பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி



உணவகங்களின் தமிழ்ப் பெயர்களும் உணவுகளும்

தொகு




அவிழகம்...............= MESS

தொகு

ஆர்கையகம்.........= SNACK BAR

தொகு

அயிலகம்...............= RESTAURANT

தொகு

மிசைபுலம்............= HOTEL

தொகு
                         --------------------------------------------------

வயிற்றுப் பசிக்கு உணவளிக்கும் கடைகள் / உணவகங்கள், பல்வேறு பெயர்களில், சிறிதும் பெரிதுமாக நாடெங்கும் பரவிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் அளிக்கும் உணவின் தன்மையும் வகையும், வேறுபட்டவை !

சிறுபசியைத் தணித்துக் கொள்ளச் சிற்றுண்டி நிலையம் (TIFFIN SHOP) செல்கிறோம்; மிகுபசி என்றால் மிசைபுலம் (HOTEL) செல்கிறோம். இரண்டு நண்பர்கள் சேர்ந்தால் பொழுது போக்கவும், கொறிக்கவும் வசதியான வேறுவகை உணவகத்திற்குச் செல்கிறார்கள். இப்படி, மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தான் எத்துணை வகை வகையான உணவகங்கள் !

ஒவ்வொரு வகை உணவகத்திற்கும் ஆங்கிலத்தில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவற்றையும் அவற்றுக்கானத் தமிழ்ப் பெயர்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா ?

HOTEL =மிசைபுலம்

தொகு

“ஹோட்டல்” (HOTEL) என்பது அறுசுவை உணவு வழங்குமிடம். நண்பகல் உணவிற்கு இவை ஏற்ற இடங்கள். வெளியூர்ப் பயணிகள் தான் பெரும்பாலும் இங்கு உணவருந்த வருபவர்கள். ஆங்கில அகரமுதலி சொல்கிறது: “HOTEL MEANS HOUSE FOR ENTERTAINMENT OF TRAVELLERS ETC., USUALLY LARGE INNS. இத்தகைய “ஹோட்டல்”களைத் தமிழில் “மிசைபுலம்” என்று அழைக்கலாம். “வித்தும் இடல்வேண்டும் கொல்லோ, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் – குறள்.85) ”மிசைபுலம்” என்னும் சொல் அல்லாமல் “உணவகம்” என்று அழைப்பதும் பொருத்தமாக இருக்கும் ! (மிசை = உணவு; மிசைதல் = உண்ணுதல்)

MESS=அவிழகம்

தொகு

நண்பகல் உணவுக்கு ஏற்ற இன்னொரு இடம் “மெஸ்” (MESS). இங்கு உணவு அருந்துவோர் பெரும்பாலும் அலுவலகங்களில் பணிபுரிபவர்களாகவும், அன்றாடம் வருபவர்களாகவும் இருப்பார்கள். COMPANY OF PERSONS WHO TAKE MEALS TOGETHER – என்கிறது ஆங்கில அகரமுதலி. பெரும்பாலும் இங்கு வருபவர்கள் நிலையான வாடிக்கையாளர்கள். இத்தகைய “மெஸ்” (MESS) என்னும் உணவகத்தை நாம் “அவிழகம்” என்று அழைக்கலாம் ! ”அவிழ்” என்றால் சோறு என்று பொருள். “அவிழ்ப்பதம் கொள்க...” என்பது பொருநராற்றுப் படை(112)


RESTAURANT=அயிலகம்

தொகு

இவற்றை அடுத்து, “ரெஸ்டாரண்ட்” (RESTAURANT) என்ற பெயரில் சில உணவகங்கள் இயங்குகின்றன. இதற்கு ஆங்கில அகரமுதலி தரும் விளக்கம்: PLACE WHERE MEALS OR REFRESHMENTS MAY BE HAD TO REINVIGORATE ONESELF. இங்கு முழு உணவும் (FULL MEALS) கிடைக்கும்; சிற்றடிசிலும் (CURD RICE etc.) கிடைக்கும். சுவைநீரும் (DRINKS) கிடைக்கும். இத்தகைய “ரெஸ்டாரண்ட்” என்பதைத் தமிழில் “அயிலகம்” என்று அழைக்கலாம். ”அயில்” என்றால் “உண்”, அதாவது “உண்ணுதல்” என்று பொருள் ! “பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பை...” என்பது புறநானூறு(399:11)

CAFETERIA = தற்பெறுகை அயிலகம்

தொகு

“கபஃட்டேரியா” (CAFETERIA)” என்னும் பெயரில் சில நிறுவனங்கள், தனது உணவகங்களை நடத்தி வருகின்றன. இங்கு உணவருந்த வருபவர்கள் “வழங்கிடம்” (COUNTER) அருகில் சென்று தமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்று, எடுத்து வந்து “ஊமணை” யில் (DINING TABLE) அமர்ந்து உண்ண வேண்டும். உணவு பரிமாறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். CAFETERIA MEANS RESTAURANT IN WHICH CUSTOMERS FETCH WHAT THEY WANT FROM THE COUNTERS என்கிறது ஆங்கில அகரமுதலி. வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டியதைத் தானே சென்று பெற்று வரும் உணவகம் என்பதால் இதைத் “தற்பெறுகை அயிலகம்” என்று தமிழில் சொல்லலாம் !

