பயனர்:முனைவர் பி கி சிவராமன்/மணல்தொட்டி

வள்ளலாரின் மகாமந்திரத்தின் விளக்கம்

தொகு

சிவாநம, நமச்சிவாய, சரவணபவ என்னும் மந்திரங்களை அவை உயிர் ஆற்றல் பெற்று விளக்க. இம்மந்திரங்களுடன் ஓங்காரத்தையும் சேர்த்து "ஓம் நமசிவாய " "ஓம் சிவாய நம" "ஓம் சரவணபவ" என உச்சரிக்க வேண்டும் உடலை உயிர் இயக்குவது போல இம்மந்திரங்களுக்கு ஓங்காரம் உயிராக இருக்குறது. ஆனால் வள்ளலாரின் மகாமந்திரத்திரக்குள் ஓங்காரம் உள்ளீடாக ஏழு இடங்களில் இயல்பாக அமைந்துள்ளது. இதனால் ஓங்காரத்தைச் சேர்த்து உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது எவ்வாறெனில் ஓங்காரம் என்பது அ + உ + ம் + என்று மூன்று எழுத்துக்கள் சேர்ந்தது. மகாமந்திரத்தின் அருட்பெரும் ஜோதியில் + ர் + + ட் பெரும் ஐ + + தி என அ + உ + ம் ஓர் ஓங்காரமும், ஜோதியில் (ஜ் + ஒ) ஓர் ஓங்காரமும் ஆக இரண்டு ஓங்காரங்கள் உள்ளன. மகாமந்திரத்தில் உள்ள மூன்று அருட்பெருஞ்ஜோதியில் 3 பெருக்கல் 2 = (6) ஆறு ஓங்காரங்கள் உள்ளன. தனிப்பெரும் கருணையில் த + ரு + ம் என ஓர் ஓங்காரமும் உள்ளது. இவ்வாறு ஏழு ஓங்காரம் உடைய வள்ளலார் மந்திரம் ஓம் என்ற தனிப் பிரணவமின்றி இயங்கும் தன்மை உடையதால், இது மகாமந்திரம் என அழைக்கப்படுகிறது.

மகாமந்திரத்தின் விளக்கம் :

தொகு

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிபெருங்கருணை அருட்ப


விளக்கம்: 1

முதல் அருட்பெருஞ்ஜோதி  : உடலொலி

இரண்டாம் அருட்பெருஞ்ஜோதி  : உள்ள ஒளி

மூன்றாம் தனிப்பெருங்கருணை  : அருள் ஒளி

நான்காவது அருட்பெருஞ்ஜோதி 1 + 2 + 3  : இறை ஒளியாம் ஆன்மா ஒளியை காட்டும்


விளக்கம்: 2

முதல் அருட்பெருஞ்ஜோதி  : அண்ட ஒளி

இரண்டாம் அருட்பெருஞ்ஜோதி  : பிண்ட ஒளி

மூன்றாவது தனிப்பெருங்கருணை  : கருணை ஒளிச்

செயலால் மனிதன்

நான்காவது அருட்பெருஞ்ஜோதி  : இறை ஒளியை

அடைகிறான்


விளக்கம்: 3

முதல் அருட்பெருஞ்ஜோதி  : புருவ அனுபவம்

இரண்டாம் அருட்பெருஞ்ஜோதி  : உயிர் இரக்க

அனுபவம்

மூன்றாம் தனிப்பெருங்கருணை  : தொண்டு அனுபவம்

(கருணையால்)

நான்காம் அருட்பெருஞ்ஜோதி  : இறைநிலை அனுபவம்


விளக்கம்: 4

முதல் அருட்பெருஞ்ஜோதி  : சுத்த தேகம்

இரண்டாம் அருட்பெருஞ்ஜோதி  : பிரணவதேகம்

மூன்றாம் தனிப்பெருங்கருணை  : ஞான தேகம்

நான்காம் அருட்பெருஞ்ஜோதி  : முததேக சித்தி பெற்று

இறைமையாதல்


விளக்கம்: 5

அருட்பெருஞ்ஜோதி  : அருட்பெருஞ்ஜோதி

ஆண்டவர் அருளால்

இரண்டாம் அருட்பெருஞ்ஜோதி  : இறைமையாகிய மனிதன்

மூன்றாம் தனிபெருங்கருணை  : உயர்ந்த தயவு நெறியால்

நான்காம் அருட்பெருஞ்ஜோதி  : மரணமில்லா பெருவாழ்வு

பெற்று வள்ளலார் போல்

தெய்வமாகின்றான்.