பயனர்:பிரசிஹா/மணல்தொட்டி

...................................................................................................................................மஞ்சம்பட்டி அழகு............................................................................................................................................................ மஞ்சம்பட்டி கிராமம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள ஒரு மலை கிராமம். இங்கு வாழும் மக்கள் மலைவாசி மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.இந்தக் கிராமம் மன்னவனூர்,கீழானவயல்,கும்பூர் ஆகிய ஊர்களூக்கு அப்பால் வெகுதொலைவில் அமைந்து உள்ளது.இந்த கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்.பல கிலோமீட்டருக்கு மரங்கள் பச்சைப்பசேல் என்று போர்வை போர்த்தியது போல் அவ்வளவு அழகாக இருக்க, மலைகளும் சுற்றி சுற்றி அரணாக இருக்க அதன் நடுவே அமைந்துள்ளது இந்தக் கிராமம்.இங்கு பேருந்து வசதியோ, போக்குவரத்து வசதியோ கிடையாது.அவர்கள் ஏதாவது பொருட்கள் வாங்க பல கிலோமீட்டர்களுக்கு நடந்து தான் வரவேண்டும். இங்கு சிறப்பம்சம் என்னவென்றால் மூலிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அது மட்டுமின்றி அபூர்வமான அரிய வகையான மூங்கில் அரிசி கிடைக்கும்.இந்த அரிசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. மேலும் மூங்கில் குருத்தை குழம்பு வைத்து சாப்பிட்டால் உடலில் சர்க்கரை நோய் வர வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.அனைத்து வகையான தேன்களும் கிடைக்கின்றது.