பயனர்:ரேவதி தங்கவேல்/மணல்தொட்டி

ஊதியூர் மலை இது திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டாரத்தில்அமைந்துள்ள சிறிய மலைகிராமம் ஆகும். இது ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் வழியில் காங்கயத்திற்கும் தாராபுரத்திற்கும் இடையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இம்மலையில் மூலிகைச் செடிகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கொங்கண சித்தர் தவமியற்றியதாக நம்பப்படுகிறது.இந்த சித்தர் பதிணென் சித்தர்களுல் ஒருவர் ஆவார்.இந்த சித்தர் திருப்பதி மலையில் ஜீவ சமாதி அடைந்தார். ஓவ்வொரு பௌர்ணமி இரவும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது.மூலிகை ரசம் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.இங்கு கொங்கன சித்தர் தவமிருந்த மிக சிறப்பு பெற்ற குகை ஒன்று உள்ளது.இம்மலையில் சுப்பிரமணியசாமிக்கு பெரிய மலைக்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.மேலும் கொங்கண சித்தரின் சீடரான செட்டித்தம்பிரானுக்கும் குகைக்கோவில் அமைந்துள்ளது.மலையின் அடிவாரத்தில் சிவ பெருமானுக்கும் திருக்கோவில் அமைந்துள்ளது. இது சுமார் 6 கி.மீ.நீளமுள்ள ஒரு மலைதொடர்ச்சியாகும்.