பயனர்:மஹபூப்கான்/மணல்தொட்டி
HISTORY OF TIRUPPUR KNIT GARMENT INDUSTRY
TIRUPPUR FATHER OF KNITTING INDUSTRIALISTS
Thiru. M.G.GULAM KHADER SAHIB
FOUNDER OF ,M/s BABY KNITTING INDUSTRIES TIRUPPUR, ESTD ; 1935, FIRST KNIT GARMENT FACTORY, IN TIRUPPUR. INDIA.
திருப்பூர் பனியன் தொழில் தந்தை திரு.எம்.ஜி. குலாம்காதர் சாஹிப், பனியன் தொழில் உருவான வரலாறு.
B.மஹபூப்கான்.B.E.,
பனியன் தொழில் தந்தை திரு.M.G. குலாம் காதர் சாஹிப், அவர்களின் மகள் வழிப் பேரன். More informations pleasecontact cell no : 99523 63287, 91501 58326
திருப்பூருக்கு பனியன் தொழில் வந்த வரலாறு. 1911 To 1979
19 ம், நூற்றாண்டின் ஆரம்பத்தில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் கோயமுத்தூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவில் சில கிராமங்கள் உள்ளடக்கிய ஒரு சிறிய ஊர் திருப்பூர்,
திருப்பூரின் மத்தியில் வடக்கு பகுதியில் கரும் புகையை கக்கிக்கொண்டு, ஒடும் நீர் ஆவி எஞ்சின் பொறுத்தப்பட்ட புகை வண்டிகள், மற்றும் புகை வண்டி நிலையம்,
பேரூரிலே புறப்பட்டு திருப்பூரின் நடுப்பகுதியில், ஒடி, முக்கூடலிலே கூடி, காவிரியில் கலந்து, கடலிலே கலக்கும் ஆறு, நொய்யல் ஆறு. இது ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் இரு கரைகளிலும் விவசாயம், செழிப்பாக நடை பெற்றது. இத்தனை அம்சங்களுடன் இருந்த ஊர், நாம் இப்போது பார்க்கும் இந்தியாவின் டாலர் சிட்டி என்று அனைவராலும் அழைக்கப்படும் நமது திருப்பூர் மாநகரம்., அன்று சிறு கிராமம், ஆனால் இன்று தமிழ்நாட்டில் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாவட்ட தலைநகரம், நமது திருப்பூர் மாநகரம்.
ஊரின் முக்கிய தொழில்கள்.
திருப்பூர் என்ற சிறிய ஊரில் முக்கிய தொழிலாக இருந்தது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, ஆக இங்கே வானம் பார்த்த பூமியாக இருந்த காரணத்தால் ஒரளவு நல்ல மழை பெய்தால் அந்த வருடம் பருத்தி,சோளம், சாமை, கம்பு, கேழ்வரகு,நிலகடலை, மற்றும் பயிர் வகைகள் ,முக்கிய விளைச்சலாக இருந்தது.
1930 -ஆம் ஆண்டுகளில். இந்தியா சுதந்திரம் பெற அனைத்து மக்களும் ஒன்று பட்டு ஆங்கிலேயே அரசுக்கு எதிராக புரட்சிகளும், வெள்ளையனே வெளியேறு, போராட்டங்களும்,, நாளோரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாக வலு பெற்று நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த காலங்களில் மின்சாரம் கிடையாது, குடிநீர் குழாய் கிடையாது, சேந்து கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மண்ணெண்ணெய் விளக்குகள் பயன் படுத்தப்பட்டன. அரிசி கிடைக்காது ,அப்போதே அரிசிக்கு லெவி இருந்தது, ஊருக்கு ஒரு LMP படித்த டாக்டர் கிடைப்பதே அரிது. இரு சக்கர வாகனம் கிடையாது, மிதிவண்டி சைக்கிள் மட்டும் பணக்காரர்கள் வசம் இருந்தது, நீர் ஆவி எஞ்சின் பொறுத்தப்பட்ட பேருந்துகள் இயங்கின. சில பெரும் பணக்காரர்கள் பாண்டியாக். கார் மற்றும் மோரிஸ் மைனர் கார்கள் வைத்திருந்தார்கள், அதில் நமது பனியன் தொழில் தந்தை அப்போதே பாண்டியாக், கார் வைத்திருந்தார், பேருந்துகளில் மேற்கூரைக்கு பதிலாக தலைக்கு மேலே, தார்பாய்கள் கட்டப்பட்டிருக்கும். மழை பெய்தால் பஸ்க்குள் மழை தண்ணீர் உள்ளே வரும், . மற்றும் முக்கிய போக்குவரத்து என்றால் மாட்டு வண்டிகளும், மற்றும் குதிரை வண்டிகளும்,கைவண்டிகளும் கை ரிக்க்ஷாவும், திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிக்கும், மின்சாரம் இல்லாத காலம் அகல் விளக்குகளும்,, விறகு அடுப்புகளும்,, மாட்டு வண்டிகளில் கொண்டு வரும் வேலன் மற்றும் வேப்ப மரத்தின் விறகுகள், கத்தையாக கட்டி இரட்டை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வருவார்கள், இதுவும் வரட்டியும், தான் முக்கிய எரிபொருள் என்றால் இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள். G.D. நாயுடு பஸ்கள், R.H.R..ஹோட்டல் ( தற்போது டவுன்ஹால் எதிர்புரம்) அருகில் நின்று கொண்டிக்கும், அழகிய தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு பகுதி காதர் பேட்டை.,
பெற்றோர்.
