பயனர்:பரத் முருகன்/மணல்தொட்டி

 கட்டிட அடித்தளம்
   

வணக்கம் நண்பர்களே மனித வாழ்க்கையில் மிகமுக்கியமானதும் அவசியமானதும் நாம் வாழும் வீடு. மனித வாழ்க்கையில் சொந்த வீடு என்பது வாழ்க்கையின் மிகபெரிய லட்சியமாகும் இந்த லட்சியம் நிறைவேற பல போராட்டங்களை சந்திக்கவேண்டியிருக்கும் . மிகவும்கடினமாக முயற்சிசெய்து வெற்றியடைவர் சிலருக்கு கனவாகவே போய்விடுவதும் உண்டு . நமது உழைப்பின் பெரும்பகுதியை செலவிடக்கூடிய நமதுவீடு தரமானதாகவும் உறுதியாகவும் கட்டுவது எப்படி அதுபற்றி காண்போம்

அடித்தளம் கட்டிடத்தில் மிகமுக்கியமானபகுதி அடித்தளம் நமக்கு கால்களின் பலம் எவ்வளவு முக்கியமானதோ அதுபோல் கட்டிடத்தின்அடித்தளத்தில் மிகுந்தகவனம் தேவை அஜாக்கிரதையாகஇருந்ததால் மொத்த உழைப்பும் வீணாகிப்போகும் திறமைமிக்க பொறியாளர்களைகொன்டு வடிவமைக்க வேண்டும் அனுபவம்மிக்க மேஸ்திரி கொத்தனார்கள் தொழிலாளர்கள் கொன்டுகட்டுவது சிறப்பைதரும்

1.நில பரிசோதனை நாம் வீடுகட்டக்கூடிய நிலம் கட்டுமானத்திற்கு உகந்ததா எனசோதனைசெய்வது முதல்கட்டப்பணி வகைகள் அ. குறுமணல் கடற்கறையொட்டியபகுதிகளில் காணப்படும் இவ்வகை நிலங்களில்உறுதியான இறுகிய அமைப்பு 5அடிமுதல்10அடிவரை தோன்டவேண்டியிருக்கும் பூமிக்குமேல்கட்டிடத்தின்உயரம் மற்றும் எத்தனை அடுக்குகள் கட்டவிருக்கிறீர்கள் என்பதை பொறுத்து பூமிக்குகீழ் செல்லும் ஆழம் புட்டிங் எனசொல்லப்படுவதின் அகலம் 'உயரம் தீர்மானிக்கவேண்டும் இந்த பணியை கட்டிடபொறியாளரும் கம்பிவடிவமைப்பு பொறியாளரும் இணைந்து முடிவுசெய்தல் நலம் பயக்கும்

ஆ.கருப்பு களிமண்' சிவப்புகளிமண் இவ்வகைநிலங்கள் தண்ணீரைதேக்கிவைக்கும் குணம் கொண்டது. மேலும்தண்ணீர்இவ்வகைநிலத்தைஉறுதிஇழக்க செய்துவிடும் ஆகவே இந்தவகைநிலங்களில் கட்டிடங்கள்கட்டுவது மிகப்பெரியசவாலாகும் .இந்தஉறுதியற்ற அடுக்குகள்10அடி ஆழம்முதல் 30அடிவரையும் அதற்குமேலும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது எனவே எத்தனைஅடிஆழம்வரை"களி" இருக்கிறதோ தோண்டிநீக்குவதுஅவசியம் .தவறினால்மழை வெள்ளம்கட்டிடத்தை சூழும்போதுகட்டுமானம்முழுவதும்சர்வநாசமாகிவிடும் ஆகவே உறுதியானதளத்தில் கட்டிடஅஸ்திவாரத்தை நிலைகொள்ளசெய்வதுமிகவும் முக்கியமானது