பயனர்:வள்ளி திருமூர்த்தி/மணல்தொட்டி

CHEVALIER T.THOMAS ELIZABETH COLLEGE FOR WOMEN

  (C.T.T.E. COLLEGE FOR WOMEN)

செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி: தமிழ்நாட்டில், சென்னையில், மாதவரம் மூலக்கடை நெடுஞ்சாலையில் இக்கல்லூரி அமைந்துள்ளது. சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி எனச் சுருக்கமாகவும் அழைக்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு, வட சென்னை பெரம்பூர் பகுதியில் உருவான முதல் பெண்கள் சுயநிதிக் கல்லூரி இது. பெரம்பூர் ரயில் நிலையமும் மூலக்கடை செம்பியம் பகுதியில் அமைந்துள்ள சிம்சன் தொழிற்பேட்டையும் இக்கல்லூரியை எளிதில் அடையாளம் காண்பிக்கும் நிலக்குறீயீடு. செவாலியர் டி.தாமஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட புனித மேரி கல்வி அறக்கட்டளையின் கீழ் இக்கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியின் நிறுவனர் திருமதி எலிசபெத் தாமஸ். ஏறத்தாழ 35 ஆண்டுகாலமாக சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியாக இயங்கி வரும் இக்கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் ஆங்கிலவழியில் கற்பிக்கப்பட்டுவருகிறது. தற்போது 2500 க்கும் மேற்பட்ட மாணவியர் கற்கின்றனர். NAAC இரண்டாம் சுழற்சியில் 'A' அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தலைவர் - நீதியரசர் திரு ஜே.கனகராஜ்: தாளாளர் - திரு இல.பழமலை, (இ.ஆ.ப. ஓய்வு): முதல்வர் - முனைவர் திருமதி ஹனீஃபா கோஷ்.