பயனர்:வே.மதியரசு/மணல்தொட்டி

கடிநெல்வயல்,வை.வேதரெத்தினம்

தொகு

கடிநெல்வயல் திரு.வை,வேதரெத்தினம், பன்முகத் திறமை கொண்ட ஒரு சிந்தனையாளர். கவிஞர், எழுத்தாளர், மொழியியலாளர், குமுகாய அக்கறை கொண்ட சிந்தனைச் செல்வர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் தமிழறிஞர் !

தோற்றம்:

தொகு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில்  1944 –ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் இவர் பிறந்தார்.  தந்தையார் பெயர் வைத்தியநாதன். தாயார் சாரதா அம்மையார் !

உடன்பிறப்பு:

தொகு

இவருடன் உடன் பிறந்தோர் நால்வர்.  தமக்கையார் சிந்தாமணி அம்மையார்,  தங்கைகள் கல்யாணி அம்மையார், கனகாம்புயம் அம்மையார், ஞானசுந்தரி என்னும் சுமதி அம்மையார் ஆகியோர் !

கல்வி:

தொகு


பள்ளிக் கல்வி:

தொகு

கடிநெல்வயலில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் பயின்ற இவர், உயர்நிலைப்  பள்ளிக் கல்வியை, ஆயக்காரன்புலத்தில் உள்ள இரா.நடேசனார் நினைவு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். இங்கு 6 –ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைப் பயின்ற இவர் பள்ளியிறுதி வகுப்பான  11 –ஆம் வகுப்பினைத் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் 1960 –ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் நிறைவு செய்தார் !

கல்லூரிக் கல்வி:

தொகு

ஈராண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தஞ்சை, மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில்  1962 –ஆம் ஆண்டு புகுமுக வகுப்பில்  (P.U.C)  சேர்ந்தார்.  இப்படிப்பை  1963 ஏப்ரலில் நிறைவு செய்தார். மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்தால், உடனே இடம் கிடைக்கக் கூடிய  வாய்ப்பு இருந்தது; எனினும் குடும்பத்தின் செல்வ வளம்  நிறைவாக இல்லாததால், மருத்துவப் படிப்பில் இவர் சேரமுடியவில்லை அரசுப் பணியில் சேர்ந்த பிறகு இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து வணிகவியல் வாலை (B.Com) பட்டம் பெற்றார் !

அரசுப் பணி:

தொகு


கூடுறவுத் துறைப் பணி:

தொகு

1960 -ஆம் ஆண்டு தனது 16 –ஆம் அகவையில் தந்தையை இழந்த இவர், குடும்பச் சுமையைத் தனது தோள்களில் ஏற்க  வேண்டி இருந்ததால், பணிக்குச் செல்ல விரும்பினார். இவருக்கு அரசுப் பணி கிடைக்கவே கிடைக்காது என்று ஓங்கி  ஒலித்த  கணியன்   (சோதிடர்)  ஒருவரின்  தடைச்  சொற்களையும் மீறி 1964 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் கூட்டுறவுத் துறையில், தணிக்கைப் பிரிவில் இளநிலை ஆய்வாளராக01 பணியில் சேர்ந்தார். கூட்டுறவுத் துறையில் பணியை ஏற்று ஒன்றரை ஆண்டுகள், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தங்கியிருந்த காலம் தான் இவருக்கு உலகம் என்றால் இன்னதென்று உணர்ந்திட உதவியது. தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் இல்லத்திற்குச் சென்று வந்தது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டு அறிவுத் தெளிவு பெற்றது, கலைஞரைச் சாலையில் சந்தித்துப் பேசியது உள்பட பல இனிய துய்ப்புகள் (EXPERIENCES)  இங்கே கிடைத்தன !

காவல் துறைப்பணி:

தொகு

கூட்டுறவுத் துறையில் ஒன்றரை ஆண்டுகள் அன்னிலைப் பணியிடத்தில் (TEMPORARY APPOINTMENT) பணிபுரிந்த பிறகு, விடுபட்டு 1965 பிப்ரவரித் திங்களில் கடலூர் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிலைப் பணியிடத்தில் (REGULAR APPOINTMENT) எழுத்தராக02 (CLERK) பணியில் சேர்ந்தார் ! 

தொழிற்பயிற்சி நிலையப் பணி:

தொகு

காவல் துறைப் பணியைவிடக் கூடுதல் ஊதியத்தில், நிலையான பணி வாய்ப்புக் கிடைத்ததால் (REGULAR JOB) புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 1966 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 அன்று இவர் பண்டகக் காப்பாளராக03 பணியேற்றார்.


