பயனர்:முற்றுப்புள்ளியா...?/மணல்தொட்டி

படிமம்:Muttrupulliyaa.. (11).jpg
'
இயக்கம்ஷெரீன் சேவியர்
தயாரிப்புசமூக சிற்பிகள்
திரைக்கதைஷெரீன் சேவியர்
இசைசுரேன் விஹாஸ்
நடிப்புஅன்னபூரணி, ஹரிஸ் மூசா, சாம்பவி மதன், இஃபாத் பாத்திமா, அஜித், ஷாலினி, அஃப்ரின் கபீர்
ஒளிப்பதிவுரவிவர்மன் நீலமேகம்
படத்தொகுப்புபீ. லெனின்
ஓட்டம்105.48
நாடுஇலங்கை, இந்தியா
மொழிதமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம்
ஆக்கச்செலவு250,000 அமெரிக்க டொலர்கள்

இலங்கையில் நடைபெற்று முடிந்த போரில் தப்பிப்பிழைத்த தமிழர்களுக்கு போர் முடிந்ததன் பின்னதாக அங்கு என்ன நடக்கின்றது என்பதை அங்கிருந்தே சொல்கின்ற முதலாவது திரைப்படைப்பு இதுவாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இழப்புக்களின் வலி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள், பயம் ஆகியவற்றிற்கிடையில், இறுதிப்போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யபப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்ட கணவரை தனது மூன்று பிள்ளைகளுடன் தேடும் முன்னாள் பெண் போராளி; தழிர்களின் கௌரவம் மற்றும் மண்ணுக்காக பாடுபடும் வரலாற்றியலாளர்; சூழல் பாதுகாவலரான இளம் இந்திய ஊடகவியலாளர் ஆகியோரின் அன்றாட வாழ்வுக்கான சிரமங்களும், போராட்டமும் இத்திரைப்படத்தில் யதார்த்தமாக சித்தரித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கதையினை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இயக்குனர் ஒருவரால் இயக்கப்பட்டுள்ளது.

திரைக்கதையில் வருகின்ற சம்பவங்கள் நடைபெற்ற இடங்கள் தத்ரூபமாக மீள உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதோடு, போரின் போது நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் இணைத்து படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பித்தக்க விடயமாகும். மேலும், இத்திரைப்படத்திற்கேயென பிரத்தியேகமாக பாடலாக்கப்பட்டுள்ள உயிரோட்டமுள்ள தமிழ் பாடல்களும் இடையிடையே உள்ளன.

இத்திரைப்படக்குழுவில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டதனால் தமது அடையாளங்களை மறைத்து படத்தின் சில காட்சிகளை இலங்கையில் மிகவும் இரகசியமாக படமாக்கியுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட இத்திரைப்படம் இலங்கையின் வடக்கே 'யாழ்ப்பாணம் திரப்பட விழா'வில் திரையிடப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து தற்போது முதன்முறையாக ஐரோப்பாவில் திரைக்கு வருகின்றது. இது ஒரு நாள் மட்டும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

'தமிழர்களின் கௌரவத்தினை நிலைநாட்ட பாடுபடுபவர்களின் அன்றாட போராட்டம் மற்றும் சமாதானம் ஒரு மாயயையாக உள்ள நிலையில் போரின் வடுக்களை தமக்குள் சுமந்தபடி நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களின் துயரம் ஆகியவற்றினை பிரதிபலிப்பதே இத்திரைப்படமாகும்' என்கின்றார் இயக்குனர் செறீன் சேவியர்.

வடமாகாண முதலமைச்சர் மதிப்பிற்குரிய முன்னாள் நீதியரசர் திரு. சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 'நான் இந்த திரைப்படத்தை பார்வையிட்டதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இது மிகவும் யதார்த்தபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

இந்தியாவில் சான்றிதழ்

முற்றுப்புள்ளியா...? திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவானது, கிட்டத்தட்ட ஓராண்டுக்காலம் வரையான தமது நெடிய காத்திருப்பின் பின்னதாக 2016 மே 06 அன்று திரைப்படத்தினை வெளியிடுவதற்கான தணிக்கைச் சான்றிதழை பெற்றுள்ளது..

