பயனர்:ரசித்து வாழ்/மணல்தொட்டி

                                             அரச்சலூர்
      மஞ்சள் மாநகரமும் ,பகுத்தறிவுப் பகலவனைக் கொடுத்த மாவட்டமுமாகிய ஈரோடு மாவட்டத்தில்  அமைந்துள்ள சிறிய ஊர் அரச்சலூர். இந்த ஊர் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது.ஈரோட்டில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் அரச்சலூர் அமைந்துள்ளது.விவசாயத் தொழிலும்,நெசவுத் தொழிலும் இவ்வூரின் முக்கிய தொழில்களாகும். 
     
      அரச்சலூரில் தொன்மை வாய்ந்த ஸ்ரீ பொன் அறச்சாலையம்மன் கோவில் அமைந்துள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த இந்த அறச்சாலையம்மனை அரச்சலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.இதன் காரணமாகவே முற்காலத்தில் ”அறச்சாலையூர்” என்று இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகவும் அது காலப்போக்கில் மருவி அறச்சலூர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர் .மேலும் அறம் வழங்கும் ஊர் என்றும் கூறுகின்றனர்.


     ஆனால் அரசு ஆணைகள் மற்றும் பேருந்துகளில் ச்சலூர்(ற-ர  வேறுபாடு)என்றுதான் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.இவ்வூரில் மேலும் நிறைய கோவில்களும்,மலைக்கோவிலும் இருக்கின்றது.இங்கு கீழ்பவானி வாய்க்கால் ஒடுவதாலும்,நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்து காணப்படுவதாலும் குடிநீர்த்தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.அரசு மேனிலைப் பள்ளிகளும்,தனியார் மேனிலைப் பள்ளிகளும் இங்கு உள்ளது.தனியார் மகளிர் கலைக்கல்லூரி,காவல் நிலையம்,வங்கிகள்,வனச் சரக அலுவலகம்,ஆரம்ப சுகாதார நிலையம்,இலங்கை அகதிகள் முகாம் போன்றவைகள் உள்ளன.


     அரச்சலூர் மலை நாகமலை என்று அழைக்கப்படுகிறது.இங்கு மலையில்