பயனர்:மு.சேது/மணல்தொட்டி

குலசேகரக்கால் கிராமம்

         இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம்,சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட  குலசேகரக்கால் கிராமம் மாவட்டத் தலைநகரிலிருந்து 14 கி மீ தொலைவில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது.இக்கிராமத்திலிருந்து ஒரு கி மீ தொலைவில் கிழக்கே வங்காள விரிகுடா கடல் உள்ளது.இக்கிராமத்தில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.இங்கு விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது.இது தவிர கட்டிடத் தொழிலாளிகளாகவும் தச்சுத் தொழில் புரிபவர்களாகவும் உள்ளனர்.100க்கும் மேற்பட்ட  முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகள் உள்ளனர்.இதில் ஒருசிலர் மட்டும் ஆசிரியப்பணியிலும்,வங்கிப் பணியிலும் காவல் துறை பணியிலும் உள்ளனர்.இங்கு ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு அங்கன்வாடியும் கிராமத்தின் பேரூந்து நிறுத்தத்திலிருந்துமேற்கு திசையில் உள்ளது.இங்குள்ள மாரியம்மன் கோவில் மற்றும் பேச்சியம்மன் கோவிலும் பிரசித்தி பெற்றது. இக்கிராமத்தின் பேரூந்து நிறுத்தத்தில் உள்ள பிள்ளையார் கோவிலும் சிறப்புப் பெற்றது.இக்கிராமத்தின் எல்லைகளாக கிழக்கே பழனிவலசை கிராமமும் மேற்கே குலசேகரக்கால் கண்மாயும் வடக்கில் அம்மாரி கிராமமும் தெற்கில் கோகுலவாடி கிராமமும் உள்ளது.இக்கிராமத்திற்கு இராமநாதபுரத்திலிருந்து 6,6A,6B அரசு நகர் பேரூந்துகளும் நிஜாம் செய்யது பாத்திமா தனியார் பேரூந்துகளும் அழகன்குளம் வரை இயக்கப்படுகிறது.
   
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மு.சேது/மணல்தொட்டி&oldid=1968413" இலிருந்து மீள்விக்கப்பட்டது