பயனர்:வெபாரதி/மணல்தொட்டி

ரூபாய் நோட்டுகளை உற்பத்தி செய்ய நிறைய ரூபாய் தேவைப் படுகிறது. தரம் உயர்ந்த காகிதம் , அச்சிடும் மை , பாதுகாப்பு அமைப்பு அச்சீட்டுகள் , அச்சிடும் செலவு , பாதுகாப்பு என மிகப் பெரும் தொகை செலவிட வேண்டியிருக்கிறது. இந்த செலவீனங்களைக் கணக்கில் கொண்டே டென்மார்க் முதல் குவைத் வரையிலான பெரும்பாலான நாடுகள் அச்சிட்டு தரும் வேலையை வெளிநாட்டு நிறுவனங்களில் கொடுத்து காரியத்தை முடிகின்றன. காகித நோட்டுகளை உலகிலேயே அதிகப் படியாக ( சீனாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில்) உபயோகிக்கும் நம் நாடு இதில் நமக்கு நாமே கொள்கையைக் கடைபிடிக்க நினைக்கிறது. நீர் குறிக்கோள் இடும் வசதிகொண்ட தரம் உயர்ந்த காகிதத்தை 95% ஜெர்மனியிடமிருந்தும் பிரிட்டனிடமிருந்தும் வாங்கி அச்சிட்டு வந்தது இந்தியா. ஒரு வருடத்தின் ரூபாய் நோட்டு உற்பத்தியில் 40% செலவு 20, 000 மெட்ரிக் டன் காகிதத்திற்கே செலவிடப் படுகிறது. இந்தியத் தயாரிப்பாக இருந்தாலும் முழுமையான இந்தியத் தயாரிப்பாய் இல்லாத ரூபாயை " மேக் இன் இந்தியா " யாவாக மாற்றும் முயற்சியில் 2016 ன் இறுதியில் காகித நோட்டுக்கும் உற்பத்திக்குமான செலவு சுமார் 3421 கோடி. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு காகிதங்கள் பயன்படுத்தப்பட்டதா அச்சிட்டு பணிக்கு எவ்வளவு செலவானது என்று ஆர் பி ஐ சொல்ல மறுத்தாலும் தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே அச்சடிக்கப்பட்ட ரூபாய் என்ற பெருமை புதிய ரூபாய் நோட்டுகளை உண்டு. 1862ல், முதல் இந்திய ரூபாய் நோட்டு இங்கிலாந்தைச் சார்ந்த சீட்டாட்ட அட்டைகள் மற்றும் ஸ்டாம்ப் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து அச்சிட்டு வாங்கிய இந்தியா 1920 ல் நாசிக் (மஹாராஷ்டிரா) நகரில் அச்சிடும் பணியை துவங்கியது. பிறகு 1975ல் தீவாஸ் (மத்திய பிரதேசத்திலும்), 1999ல் மைசூரிலும் (கர்நாடகா) 2000ல் சல்போனி (மேற்கு வங்கம் ) யிலும் அச்சிட தொடங்கியது. ரூபாய் நோட்டு அச்சிடும் காகிதம் தயாரிப்பு மத்தியபிரதேச கோசங்காபாத் நகரில் நடைபெற்றாலும் 70 சதவீதம் காகிதம் பிரிட்டன் ஜப்பான் ஜெர்மனி போன்ற நாடுகளிடமிருந்தே இறக்குமதியானது. மைசூரில் ரூபாய் நோட்டுக்கான காகித ஆலை உருவாக்கப்பட்டு புதிய ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் தயாராகத் தொடங்கி "மேக் இந்த இந்தியா" என்று முழக்கமிட்ட போது முழுமையாக "மேக் இன் இந்தியா" தானா என்று கேள்வி எழுந்தாலும் ரூபாய் நோட்டுக்கான பரிணாம வளர்ச்சியில் நாம் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறோம் என்பது நிச்சயம்