பயனர்:வ.துசாந்தன்/மணல்தொட்டி

தொகுப்பு : வயிரமுத்து – துசாந்தன் முனைக்காடு.

கொம்பு விளையாட்டு

மீன்பாடும் தேனாட்டின் பாரம்பரிய பொழுதுபோக்குகளில் ஒன்றாகவும் களியாட்ட நிகழ்வாகவும் இறை வழிபாட்டு நிகழ்ச்சியாகவும் விளங்குவது கொம்பு விளையாட்டு. மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி வந்தாறுமூலை கிராமங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் பாணமையிலும் பயில் நிலையில் உள்ளதுடன்; தேத்தாதீவு, தம்பிலுவில் மண்டுர், களுதாவளை ஆகிய இடங்களிலும் பழம் காலத்தில் நடந்ததாகவும் முதியோர்கள் கூறுவர். மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இறுதியாக 1997ம் ஆண்டு நடைபெற்றதற்கு (17வருடங்களுக்கு) பிற்பாடு 2014ம் ஆண்டு இவ்வருடம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கொம்பு விளையாட்டானது கண்ணகி வமிபாட்டோடு தொடர்புபட்டது, கொம்பு விளையாட்டின் தோற்றம் கண்ணகி வரலாற்றோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. நீதி தவறிக் கோவலனை கொலை செய்வித்த பாண்டிய மன்னனைப் பழிவாங்கியும் மதுரை மாநகரினை எரிய+ட்டியும் சீற்றம் தணியாத கற்புக்கரசி கண்ணகியின் சீற்றத்தை தணித்து அவளைக் குளிர்விப்பதற்காக மதுரை நகரின் இடையர் சேரியில் வாழ்ந்த இளைஞர்கள் வடபுறம் இருந்தோர் வடசேரி என்றும் தென் புறம் இருந்தோர் தென்சேரி என்றும் பிரித்து மஞ்சள் கொம்பெடுத்து முதல் முதலில் கொம்பு விளையாடினர் எனக் கூறப்படுகின்றது. இதனை பின்பற்றி கொம்பு விளையாட்டை ஒரு கண்ணகி வழிபாட்டு முறையாக ஆதிகாலம் முதல் மட்டக்களப்பார் போற்றி வந்துள்ளனர். ஆவணி அல்லது புரட்டாதி மாதங்களில் ஒரு பருவகால நிகழ்ச்சியாக இவ்விளையாட்டு நடாத்தப்பட்டு வந்துள்ளது. ஆதிக்குடிகள் வாழ்ந்த இடங்களிலும் அவை பின்பற்றிய சில இடங்களிலும் வைகாசி, ஆடி மாதங்களிலும் கொம்பு விளையாடியமை அறியக்கூடியதாகவுள்ளது.இதைவிட நோய் நோடி இன்றியும், மழை வேண்டியும் செல்வம் செழிபுற்று விளங்கவும் கண்ணகிக்கு நேர்த்தி வைத்து கொம்பு விளையாடும் மரபும் இருந்து வந்திருக்கின்றது.

இங்கு தந்தை வழியிலே சேரி(வாரம்) பிரித்துக் கொள்கின்றனர். தந்தை வடசேரியாயின் பி;ள்ளைகளும் அச்சேரியாய் இருப்பர். தாய்மாற்றுச்சேரியில் இருப்பது தவிர்க்க முடியாததாயிற்று. கொம்பு விளையாட்டை பெருவிழாவாக கொண்டாடுவதற்கு விளையாட்டில் இடம் பெறாத ஏனைய நிகழ்வுகள் முக்கிய காரணங்களாக அமைகின்றன. அவையாவன

 போர்தேங்காய் அடித்தல்  மாலைவேளை ப+சையும், வெற்றிக் கொம்பு முறித்தலும்  வசந்தன் ஆடல்  ஏடகம் கட்டி ஊர் சுற்றுதல்  கொம்புக்கு மந்திரக்கிரியை செய்தல்  கொம்பு தட்டெடுத்தல்  வசை பாடல்  குளிர்த்தில் ஆடல்