SNACK BAR= ஆர்கையகம்

தொகு

வடை, பொரிக்கோள் (போண்டா), உப்பம் (பஜ்ஜி), அடிசில் (பிஸ்கட்) போன்ற தின்பண்டங்களுடன் தேநீர், குளம்பி (காப்பி) போன்றவற்றைத் தருகின்ற சிற்றுணவகங்களை “ஸ்னாக் பார்” (SNACK BAR) என்கிறோம். இவற்றை SLIGHT OR CASUAL OR HURRIED MEAL SERVING PLACE என்கிறது ஆங்கில அகரமுதலி. தமிழில் “ஆர்கை” என்றால் “தின்னுதல்” என்று பொருள். ”அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்...” என்பது புறநானூற்று வரி (391:06) எனவே “ஸ்னாக் பார்” (SNACK BAR) என்பதை நாம் ”ஆர்கையகம்” என்று தமிழாக்கம் செய்யலாம் !

CAFE=குளம்பியகம்

தொகு

சில இடங்களில் “கஃபே” (CAFE) என்னும் பெயரில் சிற்றளவு உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஆங்கிலத்தில் CAFE என்றால் “குளம்பி” (COFFEE) விற்பனையகம் என்றுதான் பொருள். CAFE MEANS COFFEE HOUSE என்கிறது ஆங்கில அகரமுதலி. நடைமுறையில், குளம்பியுடன் வேறு உணவுப் பொருள்களும் இங்கு விற்பனை செய்யப்படுவதைக் காண்கிறோம். ஆங்கிலச் சொல்லின் பொருளை அடியொற்றி நாமும் CAFE என்பதைக் ”குளம்பியகம்” என்றே மொழியாக்கம் செய்வோம் !

”குளம்பி” (COFFEE) விற்பனையகங்கள், சில இடங்களில், COFFEE BAR என்ற பெயரிலும் இயங்கி வருகின்றன. இவற்றுக்குத் தனிப் பெயர்த் தேவையில்லை. இவற்றையும் “குளம்பியகம்” என்றே அழைக்கலாம் !

TEA STALL=தேநீரகம்

தொகு

“TEE STALL” உங்களுக்குத் தெரிந்த இடம்தான். இதைத் “தேநீர் நிலையம்” அல்லது “தேநீரகம்” என்று சொல்லலாம். பல ஊர்களில் இவற்றைத் “தேநீர் நிலையம்” அல்லது “தேநீரகம்” என்னும் பெயர்களிலேயே நடத்தி வருவது மகிழ்ச்சிக்குரியது. இங்கு தான் தமிழ்ச் சொல் நம் கண்களுக்குத் தென்படுகின்றன !

தே + நீர் = தேநீர் > தேநீரகம், தேநீர் நிலையம்;. தேயிலைச் சாறு கலந்த நீர் என்பதால் தேநீர் என்பதே சரி. தேன் + நீர் = தேனீர்; தேன் கலந்த நீரைத்தான் ”தேனீர்” என்று சொல்ல வேண்டும் !

மேற்கண்ட பத்திகளில் தரப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் தமிழ்ச் சொற்களும், தொடர்புடைய பிற சொற்களும் வருமாறு :-


HOTEL= மிசைபுலம்; HOTEL= உணவகம்; RESTAURANT= அயிலகம்; SNACK BAR = ஆர்கையகம்; MESS = அவிழகம்; CAFE = குளம்பியகம்; CAFETERIA = தற்பெறுகை அயிலகம்; COFFEE BAR = குளம்பியகம்; TEA STALL = தேநீரகம்; DINING TABLE = ஊமணை (ஊ = உணவு); DRINKS = சுவைநீர்; COUNTER = வழங்கிடம்; TIFFIN = சிற்றுண்டி; IDLY = இட்டளி (இட்டு + அளி); DOSAI = தோசை (தோய்செய் < தோய் + செய்); CHUTNY = சத்துணி (சத்து + உணி); BONDA = பொரிகோள்; BAJJI = உப்பம்; NON-VEG BRIYANI = ஊனடிசில் (ஊன் + அடிசில்); VEG. BRIYANI = காயடிசில் (காய் + அடிசில்); MEALS = சாப்பாடு; MINI MEALS = சிற்றுணா (உணா = உணவு); REFRESHMENTS = ஊக்குணா (ஊக்கு + உணா); VEGETARIAN MEALS = காயுணா (காய் + உணா); VEGETARIAN HOTEL = காயுணா மிசைபுலம்; NON-VEGETARIAN MEALS = கறியுணா (கறி + உணா); NON-VEGETARIAN HOTEL= கறியுணா மிசைபுலம்;


சைவ உணவு, அசைவ உணவு என்னும் சொற்றொடர் தவறானவை. சிவன் > சிவம் > சைவம். சிவனைப் பின்பற்றுவோர் ”சிவனியர்”, அதாவது ”சைவர்கள்”. ”சைவர்கள்” கறியுணவு உண்ண மாட்டார்கள் என்னும் பொருளில் “சைவம்” வழங்குகிறது. சிவனியத்தைப் பின்பற்றுவோரில் கறி உண்பவர்களும் இருக்கிறார்கள். எனவே சைவத்திற்கும் காயுணவுக்கும் தொடர்பே இல்லை.


ஆக்கம் + இடுகை, வை.வேதரெத்தினம், [தி.ஆ.2050,நளி (கார்த்திகை)14] {30-11-2019}