இங்கு பணி புரிகையில் புலவர்கள் தி.சு.மலையப்பன், அன்பு கணபதி, வித்வான் கந்தசாமி ஆகியோரது தொடர்பு கிடைத்தது. குன்றக்குடி அடிகளார், புலவர் கா.கோவிந்தன், இராய.சொக்கலிங்கனார், அ.வ.இராசகோபாலன், பா.நமசிவாயம், சோ.சத்தியசீலன் உள்பட பல தமிழறிஞர்கள் பங்கேற்ற வள்ளுவர் ஈராயிரத்தாண்டு விழா  1969 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் மூன்று நாள்கள் நடைபெற்றது. விழா அமைப்பாளர்களில் ஒருவராக இவரும் இருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது;  தமிழ்ப் பணி மீதான ஈர்ப்பும் இங்குதான் இவருக்கு ஏற்பட்டது !

சொல்லாக்கம்:

தொகு


தமிழ்ச் சொல்லாக்கம்:

தொகு

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த எந்திரங்கள்,   கருவிகள், நுகர்பொருள்கள், அறைகலன்கள், மூலப் பொருள்கள் அனைத்துக்கும் தமிழ்ச் சொல் ஆக்கும் பணியை இங்குதான் இவர் தொடங்கினார். 1966 –ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி, கடந்த 54 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றால், அதற்குத் தமிழ் மீது இவருக்கு உள்ள அளப்பரிய ஈடுபாடே காரணம் என்றால் அது மிகையில்லை !

புதுச் சொல் புனைவு:

தொகு

இவர் தமிழில் புதிய கலைச் சொற்கள் நிரம்பவும் படைத்திருக்கிறார். இலக்கியச் சான்றுகளையும், வட்டார வழக்குச் சான்றுகளையும் வேர்ச் சொற்களையும் ஆதாரங்காட்டிப் புதிய சொற்களைப் படைத்துள்ளார். இப்போது வழக்கில் இருக்கும் சில சொற்களுக்கு புதிய பொருள் சொல்லி, விளக்கம் தந்திருக்கிறார். சில எடுத்துக் காட்டுகள் வருமாறு: (1) குயிலி = DRILL BIT (02) அகழி = CUTTER (MILLING CUTTER) (03) துச்சில் = GUEST HOUSE (04) அல்லியம் = TRACTOR (05) பல்லவி = COOKER (VESSEL) (06) துயிலி = NIGHTY (DRESS) (07) பேடுருளி = MOPED (08) பாவையுருளி = SCOOTY (09) வில்லூரி = MART, EMPORIUN , SHOP (10) தும்பி = BOKLINE.

இராணி இதழில் வெளியீடு:

தொகு

இராணி வார இதழ் 1986 ஆம் ஆண்டு ”ஆக்கவாரீர் அறிவியல் தமிழ்” என்னும் பகுதியைத் தொடங்கியது. தமிழறிஞர் ஔவை.நடராசன் அவர்கள் இப்பகுதிக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தார்.. தமிழ் ஆர்வலர்களிடமிருந்து புதிய கலைச் சொற்களைக் கோரிப்பெற்று, திரு.ஔவை நடராசன் அவர்களால் ஆய்வு செய்யப் பெற்று இராணி இதழில் அவை வெளியிடப் பெற்றன. இவர் புனைந்து அனுப்பிய கலைச் சொற்கள் இராணி இதழில் எட்டு முறை05 வெளியிடப்பெற்றன !

கவிதை படைப்பு:

தொகு

இவர் தனது 20 –ஆம் அகவையில் கவிதை எழுதத் தொடங்கினார்.  1964 –ஆம் ஆண்டு மே மாதம் 27 –ஆம் நாள் இந்திய அரசுத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு மறைவையொட்டி இவர் எழுதிய முதல் கவிதை சுதேசமித்திரன்06 நாளிதழில் 31-05-1964 அன்று வெளியாகியது. தமிழக அரசு நடத்தி வந்த “தமிழரசு” இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.


இவர் படைத்த கவிதைகள் அனைத்தும் இவரது வலைப்பூவான07 “தமிழ்ப் பணி மன்றத்தில்” பதிவேற்றம் செய்து, வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

திருமணம்:

தொகு

இவரது திருமணம் 1972 –ஆம் ஆண்டு சூலை 2 –ஆம் நாள் நிகழ்வுற்றது. மன்னை மு.அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற இத் திருமணம் ஐயர் இல்லாமல்,  மந்திரம் ஓதாமல், சீர்திருத்த முறையில் நடைபெற்றது. மணலி கந்தசாமி என்னும் பொதுவுடைமைக் கட்சித் தலைவரின் உறவினரான இரகுநாத பிள்ளையின் இளைய மகள் கலைச்செல்வி இவரது வாழ்க்கைத் துணையாக அமைந்தார்.  இவ்விணையருக்கு இளம்பரிதி என்னும் ஒரு ஆண்மகவும், கவிக்குயில், இளவரசி ஆகிய இரு பெண் மகவினரும் உள்ளனர் !

