம் இருக்கும். ஜூலை இறுதி முதல் ஜனவரி இறுதி வரை.
தங்கும் வசதி
தொகுசின்ன சுருளி என்பது தேனி மாவட்டமக்கள் மாத்திரம் அறிந்த ஒரு சுற்றுலா தளமாகும். எனவே வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு, அதுவும் அல்லாமல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாதலால் இங்கு தங்குவதற்கான வசதி கிடையாது. சாதாரண தங்கும் விடுதிகள் கடமலைக்குண்டிலும், நட்சதிர தங்கும் விடுதிகள் தேனியிலும் மட்டுமே உண்டு.
மேற்கோள்கள்
தொகுhttps://ta.wikipedia.org/s/8nb https://www.youtube.com/watch?v=MbHAKibEfZ0
பகுப்புகள்
தொகுஅருவி சுற்றுலா, தேனி சுற்றுலா