காதர் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் முகம்மது கவுஸ் காதர்பீபீ, தம்பதிகள், இவர்கள் இஸ்லாமிய சமயத்தைத் சார்ந்தவர்கள்
முகம்மது கவுஸ் சாயபு அவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் திருப்பூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் எழுத்தர் ஆக பணிபுரிந்து வந்தார்.
தம்பதிகளுக்கு ஆண் வரரிசுகள் ஜந்து பெண் வாரிசுகள் இரண்டு. இதில் நமது பனியன் தொழில் தந்தை ஐந்தாவது மகனாகப் 03 -.06 - 1911 ம் தேதி பிறந்தார்.
சிறுவயது முதலே இயந்திரங்கள், மற்றும் அதன் இயக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார் என்று அறிகிறேன். அவர் பள்ளி கல்வி வரை படித்தவர்,
அவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, சரளமாக பேச எழுத தெரியும் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்
திருமணம்
1930- ம் வருடம் பனியன் தொழில் தந்தை திரு M.G.குலாம் காதர், சாஹிப், அவர்கள் மஹபூப் பீபீ, என்பவரை மணந்தார். இவர்களுக்கு G.K.ரஹிமாபேகம், என்னும் பெண் குழந்தை பிறந்தது, இவர் பிறந்த, பின்பு பனியன் தொழில் தந்தை திரு. எம்.ஜி. குலாம் காதர் சாஹிப் அவர்கள் ஆரம்பித்த அனைத்து நிறுவனங்களுக்கும் பேபி என்று பெயர் வைத்தார்.. இவர் முதன்முதலில் திருப்பூர் காதர் பேட்டை கரியகவுண்டர் வீதி பார்க் ரோடு பிரியும் இடத்தில் தற்போது நிலவள வங்கி இருக்கும் கட்டிடத்தில் திருப்பூரின் முதல் பேசாத சினிமா (உமை படம்) திரு. M.G.குலாம் காதர் சகோதர்களால் திரையிடப்பட்டது.பின்பு இந்த சினிமா தியேட்டர் நாகபட்டினம், திருவாரூரில், , பேபி டாக்கீஸ் உருவாக அடித்தளமாக சான்றாக அமைந்தது என்று கூறலாம்.
பேசும் படம் சினிமா மிஷின்.
1932 -ல் சினிமா பேசும் படங்கள் வர ஆரம்பித்தது, எனவே பனியன் தொழில் தந்தை திரு. M.G. குலாம் காதர் சாஹிப் அவர்கள் பேசும் சினிமா புரஜக்டர் (west Rex projector machine ) மிசின்கள் வாங்க 1935 ம் வருடம்,கல்கத்தா நகருக்கு சென்றார்.
பனியன் துணி இயந்திரங்கள் சினிமா ( west Rex projector machine )புரஜக்டர். திருப்பூருக்கு வந்தது.
பனியன் தொழில் தந்தை திரு. குலாம் காதர் சாஹிப் அவர்கள், கல்கத்தா நகருக்கு அருகில் உள்ள கீதாபூருக்கு, சென்று பயணியர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது வியாபார விஷயமாக, வெளியே சென்றார். திரும்பி வரும் வழியில் ஒரு நிறுவனத்தில் பணியாட்கள் பனியன் இயந்திரங்களை கையால் இயக்கிக் கொண்டு இருந்ததை கண்டார். அங்கே அவர் அப்படியே நின்று இயந்திரங்களில் இருந்து துணி உருவாவதைத் பார்த்தார். அவருக்கு நம் ஊரில் உள்ள கைத்தறி நெசவு தொழில் நினைவுக்கு வந்தது. எனவே நாம் இந்த பனியன் இயந்திரங்களை வாங்கிக்கொண்டு திருப்பூர் சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தார். கல்கத்தா நகரில் உள்ள பல டீலர்களிடம் அணுகி மிஷின்கள் வாங்க முயற்சி செய்தார்.பின்பு திருப்பூர் நகருக்கு முதல் முறையாக 1935 ம் வருடம் கல்கத்தாவில் இருந்து சினிமா பேசும் படம் (west Rex )புரஜக்டர் சினிமா மிசின்களையும், நிட்டிங் மிஷின்களை ஒரு சேர திருப்பூர் நகருக்கு முதன் முதலில் கொண்டு வந்து திருப்பூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொழில்புரட்சிக்கு வித்திட்டார்.
திருப்பூர் பனியன் தொழில் தந்தையும் திருப்பூர் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ,திருவாரூர் மற்றும் நாகபட்டினம் (1935To 1960) பேபி டாக்கீஸ் நிறுவனர். ஜனாப். M.G. குலாம் காதர் சாஹிப்.
பனியன் தொழில் தந்தை திரு.M.G.குலாம் காதர் சாஹிப், அவர்களுடைய மகள் திருமதி. G.K.ரஹிமா பேகம். வயது 87 ALIVE in Tirupur.
பேபி நிட்டிங், இண்டஸ்ட்ரீஸ், திருப்பூர்.