இத்திரைப்படத்தின் படப்படிப்பு பணியானது 2014 ஜுலை முதல் ஒக்டோபர் வரை தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்படடு, அதன் சில காட்சிகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் படமாக்கப்பட்ட நிலையில் நிறைவுக்கு வந்திருந்தது. படத்தின் பின்தயாரிப்பு வேலைகள் 2015 யூலை மாதத்துடன் முடிவடைந்திருந்தன. தயாரிப்பாளர் டீ.எஸ்.சுப்ரமணியன் படத்திற்கான தணிக்கைச் சபை (CBFC) சான்றிதழுக்காக 2015 ஆகஸ்ட் 12ம் திகதி இந்திய தணிக்கைச் சபையின் சென்னைக் கிளையில் விண்ணப்பித்தார். தணிக்கைச் சபையின் ஆய்வுக் குழு திரைப்படத்தை 2015 ஆகஸ்ட் 19ம் திகதி திரையிட்டுப் பார்த்ததன் பின்னதாக சானறிதழ் வழங்குவது பற்றிய முடிவொன்றை எடுக்காமல் திரைப்பட சட்டமூலத்தின் (சான்றிதழ் வழங்கல்) விதி 24 (1) இன் கீழ் இத்திரைப்படத்தை தணிக்கைச்சபையின் திருத்தியமைக்கும் குழுவின் பரிந்துரைக்காக அனுப்பி வைத்தது.

தணிக்கைச்சபையின் திருத்தியமைக்கும் குழுவினர், படத்தை 2015 ஆகஸ்ட் 31ம் திகதியன்று பார்வையிட்டு சில முடிவுகளை எடுத்திருந்தனர். ஆனால் துரதிஸ்டவசமாக படக்குழுவினரை பெரும் சிரமத்திற்கும் மனவுலைச்சலுக்கும் உள்ளாக்குவதாகவே அம்முடிவுகள் அமைந்திருந்தன.

தனது கருத்துத்தெரிவிப்பில் தணிக்கைச்சபையின் திருத்தியமைக்கும் குழு இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: "போர் நிறைவுற்றதன் பின்னதாக இலங்கை இராணுவம் தமிழ் மக்களை அடக்குவதை இத்திரைப்படம் காட்சிப்படுத்துகின்றது. இதன் மூலம் சட்ட விதி (xvi), 2(xii) கீழ் இது நமது அயல்நாட்டுடன் நமக்குள்ள நல்லுறவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இத்திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயைக்கத்தை குறிப்பிடுகின்றது. அத்துடன் தமிழ் மக்களின் ஒருதலைப்பட்சமான கருத்தியலையே வெளிப்படுத்திக்காட்டுவதோடு (xii), 2(xvi), 2(xviii) (3(i) உடன் சேர்த்து வாசிக்கவும்) சட்டங்களையும் மீறுவதுமாகவுமுள்ளது"

அதனைத்தொடர்ந்து, திரைப்பட சட்டமூலத்தின் விதி 5ன் கீழ் திரைப்பட சான்றிதழ் வழங்கல் மேன்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு (FCAT) தயாரிப்பாளர் சுப்ரமணியன் 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்திருந்தார். அதன்பயனாக படத்தை மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் திரு. எஸ்.கே.மஹாஜன், செல்வி. பீனா குப்தா மற்றும் திரு. சேகர் ஐயர் ஆகியோர் பார்வையட்டு, 2016 பெப்ரவரி 1ம் திகதி தயாரிப்பாளருக்கு திரைப்படத்திலான சில மாற்றங்களை பரிந்துரைத்திருந்தனர். அம்மாற்றங்களை படக்குழுவினர் மேற்கொண்டதன் பின் படத்தை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதித்து தணிக்கைச் சான்றிதழை வழங்குமாறு தணிக்கைச் சபைக்கு அறிவுரையும் வழங்கியிருந்தனர்.

தயாரிப்பாளருக்காக சட்டதரணி திரு. சத்யஜித் சர்ணா மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வாதிட்டதுடன் கீழ் காணும் கருத்துக்களை அங்கு முன்வைத்திருந்தார்:

திருத்தியமைக்கும் குழு, எந்த காரணத்தையும் முன்வைக்காமல் சான்றிதழ் வழங்க மறுத்ததுடன், திரைப்பட சட்டமூலத்தின் வழிநடத்தல்களுடன் தயாரிப்பாளர் இசைவாக நடக்கவில்லை என நீண்ட கூற்றொன்றை வெளியிட்டுடிருந்தது.

