பயனர்:பாவல்/மணல்தொட்டி

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சித்தர்காடு சிற்றூராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் கி. பி. 13ஆம் நூற்றாண்டு கால சிவ தலம் உள்ளது. இந்த சிவதலம் சீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.

சிறப்பு தொகு

13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகளும், அவரது சீடர்களும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஜீவசமாதி ஆகியுள்ளனர். தமிழ் நாட்டில் பல ஜீவசமாதி அமைந்து இருந்தாலும், ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஜீவசமாதி ஆகியுள்ள நிகழ்வு இங்கு மட்டுமே என்பதுதான் இதன் சிறப்பு. இக்கோயில் கருவறையின் சுவற்றில் இது குறித்த கல்வெட்டும், 63 சிவலிங்கமும் வடிக்கப் பட்டுள்ளது.

அமைவிடம் தொகு

மயிலாடுதுறை தொடருந்து சந்திப்பிலிருந்து மேற்கில் சுமார் ஒரு கி. மீ. தொலைவில் இந்த ஜீவசமாதி அமைந்து உள்ளது. இந்த ஜீவசமாதி அமைந்துள்ள இடமே தற்போது சிவதலமாக உள்ளது.

பராமரிப்பு தொகு

இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தருமபுர ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பாவல்/மணல்தொட்டி&oldid=1656605" இலிருந்து மீள்விக்கப்பட்டது