1935 -ம் ஆண்டு பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ், திருப்பூர், காதர் பேட்டை பகுதியில் உள்ள கரிய கவுண்டர் வீதியில் திரு. M.G.குலாம் காதர் சாஹிப், அவர்களால் நிறுவப்பட்டது. அந்த காலங்களில் நிட்டிங் மிஷின்கள், இயக்க மின்சார வசதிகள் கிடையாது. மின்மோட்டார் பொருத்தும் வசதிகள் கிடையாது, பனியன் தொழில் தந்தை M.G. குலாம் காதர் சாயபு அவர்கள் மிஷின்களுடனே தனி ஒருவராக நின்று போராட வேண்டியிருந்தது. காரணம் முதல் முயற்சி அந்த சூழ்நிலையில் ஊசிகளே, உதிரிபாகங்களே கிடைக்காது, ரிப்பேர் ஆகிவிட்டால் மெக்கானிசம் தெரியாது, மிசின் ஒட்ட தெரிந்த ஆப்பரேட்டர்கள் கிடையாது அப்போது மனம் தளராமல் தான் மட்டும் ஓயாமல் தனியொரு மனிதனாக கையால் இயக்கப்படும் இயந்திரங்கள் உடன் தினசரி போராட்டம் மனம் தளராமல் முயற்சியை மூலதனமாக்கி ஒரு வழியாக பனியன் இயந்திரங்களை முற்றிலும் இயக்க கற்றுக்கொண்டார். காரணம் நிட்டிங் மிஷினில் நூல் அறுந்து விழுந்து விட்டால் மிஷினில் இருந்து துணி கீழே கழன்று விழுந்து விடும், அந்நாளில் மிஷின்களில், எலக்ட்ரிக் ஸ்டாப் மோஷன் வசதிகள் கிடையாது.மற்றும் ரோல் செட் அமைப்பும் கிடையாது, நூல்மில்லில் இருந்து கட்டு நூலை வாங்கி வந்து அதை பொகினி என்னும் தகர குழாய்யை கைராட்டையில் வைத்து சுற்றி அந்த சுற்றப்பட்ட நூல் கோன்களை, மிஷினில் கோன் ஸ்டேன்டிலே வைத்து மிஷினை கையாலேயே சுற்றினால் மிஷின் மெதுவாக நகர்ந்து நகரந்து துணி பின்னல்களை வெளிவிடும். இப்படி கைகளால் இயக்கப்படும் நிட்டிங் இயந்திரங்களை கொண்டு பனியன் துணி உற்பத்தி செய்தார். உற்பத்தி செய்த துணிகளை சாயம்மேற்றி பலவகையான டிசைன்களில் பனியன்கள் உற்பத்தி செய்தார். இதை கண்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வியந்து பாராட்டினார்கள்.சிந்தித்து பாருங்கள் எவ்வளவு பொறுமை வேண்டும், ஒரு தொழிலை தொடங்கி இதில் மூலதனமிட்டு அதைப்பழகி, அத்தனை இடர்களையும் தாங்கி துவண்டு போகாமல் மீண்டும் தன்னுடைய தொழிற்சாலைக்குள்
சென்று தன்னுடைய முயற்சியை தொடருவார்.
பனியன் தொழில் தந்தை திரு. M.G.குலாம்காதர் அவர்களின் மகள் G.K.ரஹிமாபேகம், அவர்கள் மகன் J.B. லியாகத் அலிகான், @ J.B.L.கான்.அவர்கள்.
2020 ம் ஆண்டு நடைபெற்ற Dream India 2020, நிட்மா விருது முதலாளிகள் சங்கம் சார்பாக M/S. Baby knitting industries, (Estd 1937). TIRUPUR, The father of banian industry, M.G. GULAM KADER family க்கு வழங்கப்பட்டது. திரு.J.B.L.KHAN. பெற்றுக்கொண்டார்.
நிட்மா சங்கம் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமசந்திரன் அவர்களால் M/S. BABY KNITTING INDUSTRIES, THIRU. M.G.GULAM KADER, FAMILY க்கு வழங்கிய கேடயம் நினைவு பரிசு.
இரவு பகலென்று அயராது உழைத்து அதனுடைய மெக்கானிசத்தை ஒர் ஆண்டிற்குள் முற்றிலும் தெரிந்து கொண்டார். பிறகு பனியனுக்கு உருவம் தரவும் பழகிக்கொண்டார்
தானே தன்னிடம் இருந்த ஒரு சிங்கர் ஃபிரண்ட் ஒவர்லாக் தையல் மிஷின் முலம் பனியன்கள் தைத்தும் பழகி கொண்டார், தையல் இயந்திரம் ரீப்பேர் ஆகிவிட்டால் அதை சரிசெய்யும் மெக்கானிசத்தையும் தானே கற்றுக்கொண்டார்.