மேலும், தணிக்கைச் சபையின் பரிந்துரைகளை தனியாக வாசிக்க முடியாது என்றும், அதை இந்தியாவின் அரசியல் சாசனத்தின் பிரிவு 19 உடன் சேர்த்தே வாசிக்க வேண்டும் என்றும் சட்டதரணி வாதிட்டார். அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள கருத்துத்தெரிவிக்கும் சுதந்திரத்தை பாதுகாக்க, அச்சுதந்திரம் மற்றும் அத்துடன் தொடர்பான மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு இடையே நேரடி தொடர்பு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேன்முறையீட்டு தீர்ப்பாயக் குழுவானது தனது கருத்தை கீழ் வருமாறு தெரிவித்திருந்தது.

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்ததன் பின் இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கையையே இத்திரைப்படம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான பெண், போரளியாக இருந்தவர் என்பதோடு, அவர் 3 பிள்ளைகளின் தாயும் ஆவார். காணாமல் போகடிக்கப்பட்டுள்ள தனது கணவர் பற்றிய கேள்விகளுக்கு பதில் தேடும் இவர் போன்ற பெண்களுடைய ஆதங்கம் மற்றும் வேதனை திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் பல காட்சிகளில் காட்டப்பட்டாலும், புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினரிடையே மோதல் ஏற்படுவது அல்லது புலிகளின் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான காட்சிகள் எதுவும் இத்திரைப்படத்தில் காட்டப்படவில்லை. யுத்தத்தின் பின் 2009 காலப்பகுதியில், பிரதானமாக பெண்கள் மற்றும் ஏனைவர்களின் வாழ்வின் சோகங்களையே திரைப்படம் காட்சிப்படுத்துகின்றது. நமது பார்வையில் புலிகளையோ பயங்கரவாதச் செயல்களையோ அல்லது பிரபாகரனையோ இத்திரைப்படம் எவ்வித்திலும் போற்றிப் பாராட்டவில்லை.

இலங்கை இராணுவம் தமிழ் மக்களை ஒடுக்குவது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தால், அது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாதித்திருக்கும் என்பதோடு, இலங்கை தணிக்கைச் சபை அந்நாட்டின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தினை பொதுமக்கள் மத்தியில் திரையிட அனுமதி வழங்கயிருக்காது.

FCAT குழு மேற்படி கருத்துக்களை வெளியிட்டதன் பின் திரைப்படத்தை பொது மக்களுக்காக திரையிட அனுமதி வழங்குமாறு CBFC இற்கு அறிவுரை வழங்கப்படதனடிப்படையில், அவ்வனைத்து மாற்றங்களையும் மேற்கொண்டதன் பின்னரே தணிக்கை சான்றிதழ் திரைப்படக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. (திரைப்படத்திலான மாற்றங்கள் தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவுசெய்து எமது இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்)

வெளி இணைப்புகள்

Sri Lanka Brief, Ban Revoked: Sherine Xavier’s Film a PR Exercise for LTTE says Chennai Film Board, March 3, 2016

The Hindu, Tribunal revokes ban on Sri Lankan docu-drama, March 3, 2016

Rediff News, Militarisation is a problem in the Tamil areas in Lanka, May 25, 2016

Hindustan Times, Indian censors more worried about Sri Lankan film than Lanka’s own, March 8, 2016

Ottran Cheithi, “முற்றுப்புள்ளியா?” ஈழ திரைப்படத்தின் தணிக்கையும், இன்னல்களும் பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – காணொளி, May 24, 2016

One India-Tamil, இலங்கை தமிழர் அவலத்தை சொல்லும் முற்றுப்புள்ளியா திரைப்படம், May 24, 2016

Tamil Diaspora, Mutrupulliya Eelam Tamil Movie Press Meet on Film Certification Difficulties, May 30, 2016

Ceylon News, Scars of Tomorrow – ‘Muttruppulliya’ to be screened in London, May 30, 2016