கொம்பு விளையாட்டு பொருட்கள் கொம்பு இங்கு வளைவான “ட” வடிவில் அமைந்த கம்பு அல்லது மரக்குற்றி கொம்பு எனப்படும். இதற்கு கரையாக்கு, விளினை, விடத்தல், கோணியப்ப+றி ஆகிய மரங்கள் பயன்படுத்தபடும். கொம்புகளை இம்மரங்களில் இருந்தும் இவற்றின் வேர்களில் இருந்தும் மரமும் வேரும் இணைந்தவையாகவும் வெட்டியெடுப்பர். கொம்புகளை வெட்டும் போது மேல்பகுதி அல்லது தலைபகுதி ஒரு அடி வரை நீண்டதாகவும் கீழ்பகுதி அல்லது கடைக்காலப்பகுதியை ஒன்றரை அடி நீளம் வரை அறுத்தெடுப்பர். கொம்பின் மேற்பகுதியை தலையென்றும் முடக்குப்பகுதியை கழுத்து என்றும் அதற்கு கீழ் கொம்புகள் பொருந்துகின்ற பகுதியை மார்பென்றும் கீழ்பகுதியை கடைக்கால் என்றும் குறிப்பிடுவர். கொம்புகளை தெரிந்தெடுக்கும் போது தென்சேரிக் கொம்பு செங்கோணமாகவும், வடசேரி கொம்பு சற்று விரிந்த விரிகோணமாகவும் இருக்கக் கூடியதாக பார்த்துக் கொள்ளுவர்.

பில்லி கொம்பு விளையாட்டின் போது கொம்புடன் இணைத்து வரியப்படும் தடி பில்லி எனப்படும் இதற்கு விளினை, கரையாக்கு, வெள்ளைக்கருங்காலி, முதிரை, பாலை முதலிய பாரங்கூடிய மரங்களை பயன்படுத்துவர். ஏறத்தாள 10” சுற்றளவுள்ள கம்புகள் இதற்கு பொருத்தமானவை. இதனோடு இணைக்கப்படும் அடையைக் காட்டிலும் இது இருபுறமும் 6” வரையும் நீளம் கூடியதாகவிருக்கும். பொதுவாக 4அடி அல்லது 4.25அடி நீளமானதாக பில்லிகள் அமைந்திருக்கும். அடை பில்லியுடன் இணைத்து கட்டப்படும் கம்புக்கட்டு அடை எனக்கூறப்படும். இது தாய் அடை, முதலாம் அடை, இரண்டாமடை, என கொம்பின் பருமனுக்கமைய பெருத்துச் செல்லும் தாயடைக்கு 4”ஓ 4” அளவிலான நான்கு நீளக்குற்றிகள் சேர்த்துக் கட்டப்படும். சுற்றடைகளுக்கு சுமார் 10” அளவான உருண்டைக் கம்பகள அடுக்கப்படும் அடை பொதுவாக 3.5” அடி நீளம் கொண்டதாக அமையும். அளவில் பெரிய கொம்புகளுக்கு இதன் நீளம் மேலும் அதிகரிக்கலாம். பொதுவாக அடைக்கு வெள்ளைக் கருங்காலி, முதிரை வெடுக்குநாறி, காட்டுக்கொக்கட்டி முதலிய பாரமான மரங்களை தேடியெடுப்பர்.

ஆப்பு தெகிழக்கொடியால் வரிந்து கட்டப்பட்ட அடையை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒரு பக்கம் கூராக்கப்பட்ட ஆப்பினை இடையில் புகுத்தி ஏற்றுவர். இத்தகைய ஆப்புக்கு புளியை அல்லது மயிலடிக்குருந்தை மிக்க பொருத்தமானதென்பர். இதனை அடித்து ஏற்றுவதற்கு முதிரை, திருக்கொன்றை, பாலை முதலிய பாரமான மரங்களைக் கொண்ட தட்டுக் குற்றிகளைப் பயன்படுத்துவர். நெஞ்சடிப்பலகை பில்லியுடன் இணைத்து தாயடை கட்டப்பட்ட பின் பில்லியின் மேற்புறமாகவும் அரிப்பின் கீழ் புறமாகவும் செருகப்படும் பலகை நெஞ்சடிப்பலகையாகும். இது ஆறங்குல அகலம் கொண்டதாகவும் அடையின் அளவு நீளம் கொண்டதாகவும் இருக்கும் பின்புறம் இரண்டங்குலம் தடிப்பாகவும் மன் தள்ளப்படும் பககம் கால் அங்குல தடிப்பு கொண்டதாகவும் இப்பலகை கூம்பிச் செல்;லும். இதற்கு முதிரைப்பலகையை உகந்ததாக கொள்வர். தாய்மரம் கொம்பு விளையாடுவதற்கு பொருத்தமான மரத்தைப் பொறுத்து இதற்குரிய இடம் தீர்மானிக்கப்படும் கோயில் வீதியில் பொருத்தமான மரம் இருந்தால் அதற்கே முன்னிரிமை வழங்கப்படும் இல்லையேல் நாற்சந்திகளில் வயல்வெளிகளில் வேறு பொது இடங்களில் உள்ள பொருத்தமான மரங்களில் கொம்பு கட்டுவர். கொம்பு கட்டுகின்ற மரத்தை தாய் மரம் என்றழைப்பது வழக்கம். ஆலை, அரசை, வம்மி, வாகை, காட்டுத்தேங்காய், முதலிய பல சாதி மரங்களிலும் கொம்பு கட்டியதை அறியக்கூடியதாகவுள்ளது. இம்மரம் 6’ சுற்றுக்கு குறைவில்லாமல் இருப்பது அவசியம். மரத்தில் மேற்பகுதி செவ்வாய்க்குற்றி சரித்து வைக்க கூடிய அளவு ஏழு அல்லது எட்டு முழ உயரத்தில் கிளைகள் விசிறியிருத்தல் வரவேற்க்கதக்கத. மிகப்பெரிய மரமாக இருந்தால் மரத்தில் துளையிட்டு அதன் ஒரு பகுதியை மட்டும் இதற்க பயன்படுத்துவதையும் காணலாம்.