இன்று உள்ளது போல் அன்றையாநாளில், பேங் வசதிகள் கிடையாது, லோன் கிடைக்காது, STD வசதிகள் கிடையாது, செல் போன்கள் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, டிரங்க்கால் செய்து தான் ஒரு ஊரில் இருந்து மற்ற ஊர்களுக்கு போன் செய்ய முடியும். போன் வசதிகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். .ஃபேஷன்டெக்னாலஜி கிடையாது, கட்டிங் மாஸ்டர் கிடையாது,பிளிச்சிங் ஃபேக்டரி கிடையாது சாயப்பட்டறை கிடையாது. எல்லாமே ஒரு சுயமான முயற்சிதான். முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள், அது பனியன் தொழில் தந்தை விசயத்தில் நன்றாகவே வேலை செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. சிலந்தியின் கூடு எத்தனை முறை சிதிலமடைந்தாலும் அது தன் முயற்சியை நிறுத்திக்கொள்வதில்லை, அது போல பனியன் தொழில் தந்தை, M.G.குலாம்காதர் சாஹிப் அவர்கள் கடைசியில் தொழிலில் வெற்றி பெற்றார்.அது தான் நிலையான வெற்றி.
கையால் இயக்கப்படும் நிட்டிங் மிஷின்.
திருப்பூர் TO திருவாரூர் / நாகபட்டினம் பேபி டாக்கீஸ்.
1937- ம் ஆண்டு திருப்பூர் பனியன் தொழில் தந்தை M.G.குலாம் காதர் சாஹிப் அவர்கள், அவர் தந்தை வழியில் பல காலமாக நாகூர் ஆண்டவர் தர்கா, செல்லும் வழக்கம் உடையவர். இவருக்கு நாகூரில் இருந்த நண்பர்கள் மூலமாக, நாகப்பட்டினத்தில் உள்ள ராபின்சன் ஹால் என்ற பாண்டியன் திரையரங்கம் விற்பனைக்கு வருவதாக தெரிந்து, பாண்டியன் என்ற திரையரங்கத்தை விலைக்கு பேசி வாங்கி அதற்கு பேபி டாக்கீஸ் என்று பெயரிட்டு நடத்தி வந்தார். பின்னர், 1940- களில், திருவாரூரில் ஒரு பேபி டாக்கீஸ்,திரையரங்கம்,ஆரம்பித்தார்.பிற்காலத்தில் அது கருணாநிதி திரையரங்கம் என்று அழைக்கப்பட்டது. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944- ம், வருடம், சாந்தா (அல்லது) பழநியப்பன் என்கிற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார்.( நன்றி, கலைஞர் பவளவிழா, சிறப்பு மலர் பக்கம் 256).
நாகபட்டினம் பேபி டாக்கீஸ் திரையரங்கத்தில் முக்கிய பிரமுகர்கள்
நடிகர்கள் உடன் பனியன் தொழில் தந்தை திரு.எம்.ஜி.குலாம்காதர் சாயபு .வட்டத்தில் இடது புறம்பாக இருப்பவர், வலது புரம் சத்தார் சாகிப்.
நாகபட்டினம் பேபி டாக்கீஸ் பழைய படம்
நாகபட்டினம் பேபி டாக்கீஸ் தற்போது பாண்டியன் டாக்கிஸ்
திருவாருர் பேபி டாக்கீஸ் படங்கள்.
01.10.1956 ம் வருடம் தேவங்புரம் பகுதியில் யூனிட் ll ,பேபி நிட்டிங் கம்பெனி கட்ட திருப்பூர் முனிசிபாலிடியால், வழங்கப்பட்ட கட்டிடம் கட்டஅனுமதி.
நவீன இயந்திரங்கள்
மார்கெட்டிங் உத்தி.
அந்த காலங்களில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,முதல் உடுத்திக் கொள்ளும் ஆடைகள் வரை வாங்க வேண்டும் என்றால் தற்போது உள்ளது போல் நவீன மால்கள் கிடையாது, ஜவுளி கடைகள், மளிகை கடைகள் கிடையாது, எல்லா வகையான பொருட்களையும் வாங்க வேண்டும் என்றால் வார சந்தைகள் கூடும் இடத்தில் மக்கள் பலரும் சென்று கடுகு, சிரகம், புளி,, முதல் ஆடு, மரடுகள், கோழிகள், வரை வாங்க சந்தைகளையே அதிகம் பயன்படுத்தினார்கள், ஆகவே உற்பத்தி செய்த பனியன் ஆடைகளை விற்பனை செய்வதற்காக திருப்பூரை சுற்றியுள்ள பல்லடம், பொள்ளாச்சி,உடுமலை,மங்கலம், மற்றும் பல ஊரில் உள்ள பல சந்தை வியாபாரிகளை அணுகி அந்த சந்தை வியாபாரிகள் பனியன் பேக்டரிக்கே வநது மப்லர்களையும் பனியன்களையும் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ்ல் இருந்து மொத்தமாக வாங்கிச்சென்று சந்தைகளில் விற்பனை செய்வதற்காக, பனியன்களை வாங்கி செல்வார்கள். சந்தைக்கு வரும் நபர்கள் அங்கராக்கு என்று சொல்லப்படும், கதர் துணியில் தைத்த ஆடைகளை அணிந்து வந்தனர். அதைப் பார்த்த வியாபாரிகள் அவர்கள் அணிந்து கொண்டு வந்த அங்கராக்கின் மேல் பனியன்களை அணியச் செய்து பனியன்கள் அணிவித்து வியாபாரம் செய்தனர். பின்னர் படிப்படியாக வியாபாரம் வளர்ச்சி அடைந்து காலப்போக்கில் பக்கத்து ஊர்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வியாபார விசாரணை கடிதங்கள் மேற்கொண்டனர்.
