பயனர்:வீரக்கவுண்டன்பட்டி/மணல்தொட்டி
முள்ளிபாடி என்பது பாடி எனும் நீர்தேக்க பகுதியை குறிக்கும் பழந்தமிழ் சொல்லிலிருந்து உருவாகி வந்த ஊரின் காரணப்பெயர் ஆகும். கருவூர் என்று பெயர் பெற்று விளங்கிய இன்றைய கரூர் மாவட்டத்தின் தென் மேற்காக மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ள சேர்வைகாரன்பட்டி எனும் ஊரிலிருந்து வீரகவுண்டன் பட்டி வழியாக ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. இன்று இந்த முள்ளிபாடி பஞ்சாயத்துக்குஉட்பட்ட பகுதிகளில் வீரகவுண்டன்பட்டி, சேர்வைகாரன்பட்டி,தளிவாசல் ஆகியவை முக்கியமான பகுதிகளாகும்.இந்த பகுதியில் இருந்து வந்த முள்ளிபாடி ஜமீன் தான் வீரப்பூர் ஜமீனுடன் ஏற்பட்ட பிரச்சனைக்காக கடவூர் பகுதிக்கு சென்று விட்டதால், இன்று கடவூர் ஜமீன் என்ற ஒன்று இருப்பதாக கருத்துகள் நிலவுகிறது. இன்று மோசமான கால சூழலால் பெரும்பகுதி நிலங்கள் தரிசாக இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த முள்ளிபாடி ஏரி மூலம் உழவுத்தொழில் சிறப்பாக விளங்கியது.இன்றும் பெரும்பான்மையான மக்கள் உழவுதொழிலையும்,மேலும் சிலர் ஆழ்துளை எந்திரங்களை நம்பியும்உள்ளனர். வீரகவுண்டன்பட்டி பம்பலம்பன் கோயில்,வீரகவுண்டன்பட்டி மாரியம்மன் கோயில்,பிள்ளையார் கோயில்,பகவதியம்மன் கோயில் ,முத்தையன் கோயில்,பட்டவன் கோயில் என நிறைய ஊர்தெய்வ கோயில்களை கொண்டுள்ள இந்த ஊர் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் விழாகோலம் கொள்ளும். இந்த பகுதியில் தமிழ் வளர்சிக்காகவும்,இன மீட்சிக்காகவும்,சாதிய பிற்போக்கு தனங்களை களையவும் வீரகவுண்டன்பட்டி தமிழ் சங்கமும்,அதன் தலைவர் க.வேல்முருகன் அவர்களும் இளைஞர்களை ஒருங்கிணைத்து பல்வேறு சீர்திருத்த பணிகளை செய்து வருகிறார்கள்.இது சுற்றி இருக்கும் பல கிராம மக்களுக்கும் பெரிய உந்துதலாக இருந்து வருகிறது.