செவ்வாய்க்குற்றி பனை மரத்தின் அடிப்பகுதியை தலைகீழாக நாட்n செவ்வாய்க்குற்றியாக பயன்படுத்துவர். பத்துவிரலிடை அளவிற்குட்பட்ட கொம்புகளுக்கு பதினொரு முழமும் அதற்கு கூடிய கொம்புகளுக்கு பதினொரு முழமும் அதற்கு கூடிய கொம்புகளுக்கு பன்னிரெண்டு முழமும் இதன் உயரமாக இருத்தல் போதுமென்பர். செவ்வாய் குற்றியின் உயரத்தை தீர்மானிப்பதற்கு கொம்பின் அளவோடு நாட்டப்படும் நிலத்தின் தன்மையும் அவதானிக்க வேண்டும் கிட்டித்த நிலத்தில் இதனை ஒன்றரை முழமளவில் தாழ்ப்பதும் மணற்பாங்கான இடத்தில் 2முழம் தாழ்ப்பதும் அவசியமாகும்.

மரவளையம் கொம்பு இழுவைக்காக தாய் மரத்தை சுற்றிப் போடப்படும் வளையம் மரவளையமாகும். இது பருமன்கூடிய கருந்தெகிழக் கொடிகளை பலமுறை சுற்றி பின்னப்படுவது. சாதரணமாக இதன் சுற்றளவு ஒரு முழத்துக்கு மேல் இருக்கும். செவ்வாய்க்குற்றி வளையம் கொம்பு இழுவைக்காக மர வளையம் போல செவ்வாய்க்குற்றியை சுற்றி போடப்படும் வளையம் செவ்வாய்க்குற்றி வளையம் ஆகும். இதுவும் மரவளையப் பருமன் அளவு கருந்தெகிழங் கொடியால் பின்னப்படும் என்பதுவும் இது போடப்படும் உயரம் மரவளையத்திற்கு சமனாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரிப்பு இத பல சுற்று கயிற்றாலாயது தென்சேரிக் கொம்பை தாய்மர வளையத்துடனும் வடசேரிக் கொம்பை செவ்வாய்க்குற்றியுடனும் இணைப்பதற்கு கொம்பு விளையாட்டின் போது இரண்டு அரிப்புக்கள் பயன்படுத்தப்படும். முன்பு ஆத்தி, நறுபுணி, நார்பட்டு தெகிழை ஆகிய மரங்களிலும் கொடிகளிலும் இருந்து பெறப்பட்ட நார்களைக் கொண்டு புரிவிட்டு திரிக்கப்பட்ட கை பெருவிரல் அளவினதான கயிற்றினால் அரிப்பு வளைக்கப்படும். வடம் தாங்கி இரண்டு அரிப்புக்களையும் மரவளையத்திலும் செவ்வாய்க் குற்றி வளையத்திலும் உட்புறமாக கீழ் இருந்து மேல் நோக்கி எடுத்து இழுபடாத வண்ணம் மாட்டிவிடும் தடிகள் “வடம் தாங்கி” எனப் பெயர் பெறும். இதற்கு முதிரை, வெள்ளைக்கருங்காலி, விற்பனை முதலிய உறுதி கூடிய மரங்களை பயன்படுத்துவர். வடம் செவ்வாய்க்குற்றியின் மேற்புறமாகத் துளையிட்டு புகுத்திய ஆப்பில் இரண்டு பக்கமும் கொழுவி இரு சேரியாரும் தனித்தனியாக இழுக்கப்பப் பயன்படும் கயிறு வடமாகும். கொம்பு விளையாட்டு நிகழ்ச்சிகள்

1. பொருட்களை தேடி எடுத்தலும் தயார்படுத்தலும் 2. கொம்பு தூது பிடித்தல் 3. பொம்புகளை வரிதல் 4. கொம்புகளைப் ப+ட்டுதல் 5. அடை கட்டலும் ஆப்படித்தலும் 6. தாய் மரத்துக்கும் செவ்வாய்க் குற்றிக்கும் இடையில் இணைத்தல் 7. அடை பிடித்தலும் வடம இழுத்தலும் 8. வெற்றி தோல்வி தீர்மானித்தல்

