பயனர்:வயாவிளான்/மணல்தொட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வயாவிளான் மத்திய கல்லூரி Vayavilan Central College | |
---|---|
முகவரி | |
பலாலி வீதி, வயாவிளான் வயாவிளான், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°46′32.20″N 80°04′23.70″E / 9.7756111°N 80.0732500°E |
தகவல் | |
வகை | பொது, மாகாணப் பாடசாலை 1AB |
குறிக்கோள் | செம்மை நெறி நில் |
நிறுவல் | 1946 |
பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
ஆணையம் | வட மாகாண சபை |
பள்ளி இலக்கம் | 1013040 |
அதிபர் | வி. ரி. ஜெயந்தன் |
ஆசிரியர் குழு | 50 |
தரங்கள் | 1-13 |
பால் | கலவன் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ் |
School roll | 1,176 |
இணையம் | http://vayavilancc.org/ |
வயாவிளான் ஞானவைரவர் ஆலயம்
தொகு==இடப்பெயர்வு==[மூலத்தைத் தொகு]
முதலாவது இடப்பெயர்விற்கு பின் அதாவது 1986 சனவரி 13 இற்கு பிற்பாடு வழிபாடுகள் எதுவும் இடம்பெறவில்லை. 1987 ஜுலையில் இந்திய அமைதிப்படை வருகையின் பின்னர் உருவாகிய சமாதான காலத்தில் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு, 1½ வருடங்கள் படிப்படியாக வளமையான நாளாந்த பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. மீண்டும் 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி மீண்டும் இரண்டாவது இடப்பெயர்வில் ஆலயம் கண்டுகொள்ளப்படவில்லை. இவ் இடப்பெயர்வு காலப்பகுதியில் மக்கள் படைத்தரப்பின் அனுமதி பெற்று விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தனர். இடப்பெயர்வு காலப்பகுதியில் இயற்கையான சில சேதங்கள் ஆலயத்திற்கு நிகழ்ந்தாலும், வேறு காரணிகளால் ஆலயம் சேதமாக்கப்படவில்லை.
வயாவிளான்
தொகு==அமைவிடம்==[மூலத்தைத் தொகு]
வயாவிளான் கிராமத்தின் அமைவிட வரைபடம் வயாவிளான் கிராமம் பலாலி வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. கிழக்கே அச்சுவேலி, வடக்கே பலாலி, மேற்கே குரும்பசிட்டி, தெற்கே வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. அத்துடன் அச்சுவேலி-அராலி பிரதான வீதியும் வயாவிளான் கிராமத்தின் வடக்கு எல்லையாக அமைகிறது. பிறிதொரு வீதியான பலாலி வீதி வடக்கு-தெற்காக வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முன்பாக வயாவிளான் கிராமத்தை ஊடறுத்து செல்கிறது. பலாலி வீதியும், அச்சுவேலி-அராலி வீதியும் சந்திக்கும் இடம் வயாவிளான் சந்தியாகக் கொள்ளப்படுகிறது.
அறிமுகம்:
தொகு==அமைவிடம்==[மூலத்தைத் தொகு]
முழுமையாக ஒரு சந்ததி மடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது சந்ததிக்கு எதுவுமே தெரியாது என்ற நிலையை உருவாக்கி மீள்குடியேற்றம் என்ற ஒன்றை மழுங்கடிக்கப்படவிருந்த நிலையிலேயே வயாவிளான் சமூகநல அமைப்பு (Vayavilan Welfare Society) உருவாக்கம் பெற்றது.
தோற்றம்:
தொகுபோர்க்கால சூழல் 30 ஆண்டுகள், போர் ஓய்ந்து ஏழு ஆண்டுகள், புதிய ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு (2016ல்). இத்தனை ஆண்டுகளும் சென்றும் வயாவிளான் மண் மீட்கப்படவில்லை. இதனுடன் கூடவே பலாலி தெற்குப் பகுதியும் அடங்கும். அதாவது பலாலி தெற்கில் வசிப்பவர்கள் வயாவிளான் மக்களின் அன்றாட தொடர்பில் உள்ள மிக நெருங்கிய உறவுகளாகும். மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஒரு சிலர் தமக்கு தெரிந்த மட்டில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அவை பயன் தரவில்லை. இந்நிலையில்தான் கூட்டு முயற்சி தேவை என்பது உணரப்பட்டது.
வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு பகுதிகளில் உள்ள மக்களால் நன்கு அறியப்பட்ட ஆரவமுள்ள சிலர் 12.8.2016 அன்று ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன் வெளிப்பாடாக 20.8.2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ”வயாவிளான் சமூகநல அமைப்பு” அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்கள் தமக்கான தேவைகளை தனித்தும் கூட்டாகவும் இணைந்து நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு அமைப்பாக கொள்ளப்பட்டது.
செயற்குழு:
தொகுதலைவர்: ம.ஜெகநாதன்
செயலாளர்: பீ.எவ்.எக்ஸ்.செல்வநாதன்
பொருளாளர்: பே.தயாபரன்
மேலதிகமாக எட்டு உறுப்பினர்களுடன் மொத்தம் பதினைந்து பேர் கொண்ட செயற்குழு அமைக்கப்பட்டது.
ஓராண்டு நிறைவு:
தொகுவயாவிளான் மத்திய கல்லுாரியில் 10.9.2017 அன்று வயாவிளான் சமூகநல அமைப்பு தனது ஒராண்டு பூர்த்தியை கொண்டாடியதுடன், முதலாவது பொதுக்கூட்டத்ததையும் நடாத்தியது. இந்த ஒருவருட காலப்பகுதியில் மீள்குடியேற்றம் சம்பந்தமான சகல தரப்பினருடனும் பேச்சு வார்தையில் ஈடுபட்டிருந்தது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
பேச்சு வார்த்தைகள் பயன்தராத நிலையில் தொடர்ந்து சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப்பதென்று இப்பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
யாப்பு உருவாக்கம்:
தொகுஅமைப்பிற்கான முழுமைபெற்ற புதிய யாப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது. யாப்பானது ஏ4 தாளில் 12 பக்கங்களைக் கொண்டிருக்கும்.
வெளி இணைப்புகள்:
தொகுhttps://www.facebook.com/vayavilanwelfare/
ஆலயம் விடுவிப்பு:
தொகுமக்களினதும். அமைப்பக்களினதும் தொடர் போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளின் பயனாக, 28 வருடகாலமாக இராணுவ கட்டமைப்பில் இருந்த இவ்வாலயம் 19.6.2018 செவ்வாய்க்கிழமை அன்று விடுதலை பெற்றது. ஆலய சுற்றாடலில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் பன்னிரண்டு எக்கர் நிலப்பரப்பும் கூடவே மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.