மும்பையில் இருந்து பனியன் கொள்முதல் செய்ய வந்த வர்த்தக கடிதங்கள்.
பனியன் தொழில் தந்தை M.G.குலாம் காதர் சாஹிப், அவருடைய பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ், ( காதர் பேட்டை, ) முன்பு கம்பெனியை எதிர்த்து 08.09.1949 - ல் நடைபெற்ற திருப்பூரின் முதல் தொழிலாளர் வேலை நிறுத்த போரட்டம் நடைபெற்றது. . போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர் பிற்காலத்தில் பெரிய முதலாளி ஆனார். பிறகு முதலாளிகள் சங்கம் நிறுவினார்.
இடம் பெற்ற வாசகம்
காட்டிக்கொடுக்கும் துரோகிகளே எச்சரிக்கை செய்கிறோம்.
பேபி நிட்டிங் குலாம் காதரே உஷார். !!!.
ஆஷர், மில் முதலாளியே உடனே மில்லை திற,!!!.
Photo by. J.R.mahadev Bros, photo specialist, TIRUPUR. 08.09.1949.
கோயமுத்தூர் மாவட்டம் ,திருப்பூரில் விளையக்கூடிய பருத்தி, மிக உயர்ந்த தரமாக இருந்தது. எனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இங்கு விளையக்கூடிய பருத்தியை திருப்பூரில் இருந்த கீர்ணி ஜின்னிங், ஹார்வீ ஜின்னிங் மற்றும் கோயமுத்தூர்ரை சுற்றி இருந்த ஜின்னிங் ஃபேக்டரிகளில், பருத்தியை உடைத்து பஞ்சு தனியாகவும், கொட்டை தனியாகவும் பிரித்து ஜின்னிங் , செய்து இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகருக்கு கப்பல்களில் கொண்டு சென்றனர். அந்த காலத்தில் மக்கள் கைராட்டைகளிலும், அம்பர் ராட்டைகளிலும், நூல் நூற்றனர். திருப்பூரில் பின்னி மற்றும் ஆஷர், என்ற நூல் மில் இருந்தது. பின்பு எஸ் ஆர். சி மில், தனலட்சுமி மில் ஆரம்பிக்கப்பட்டது. பஞ்சு நூலாகமாற்றி வந்தது.இது கைத்தறி நெசவு தொழிலுக்கு ஏற்றதாக இருந்தது. இந்த நூலையே நிட்டிங் மிஷின்களில் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த காலங்களில் தற்போது உள்ளது போல் நவீன ஸ்பின்னிங் மில்கள் கிடையாது. எப்படியோ சுயமாகவே பழகிய பின் தன் குடோனில் அருகிலேயே பெரிய தொட்டியில் கப்பி போன்ற சேந்து, அமைப்பை ஏற்படுத்தி பனியன் துணி வெந்நீரிலே போட்டு அந்த்துணியை பிளிச்சிங் பவுடரை சேர்த்து கலந்து சலவை செய்யப் பழகிக் கொண்டார். பின்னர் கைத்தறி துணியில் பயன்படுத்தப்படும், சாயத்தை பயன்படுத்தி துணிகளுக்கு சாயம் போடும் வித்தையையும் பழகிக்கொண்டார். பின்னர் சாதா கேலன்டரிங் மிசின்கள் முறையாக துணிகளை கேலன்டரிங் செய்தார்.
அந்த கால கட்டத்தில் சுதந்திரப் போராட்டமும், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களும் நடைபெற்றன. புதியதொரு தொழிலின் துவக்கத்தில், இருந்த திரு. M.G. குலாம் காதர் அவர்கள், தொழிலில் ஏற்பட்ட தொய்வைக் கண்டு துவண்டு போய் மனம் வெறுத்து போன் காலங்களில் அவர் மனைவி மஹபூப் பீபீ, ஊக்கம் அளித்து வந்தார்கள்.
.
மூலதனப் பற்றாக்குறை.
1940 - ம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம், உலகமே தூய காற்றை சுவாசிக்க காத்திருந்த நேரம்.தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தனது உடன்பிறந்த சகோதரர், திரு. எம்.ஜி. அப்துல் சத்தார், சாஹிப் அவர்களை பங்குதாரர்களாக பேபி நிட்டிங், இண்டஸ்ட்ரீஸ்ல், சேர்த்துக்கொண்டார்.
தன்னுடைய கடின உழைப்பு, முயற்சியால், முழுமூச்சாக தொழிலை இரவு பகல் பாராது, 1940- களிலேயே சொந்தமாக சாயப்பட்டறை, மற்றும் சலவை பட்டறை, என்று குமார் நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் அந்த நாட்களில் ஒரு காம்போ சைட் யூனிட்டை உருவாக்கினார்.
பிற்காலத்தில் குமார் நகர் இடத்தை பள்ளி கூடம் கட்ட திருப்பூர் நகராட்சிக்கு கொடுத்தார்.
