பயனர்:பொன்-கிருபாகரன்/மணல்தொட்டி

தேங்காய் சுடும் பண்டிகை தொகு

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்,சேலம் மாவட்ட பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

தேங்காய்க் கண்களை ஓட்டையிட்டு நீரை வடித்துவிட்டு அதில் லேசாக வறுத்தஎள்,பச்சரிசி,உடைத்த பச்சைப்பயிறு,நாட்டுசர்க்கரை கலந்த கலவையை ஊசிமூலம் குத்தி முக்கால் பங்கு நிரப்பி சிறிதளவு தேங்காயில் இருந்து வடித்த நீரை சேர்க்க வேண்டும். பின்பு அழிஞ்சில் குச்சியை சரியாகச் செதுக்கி தேங்காய்க் கண்ணில் செருகி தேங்கய்,குச்சி ஆகியவற்றுக்கு மஞ்சள் பூசி தேங்காய் சுடப் படவேண்டும்.பிறகு சுட்ட தேங்காயை இறைவனுக்கு படைத்து வணங்குவர்.

மகாபாரதத்தில் பாரத போர் தொடங்கிய நாள் என்பதால் இந்த வழிபாடு ஆரம்பித்தாக ஒரு செவிவழிக் கதையும் அப்பகுதிகளில் உள்ளது.