பயனர்:1234Shriya/மணல்தொட்டி
பயனியர் (Pioneer) அறிமுகம் சிங்கப்பூரின் மேற்குப் பிராந்தியத்தின் நகரத் திட்டமிடல் பகுதி பயனியர் ஆகும். இதன் பரப்பளவு 12 சதுர கி.மீ ஆகும். பயனியர் வட்டாரத்தைச் சுற்றி ஜூரோங் மேற்கு, பூன் லே, துவாஸ் பகுதிகள் அமைந்துள்ளன. இதன் வடமேற்குப் பகுதியில் நீர்ப்பிடிப்பு நிலை ஒன்றும் அமைந்துள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் வசதிகளும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு வசதியாகப் பயனியர் பெருவிரைவு இரயில் நிலையம் அமைந்துள்ளது. துவாஸ், பூன் லே வட்டாரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை பயனியர் சாலையாகும். இங்குள்ள பயனியர் சமூக மன்ற விளையாட்டு அரங்கம் வெளிப்புற விளையாட்டிற்குச் சிறந்த இடமாகும்.
தொழிற்துறை கட்டமைப்பும் மேம்பாடும் சிங்கப்பூர்த் தொழில்துறைக்குப் பயனியர் வட்டாரம் முக்கிய மையமாகச் செயல்படுகிறது. பயனியர் வட்டாரத்திலுள்ள மிகப்பெரிய கப்பல் பட்டறைகள், எண்ணெய்-எரிவாயு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கின்றன. பெரும் தளவாடக் கூடங்கள், கப்பல் சரக்கு வாணிபத் தொழிலுக்குப் பெரும்பங்கை ஆற்றுகின்றன. துவாஸ் கடற்படைத் தளமும் பயனியரில்தான் அமைந்துள்ளது. தனித்துவம் வாய்ந்த ஜூரோங் தீவுத் தொழிற்கூடத்தின் பிரதான வாயிலாகப் பயனியர் வட்டாரம் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
வசதிகள்
துவாஸ் கடல் உணவகம் பயனியர் வட்டாரத்தில் பிரபலமானது. ‘நன்யாங்’ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆகப்பெரிய வளாகம் பயனியர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. மேலும், தேசியக் கல்விக் கழகமும் இப்பயனியர் வட்டாரத்தில்தான் உள்ளது.
போக்குவரத்து வசதிகள்
பூன் லே பெருவிரைவு இரயில் நிலையத்திலிருந்து பயனியர் பெருவிரைவு இரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 28இல் பயனியர் பெருவரைவு இரயில் நிலையம் திறக்கப்பட்டது. இரயில் தண்டவாளத்தில் பொதுமக்கள் விழுவதைத் தவிர்க்க கண்ணாடித் திரைக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
சங்கர் இராமன் ஸ்மிருதி (2E1) யூனிட்டி உயர்நிலைப்பள்ளி
Sankar Raman Smrithi (2E1) Unity Secondary School