கப்பல் ரசீது Bill of Loading
1940- களிலே மீண்டும் கல்கத்தா சென்று மேலும் பல இயந்திரங்கள் வாங்கி வந்தார். தொழில் ரீதியாகவும் வர்த்தக ரீதியாக, பம்பாய், கல்கத்தா, பூனா, கேரளா என்று பல நகரங்களில் தன்னுடைய வர்த்தகத்தை பனியன் தொழில் தந்தை அவர்கள் விரிவுபடுத்தினார். 1940- களில், சுதேசி இயக்கம், சுதந்திர போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், பிரிட்டிஷ்காரர்களின் நூல்மில்கள்தான் பெரிய மில்கள் அது சமயம் வெள்ளையர்கள்.
1945 - ம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது, உலக சமாதானம் திரும்பிக்கொண்டிருந்து. பிரிட்டிஷார் உலகத்தில் பல நாடுகளை திரும்ப சுதந்திர நாடாக கொடுக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ்காரர்களின், நூல் மில்கள் தான் பெரிய மில்கள்,அது,சமயம்,வெள்ளையர்கள்,இந்தியாவை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அது சமயம் நூலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்கும் ஒரு கட்டுப்பாட்டு வந்தது, அது தான் கோட்டா சிஸ்டம். நூலுக்கும் கோட்டாவா, என்று ஆச்சரியமாக உள்ளதா ?, ஆம், அன்றைக்கே மிஷின்கள், சொந்தமாக வைத்திருந்தால் மட்டுமே கோட்டா மூலம் நூலை பெற முடியும். அந்த காலசூழ்நிலையில், 1945- ம் ஆண்டு இலங்கையில் இருந்தும், எரித்திரியா நாட்டில் இருந்தும் பேபி நிட்டிங்கிற்கு ஆர்டர்கள் வந்து குவிந்தன.
செங்கடல் பகுதியில் உள்ள எரித்திரியா நாட்டில் அல்மோரா நகரில் உள்ள நிஜாமுதீன் முல்லா AIMG, Export and Import, கம்பெனி முறையாக அன்றைய டெக்ஸ்புரேசில், முலமாக பேபி நிட்டிங் கம்பெனிக்கு 1961பிப்ராவரி 2 ம் தேதி, வர்த்தக விசாரணை கடிதம். வந்தது.
தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் திருப்பூரிலிருந்து முதன் முதலாக பனியன் ஏற்றுமதி செய்த நிறுவனமும் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. 1961 ம் வருடம் பிப்ரவரி மாதம் 2- ம் தேதி செங்கடல் பகுதியில் உள்ள எரித்திரியா ஸ்ல நாட்டில் அல்மோரா நகரில் உள்ள நிஜாமுதீன் முல்லா AIMG எக்ஸ்போர்ட் ஆண்டு இம்போர்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள டெக்ஸ்புரோசில் முலமாக, முறையாக விசாரித்து இந்தியாவில் பனியன்கள் வாங்க சிறந்த நிறுவனம் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ்ல் என்று சான்று அளித்ததாக மேற்கண்ட இறக்குமதி நிறுவனம் பேபி நிட்டிங் கம்பெனிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது.1946- 47-ம் ஆண்டுகளில் பேபி நிட்டிங் தொழிலாளர்களின் எண்ணிக்கை 400 ஐ தாண்டி இருந்தது. 1947- ல், அறுபது நிட்டிங் மிஷின்கள் வைத்து திறம்பட தொழிலை வளர்க்க M.G.குலாம் காதர் சாஹிப் அவர்கள் தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள்.
ஒரு புறம் சுதந்திர போராட்டம், மறுபுறம் தொழிலில் போராட்டம், தொழில் முன்னேற்றம் பாதிப்பு இப்படி பல இன்னல்களுக்கு இடையே இந்த பனியன் தொழிலை வளர்க்க அரும்பாடுபட்டவர். பனியன் தொழில் தந்தை திரு.எம்.ஜி.குலாம் காதர் அவர்கள். நடந்த சம்பவங்களையும் தொழில் இடர்பாடுகளையும். தனி ஒரு மனிதனாக நின்று தொழில் இடர்களையெல்லாம் வென்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நினைத்துப்பார்த்தால் கண்கள் கசிகிறது.
1946- ல், நாட்டிலே போராட்டம் ,வீட்டிலே போராட்டம், என்று போராடி,போராடி, சோர்ந்து விட்ட போதும் இந்த தொழிலை விட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
1950 களிலே பனியன் தொழில் வெளி உலகிற்கு அதாவது திருப்பூர் வாழ் மக்கள் பலரும் பனியன் தொழில் செய்ய ஆசைப்பட்டார்கள். தன்னிடம் வேலை செய்த தொழிலாளி முதல் நண்பர்கள் உறவினர்கள் என்று பலருக்கும் தொழில் ஆரம்பிக்க ஆலோசனைகள் வழங்கியும், பனியன் இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து பனியன் தொழில் செய்வதற்கு ஊக்குவித்து உதவிகள் பலவும் செய்து வந்தார். , பனியன் தொழில் பலமுறை வளர்ந்தும் தேய்ந்தும், தோல்வி மேல் தோல்வியும், வெற்றி மேல், வெற்றியும் தாங்கி பனியன் தொழிலுக்கு தன் விடா முயற்சியால் ஊக்கம் அளித்து வந்தார் பனியன் தொழில் தந்தை எம்.ஜி.குலாம்காதர் சாஹிப் என்றால் அது மிகையாகாது.