பணி ஓய்வு:

தொகு

அரசாணை (நிலை) எண்: 169, வேலை வாய்ப்பு.பயிற்சித் துறை, நாள்:18-11-1996 -இன்படி ஆட்சி அலுவலர்04 (ADMINISTRATIVE OFFICER) என்னும் உயர் பணியில் அமர்வு செய்யப்பெற்று நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார்.  2001 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 –ஆம் நாள் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர், பணியில் இருக்கும் போது, அரசு அலுவலர் ஒன்றியம், துறை சார்ந்த அமைச்சுப் பணியாளர் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம் ஆகிவற்றில் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார் !

கணியம் கற்பு

தொகு

கணியத்திலும் (ASTROLOGY) இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. வேலூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய  திருவருள் சோதிடப் பயிற்சி நிலயத்தின் சார்பில் தஞ்சாவூரில் நடத்தப் பெற்ற ஓராண்டு காலப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று ‘சோதிட சிரோண்மணி”, “சோதிட இரத்தினா” ஆகிய பட்டங்களை08 பெற்றுள்ளார்.

நீரோட்டக் கலை

தொகு

நிலத்தடி நீரோட்டம் காண்பதிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதன் விளைவாக, கிருட்டிணகிரி, நீரோட்ட நிபுணர் திரு.சி.மாணிக்கம் அவர்கள் நடத்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, சான்றிதழ்09 பெற்று நிலத்தடி நீரோட்டம் கணிப்பதில் வல்லவரானார்.

பொதுப்பணி:

தொகு

பணி ஓய்வுக்குப் பிறகு, தஞ்சாவூரில், இவர் வாழ்ந்து வந்த பகுதி மக்களை ஒன்றிணைத்து 650 குடும்பங்களை உள்ளடக்கி ”திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம்” அமைத்து அதன் தலைவராகவும் பணியாற்றினார். 2006 –இல் அமைக்கப்பட்ட இச்சங்கம் கடந்த 14 ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது !

முகநூல் பணி:

தொகு


தமிழ்ப் பணி மன்றம் - முகநூற்குழு:

தொகு

2015 –ஆம் ஆண்டு “தமிழ்ப் பணி மன்றம்” என்னும் பெயரில் முகநூற் குழு ஒன்று தொடங்கி. அதன் ஆட்சியராக இன்று வரைச் செயல்பட்டு வருகிறார். தமிழ் வளர்ச்சிப் பணி ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு இயங்கி வரும் இக்குழுவில் தமிழ் வளர்ச்சியில் நாட்டமுடைய 2350 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஏறத்தாழ 450 கட்டுரைகளை தமிழ்ப் பணி மன்றத்தில் எழுதியுள்ள இவர்  தமிழ் உணர்வாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருந்து வருகிறார் !

பிற முகநூற் குழுக்கள்:

தொகு

தமிழ்ப் பணி மன்றம் அல்லாது, “தமிழ்ப் பொழில்”, “கலைச் சொற் களஞ்சியம்”, “அகரமுதலி”,  “அகரமுதலி (மழலையர் பெயர்கள்)”, அகரமுதலி (வடமொழிச் சொல் – தமிழ்ச் சொல்”, ”அகரமுதலி (மக்கட் பெயர்)வடமொழிப் பெயருக்கேற்ற தமிழ்ப்பெயர்கள்”, ”அகரமுதலி (சொல்லாய்வு அறிஞர்.ப.அருளியின் அயற் சொல் அகரமுதலி)”, “வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை ஓய்வு பெற்ற அலுலர்கள் இணையம்”, “திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் (தஞ்சை)”  ஆகிய முகநூற் குழுக்களையும் உருவாக்கி இயக்கி வரும் இவர், தமிழ் வளர்ச்சியில் முனைப்பாக இருப்பவர்களை ஒன்றினைத்து,  சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார் !


------------------------------------------------------------------------------------------


வெளி இணைப்புகள்


01.தஞ்சை மாவட்டக் கூட்டுறவுத் தணிக்கை அலுவலரின் செ.மு.ஆ:.11602/ஏ/64, நாள்.7-8-1964

02.கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் ஆணை எண் : 11386/ஏ5/65 : நாள்:2-7-1965

03.வே.வா.ப.து.இயக்குநரின் செ.மு.ஆ.எண்: 106818/எச்.1/65 நாள் :9-3-1966.

04.அரசாணை (நிலை) எண்: 169, தொழிலாளர், வேலை வாய்ப்புத் துறை, நாள்: 18-11-1996.

05.இராணி வார இதழ், நாள்: 12-10-1986, 23-11-1986, 04-01-1987, 25-01-1987, 26-04-1987, 14-06-1987, 26-07-1987 மற்றும் 20-09-1987

06.சுதேசமித்திரன், நாளிதழ், நாள்: 31-5-1964.

07.வலைப்பூ: Thamizhppanimanram.blogspot.com.

08.Certificate  No. HTA-1251/2008 dated 9-12-2008 issued by Thiruvarul Astrological Training & Learning Institute, Vellore.

09.நீரோட்ட நிபுணர் கிருட்டிணகிரி சி.மாணிக்கம் வழங்கிய நீரோட்டக் கலைஞர் சான்று.