பயனர்:மே.சு.ச.தமிழ்ச்செல்வன்/மணல்தொட்டி

1954இல் நாகலாபுரம் என்ற ஊரில்(தூத்துக்குடி மாவட்டம்) பிறந்த இவரது தாய் சரஸ்வதி.தந்தை மே.சு.சண்முகம்.


பிறந்த தேதி 27-5-1954 கி.பி. பிறந்த ஊர் :நெ.மேட்டுப்பட்டி,சாத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம் இப்போது வசிப்பது- சிவகாசி/ சென்னை

முன்னாள் ராணுவ வீரர்.1974 முதல் 1979 வரை இந்திய ராணுவத்தில் சீன எல்லையில் பணியாற்றியுள்ளார்.

முதல் கவிதை -1972 கோவில்பட்டியிலிருந்து வெளிவந்த நீலக்குயில் இலக்கிய இதழில் வெளியானது.

முதல் சிறுகதை -1978 தாமரை இதழில் ”திரைச்சுவர்கள்” என்ற பேரில் வெளியானது.

தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ்-சுதந்திரப்போராட்டவீரர்.அக் கால நாடக இயக்குநர்.பாலகான சபாவை நட்த்தியவர்.தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் பட்த்துக்குப் பாடல்கள் எழுதியவர்.(1931) இவருடைய தந்தையார் மே.சு.சண்முகம் ஒரு நாவலாசிரியர்,சிறுகதையாளர்.1950களில் திராவிட இயக்க இதழ்களில் எழுதியவர். எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது தம்பிகள்.

எழுதியுள்ள நூல்கள்

1.வெயிலோடு போய் -1984-சிறுகதைகள் 2.வாளின் தனிமை-1992- சிறுகதைகள் 3.மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006 4.இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள் 5.ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள் 6.ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது-ஆண்களின் மனத்தடைகளை நோக்கிய உரையாடலாக 7.இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள் 8.அரசியல் எனக்குப் பிடிக்கும்- 4 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனையான சிறு நூல். 9.நான் பேச விரும்புகிறேன் -சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள் 10.வீரசுதந்திரம் வேண்டி-இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு (ஜா.மாதவராஜுடன் இணைந்து) 11.பெண்மை என்றொரு கற்பிதம்-ஸ்த்ரீ ஒக ஊகாலு என்ற பேரில் தெலுங்கில் மொழிபெயர்ப்பாகியுள்ளது 12.பேசாத பேச்செல்லாம்-உயிர்மை இதழில் வந்த தொடர். 13.இருவர் கண்ட ஒரே கனவு 14.சந்தித்தேன் 15.வலையில் விழுந்த வார்த்தைகள் 16.ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்-டாக்டர் விகடனில் வந்த தொடர்

சிறு நூல்கள்

1.1947 2.1806 3.நமக்கான குடும்பம் 4.வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும் 5.அலைகொண்ட போது.. -சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம் 6.தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் 7.பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை 8.எது கலாச்சாரம்? 9. அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் பல

விருது

சிறந்த கதாசிரியர் 2008 பூ படத்துக்காக - தமிழக அரசு விருது- சிறந்த கதாசிரியர் -பூ படத்துக்காக- 2008 -ஆனந்த விகடன் விருது சிறந்த கதாசிரியர்-பூ படத்துக்காக -2008 -மக்கள் தொலைக்காட்சி விருது சிறந்த கதாசிரியர்-பூ படத்துக்காக-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க -2008 விருது

டாக்டர் விகடன்,செம்மலர்,புத்தகம் பேசுது,தமிழ் இந்து  இதழ்களில் இவரது தொடர்கள் வந்துள்ளன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச்செயலாளராக ஆறாண்டுகளும் மாநிலத்தலைவராக ஆறாண்டுகளும் பணியாற்றியுள்ளார்.
இவரது வெயிலோடுபோய் மற்றும் அசோகவனங்கள் ஆகிய இரு சிறுகதைகளை இணைத்துத் திரைக்கதையாக்கி இயக்குநர் சசி மோசர்பேர் தயாரிப்பில் பூ என்ற திரைப்படமாக 2008இல் வெளியிட்டார்.