கொம்பு விளையாட்டின் போட்டியாக பல கொம்பு விளையாட்டுப் பாடல்களும் படிக்கப்படும். உதாரணமாக

கோலாம்பணிச்சேலை கொய்துடுத்துக் 
   கொம்பு விளையாட்டுக்குப் போகையிலே

வேலப்பர் வந்து மடிபிடித்து

   மெத்தவுஞ்சிக்ககிக் கொண்டார் தோழி ……..

காப்பணி மங்கையர் மன்மதவேள் கந்தன் குமரன் அருள்வேலன் சீப்புடன் மல்லிகைப் ப+மாலை தந்து சேர்வமென்றாரடி தோழிரே

தோழியொரு வசனம் சொல்கிறேன் கேளடிநற்றோழி வாளிதந்தென்னையு மேயிங்கு வரச் சொன்னாரடி மானாரே போன்றவை கொம்பு விளையாட்டின் போது இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசாரபேரவையும் இணைந்து எமது பாரம்பரியங்களை இளம் தலைமுறைகளுக்கு வழங்கவேண்டும், பாரம்பரியங்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வருடம் கொம்பு நிகழ்வினை மிகச் சிறப்பாக நடத்தியிருந்தனர். இதன்போது போர்த்தேங்காய் அடித்தல், 1ம் கொம்பு முறி, 2ம் கொம்புமுறி தாய்க்கொம்புமுறி, குளிர்த்தில் ஆடுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது. சின்னஞ் சிறுவர்கள் இருந்து முதியவர்கள் வரை இதனை பார்க்க வேண்டும் எனும் ஆவர்த்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தமை இவ்விளையாட்டுக்கு கிடைத்த வெற்றியாக அமைந்தது. இதனை நடாத்தி முடிக்கும் வரை பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் இருந்தாலும் அனைவரினதும் அயராத உழைப்பாலும், மனோபலத்தாலும் சிறப்பாக நடந்தேறியதுடன், கொம்பு விளையாட்டு வைப்பதாக கலாசாரபேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதில் இருந்து இதை அறிந்த இளைஞர்கள், சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் எப்படி விளையாட்டு, எவ்வாறு விளையாடுவது, ஏன் விளையாடுவது என பல கேள்விகளை எழுப்பி பதில்கள் கண்டதை காணக்கூடியதாக இருந்தது. இதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை காணமுடிந்தது. 17வருடங்களின் பின் இடம்பெற்றதால் தாங்கள் எந்த சேரி எவ்வாறு சேரி பார்ப்பது எனத்தெரியாத சிறுவர்கள், இளைஞர்கள் பலர் தங்களது சேரியினை தங்களது தந்தையிடம் கேட்டறிந்து தங்களது சேரி வெற்றிபெற வேண்டும் எனும் எண்ணத்தில் ஆராவரம் செய்தமையும், உண்வோடு செயற்பட்டமையும் பார்க்க முடிந்ததது. கொம்புக்கு அடை கட்டுதல், ஆப்பு அடித்தல்,செவ்வாய்குற்றி நடல் என எல்லா சந்தர்ப்பங்களின் போதும் தங்களை தாக்காத வகையில் உரியமுறையில் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துகின்றனரா? இல்லையா? என உன்னிப்பாகவும் அவ்வாறு தவறின் அது பிழை என்று உறுதியாக இரு சேரியாரும் நின்றமையை அவதானிக்கமுடிந்ததது. கொம்பு விளையாட்டின் பொது ப+சைகள் நடந்தேறியதன் பின்பே விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் அனைத்து நிகழ்வுகளிலும் அதிதிகளை அழைத்து வருவதற்காக வசந்தன் மற்றும் கோலாட்டம் குரவை போடுதல் காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு இறுதிநாள் தாய்க்கொம்முறி விளையாட்டின் போது இரு சேரியாரும் தங்களது ஏடகங்களில் கொம்புகளை அமர்த்தி ஊர்வலமாக பல்வேறு கலாசார நிகழ்வுகளுடன் விளையாட்டு இடம்பெறும் இடத்திற்கு அழைத்து வந்து விளையாட்டுக்கள் இடம்பெற்றது. மொத்தத்தில் கொம்பு விளையாட்டு என்பது எல்லோரையும் ஒன்று சேர்க்கின்ற இடமாகவும், ஒரு களியாட்ட நிகழ்வாகவும், இறைநம்பிக்கையையும், பக்தி உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.