காதர் பேட்டை பள்ளிவாசலுக்கு இடம் அளித்தது
பனியன் தொழில் தந்தை திரு.M.G.குலாம்காதர் சாஹிப், அவருடைய தந்தையார் முகம்மது கவுஸ சாஹிப் அவர்கள் காதர் பேட்டை பகுதியில் சிறிய பள்ளிவாசல் துவங்கி, பலர் வந்து தொழுது செல்லும் வகையில் ஏற்படுத்தினார். பிறகு முகம்மது கவுஸ் சாயபு அவர்கள் காதர் பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லியாக பல காலம் இருந்து வந்தார். தற்போது காதர் பேட்டை அன்னபூரண சந்து பகுதியில் முகம்மது கவுஸ் சாஹிப் வீதி உள்ளது. தன் தந்தைக்கு பிறகு திரு. M.G. குலாம் காதர் சாஹிப் அவர்கள் காதர் பேட்டை பள்ளிவாசல் தலைவராக (முத்தவல்லியாக ) இருந்து வந்தார். அந்த சமயத்தில், 1950 -ஆம் ஆண்டு பனியன் தொழில் தந்தை திரு. M.G. குலாம் காதர் சாஹிப் அவர்கள், தனக்கு கிரைம் வகையில் பாத்தியப்பட்ட காதர் பேட்டை நஞ்சப்பா பள்ளி எதிர்புறம், உள்ள ( தோராயமாக) 20 சென்ட் இடத்தை பள்ளிவாசலுக்கு கட்டிடம் கட்ட இறைவன் பெயரில் வஃக்பு செய்து கொடுத்தார். ( தற்போது பள்ளிவாசல் காம்பிளக்க்ஸ் A.S.J.M கட்டியுள்ளனர், ( தற்போதய விலை 25 கோடி ருபாய் ) . பின்பு பல காலம் காதர் பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லியாக இருந்து கடமையாற்றினார்.
ஏழைகள் மற்றும் பசித்தவருக்கு உணவு அளித்தவர்
ஏழைகள் மற்றும் செல்வந்தர்கள் என்று பாராமல், பசி என்று வருபவருக்கு உணவு அளித்து உதவி பல செய்து வந்தார்.
குலாம் காதர் கார்டன் பள்ளிவாசல்
1963- ம் வருடம் திருப்பூர். தாலுக்கா வேலம்பாளயம் கிராமத்தில் சாமுண்டி புரம் தெற்கில் விவசாய நிலம் வாங்கி தன் வாழ்நாள் முழுவதும் விவசாயமும் செய்து வந்தார், பனியன் தொழில் தந்தை திரு.M.G. குலாம் காதர் சாஹிப் அவர்கள் 30.3.1979 ம் வருடம் காலம் சென்ற பிறகு தன்னுடைய வாரிசுகள் அனைவரும் சேர்ந்து பாகப்பிரிவினை செய்து கொண்டனர். குலாம் காதர் கார்டன் என்று பெயர் வைத்தார்கள். பாகப்பிரிவினை செய்து கொண்டதில் பள்ளிவாசல் கட்டிடம் கட்ட 10 சென்ட் இடத்தை அளித்தார்கள். அதில் அனைவரும் சேர்ந்து 1992 ம் வருடம் மங்களுர் டைல்ஸ் வேய்யப்பட்ட ஒரு அழகிய பள்ளிவாசல் கட்டினார்கள். இதற்கு மஸ்ஜித் தே ரஹமத் , ( குலாம் காதர் கார்டன் பள்ளிவாசல்) என்று பெயர் சூட்டினார்கள்.
1957-58 ம் ஆண்டுகளில் பேபி நிட்டிங்கில் வேலை செய்த தொழிலாளர்களும் சிறு முதலீட்டில் தொழில் துவங்க முன் வந்தபோது, முதலாளி தொழிலாளி என்று பாகுபடுத்தி பார்க்காமல் தொழில் துவங்குவதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து ஊக்கம் அளித்தார்.பிற்காலங்களில் தொழிலாளர்களாக இருந்தவர்கள், பலர் பெரிய முதலாளிகளாக
பனியன் தொழிலில் சாகசம் புரிந்தனர்.
1960 ல், பனியன் தொழிலில் ஒரு பிரிவினையை சந்தித்த பனியன் தொழில் தந்தை திரு. M.G. குலாம் காதர் சாஹிப் அவர்கள், மீண்டும் தனியாக தொழில் பயணத்தை தொடர்ந்து பயணமானார்கள். 1960-ல், லூதியானா சென்று கால்சி மிஷினரி, ஒர்க்ஸ் தயாரித்த மிசின்களை திருப்பூருக்கு வாங்கி வந்தார். அந்த சமயத்தில் , திருப்பூரில் சுமார் 350 நிறுவனங்கள் இயங்கின. பனியன் தொழில் தந்தை எம்.ஜி.குலாம்காதர் சாஹிப் அவர்கள் தொழில் நிறுவனங்களுக்கு எங்கு சென்றாலும் மாபெரும் மரியாதை கிடைத்தது.தொழில் ஆசான் என்று மக்களால் புகழப்பட்டார்.
பனியன் தொழில் தந்தை திரு. எம்.ஜி. குலாம் காதர் சாஹிப் அவர்கள் 1935 - ல் போட்ட விதை இன்று பத்து லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர்.
பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை நிகரானவர்கள் என்று திருப்பூர் பனியன் தொழிலில் சாதிக்கும் சாதனை பெண்கள்.
பனியன் தொழில் தந்தை எம்.ஜி.குலாம்காதர் சாஹிப் அவர்கள், அன்றே சொன்னது போல திருப்பூர் ஒரு நாள் உலக வரைபடத்தில் மாபெரும் தொழில் நகரம் என்ற இடத்தை பிடிக்க வெகு நாட்கள் இல்லையென்று சொன்னார் அவர் கூறிய வார்த்தைகள் இன்று உண்மையாகி விட்டது. அன்று அவர் போட்ட முதல் விதை, இன்று நம் திருப்பூர் நகரம் பனியன் தொழில் முலம் நம் இந்திய நாட்டிற்கு முப்பத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வாயிலாக அன்னிய செலாவனி பெற்று தருகிறது. பத்து லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். இன்று உலக நாடுகள் எல்லாம் தங்கள் ஆடை தேவைக்காக முதலில் தேர்வு செய்யும் நகரமாக திருப்பூர் உள்ளது. பனியன் தொழில் தந்தை எம்.ஜி. குலாம் காதர் சாஹிப் இன்று நம்மோடு இல்லை, என்றாலும் அவர் நமக்கு விட்டு சென்ற தொழில் இன்றும் நம் உடன் அனைவரையும் ஜாதி மத வேறுபாடின்றி வாழவைத்துக்கொண்டு இருக்கிறது .நாளையும் நம் அனைவருடன் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
பனியன் தொழில் தந்தையின் பேரன்கள்.
பனியன் தொழில் தந்தை திரு.M.G.குலாம் காதர் சாஹிப் அவர்கள் தனது தொழில் வாரிசாக தன் மகள் வழிப் பேரன் திரு. J.B.L.KHAN. என்கிற (B.லியாகத்அலிகான்) அவர்களுக்கு தன் தொழில் அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார் . பின்னர் 1979 ம் வருடம் தன் பாட்டனார் இறந்த பிறகு திரு. J.B.L.KHAN, @ ( ( (B.லியாகத் அலிகான்) அவர்கள் தன்னுடைய பாட்டனார் காட்டிய வழியில் 1980 ம் வருடம் டில்லி, லூதியானா சென்று மேலும் பல பனியன் இயந்திரங்கள் வாங்கி வந்தார். பின்னர் லூதியான S.T..M. நிட்டிங் மிஷின் ஒர்க்ஸ் மற்றும் சிங் மிஷினரி ஒர்க்ஸ் -ன் டீலராக பணியாற்றி வந்தார், பின்னர் 1994 ம் வருடம் இங்கிலாந்து சென்று கேம்பர், மேயர், Bentley, mellor Bromley, , Terrot, மிஷின்களை இறக்குமதி செய்தார். இன்றும் தன் பாட்டனார் காட்டிய வழியில் பல பேர்களுக்கு மிஷின்களை வாங்க ஆலோசனை வழங்கி பலர் தொழில் துவங்க இன்றளவு தன் பாட்டனார் பனியன் தொழில் தந்தை திரு.. எம்.ஜி. குலாம் காதர் சாஹிப் அவர்கள் விட்டு சென்ற பணியை செவ்வனே, சேவையாற்றி வருகிறார்.
பனியன் தொழில் தந்தை திரு. எம் ஜி. குலாம் காதர் சாஹிப் அவர்களின் பேரன் JB.லியாகத் அலிகான். என்கிற J.B.L.KHAN. J.B. sales corporation, TIRUPUR.
பனியன் தொழில் தந்தை மறைவு
பனியன் தொழில் தந்தை எம்.ஜி. குலாம் காதர் சாஹிப் அவர்கள் குழந்தை பருவம் முதல் காதர் பேட்டையில் வளர்ந்தார். பின்பு அங்கேயே பனியன் கம்பெனியை நிறுவினார், பின்பு அவர்கள் தன் கடைசி காலமான 30.3.1979ம் தேதி வரை வாழ்ந்து மறைந்தார். அவர் இன்றும் நம்மோடு தொழில்வாயிலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.பனியன் தொழில் தந்தை திரு.M.G.குலாம்காதர் சாஹிப் அவருடைய மகள் G.K. ரஹிமாபேகம், வயது 87, இன்றளவும் நலமாக திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பனியன் தொழில் தந்தை திரு.M.G. குலாம் காதர் சாஹிப் பெயரை குமார் நகர் பள்ளிக்கு அரசு சூட்ட வேண்டும். அவர் வாழ்ந்த காதர் பேட்டையில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் . இன்று நம் நாடு ஒரு லட்சம் கோடிக்கு அன்னிய செலவனி ஈட்ட 1935 - ம் ஆண்டுகளிலேயே ஏற்றுமதிக்கு வித்திட்ட மாமனிதர் திருப்பூர் பனியன் தொழில் தந்தை அவர்களுக்கு உயரிய விருது அளிக்க வேண்டும் என்று அனைத்து பனியன் தொழில் சார்ந்த சங்கங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கோரிக்கை வைக்க வேண்டும். என்று நான் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் என்ற வகையில் கேட்டுக்கொள்கிறேன்.