பயனர்:2130704raguman/மணல்தொட்டி
கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
கிராமத்து வெள்ளந்தி மனிதர்க ள் காட்டும் விருந்தோம்பல் மனசுக்குள் எப்பவும் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை மறக்கடிக்கச் செய்யும். பசித்த வேளையில் வந்தவர்க ளுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்ப ல். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வு நம் கண் முன் காட்சியாகிறது.
சு ப்பையா வின் பு ஞ்சை யில் அ ரு கு
எடுத்துக் கொண்டிருந்தார்கள் .
அதிகாலை நேரத்தில் ஒரு பாச்சல் அருகு
எடுத்து முடித்துவிட்டுக் காலைக் கஞ்சி குடிக்க
உட்காரப் போகும் வேளை , யாரோ ஒரு
சன்யாசியைக் கூட்டிக்கொண்டு அன்னமய்யா
தூரத்தில் வருவது தெரிந்தது. வாயிலிருந்த
பல்க்குச்சி யை எ டு த் து த் து ப் பி வி ட் டு
சுப்பையா கேட்டா ன், ”யாரோ ஒரு சாமியாரை
இழுத்துட்டு வாரான்?”
விரிவானம்
கிராமத்து வெள்ளந்தி மனிதர்க ள் காட்டும் விருந்தோம்பல் மனசுக்குள்
எப்பவும் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும்
எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை
மறக்கடிக்கச் செய்யும். பசித்த வேளையில் வந்தவர்க ளுக்குத் தம்மிடம்
இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்ப ல்.
அப்படி நடக்கும் ஒரு நிகழ்வு நம் கண் முன் காட்சியாகிறது.
”வரட்டும் வரட்டும்; ஒரு வயித்துக்குக்
கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்” என்றார்
கொத்தாளி.
அ ந்த ப் பு ஞ்சை ர ோ ட் ட ோ ர த் தி ல்
இருந்ததால் இப்படி தேசாந்திரிகள் வந்து
இவர்களிடம் தண்ணீரோ கஞ்சிய�ோ சா ப்பிட்டு
விட்டுப் போவது வழக்க ம்.
அ ன்ன ம ய்யா வி ன் கூட வ ந்த து
சன்யாசிய�ோ பரதேசிய�ோ இல்லை. அந்த ஆள்
நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திருந்து ஆயாசமாக, மெதுவாக நடந்து
வந்து கொண்டிருந்தான். தாடியும் அழுக்கு
ஆடையும் அந்தத் தள்ளாட்டமு ம் ஒ ரு
பார்வைக்கு வய�ோதிகனாகவும் சாமியாரைப்
போலவும் தோணவைத்த து. தற்செயலாக
அந்தப் பக்கம் வந்த அன்னமய்யாவி ன்
கண்ணில் இதுப ட்டது. கி ட்டே போய்ப்
ப ார்த்த பி ற கு த ா ன் தெ ரி ந்த து அ வ ன்
ஒரு வாலிபன் என்று. கால்களை நீட்டி,
புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த
அவனை நெருங்கிப் போய்ப் பார்த்தபோது,
ப சி யா ல் வ ா டிப் ப ோ ய் வி ட்ட அ ந்த
முகத்தில் தெரிந்த கண்களின் தீட்சண்யம்,
கவனி க்க க் கூ டி ய த ா ய் இ ரு ந்த து .
அன்னமய்யாவை ப் பார்த்த தும் அவன் ஒரு
சிறு புன்னகை காட்டினான். பேசுவதற்கு
இ ஷ ்டப்ப ட ா த து ப ோலிரு ந்த து அ வ ன்
இருப்பு. அந்த ரோடு வழியாக எத்தனைய�ோ
வகை தேசாந்திரிகள் வகைவகையான
மொழியில் புரியாதபடி பேசிக் கொண்டு
ந டந்து வருவ ார்கள் . அ வ ர்க ளி ல்
முக்கியமான வர்கள் லாட சன்யா சி கள்.
அவர்கள் வேட்டிகட்டிக் கொண்டிருப்பதே
ஒரு தினுசு! இடுப்பை மறைத்த வேட்டி
அதன் ரண்டு சொருகுநுனிகளும் குறுக்க
ம றுக்க மா ர்பின் மேலே றிப் பி ட ரி யி ல்
வந்து முடிச்சாகி இருக்கும். வேட்டியே,
வேட்டியும் மேல் வேட்டியுமாக அவர்கள்
அ ப்ப டி அ தை உ டுத்தியிரு ப்பதை ப்
பார்க்கும் கோபல்லபுரத்துக் குழந்தைகள்,
அதேபோல் தங்கள் தகப்பனார்களின் மேல்த்
துண்டுகளை எடுத்து உடுத்திக் கொண்டு
லாட சன்யாசி விளையா ட்டு விளையாடியது
அன்னமய்யாவுக்கு ஞாபகம் வந்தது.
தன்னைப் பார்த்து ஒரு நேசப் புன்னகை
காட்டிய அந்த வாலிப மனிதனிடம் போய்
கிட்டே நின்று பார்த்துக் கொ ண்டே இருந்தான்
அன்னமய்யா வாய் திறக்கா மல்.
கொஞ்சம் அலுப்புத் தீர்ந்த வுடன், ”தம்பி,
கொஞ்சம் குடிக்க த் தண்ணி கிடைக்குமா?”
என்று தமிழில் அவன் பேசியது இவனுக்கு
ரொம்ப ஆச்ச ரி ய ம ா க சந் த ோஷம ா க
இருந்தது. ”இந்தா பக்க த்துல அருகெடுத்துக்
கிட்டிருக்கி றவ ங ்க கி ட்ட நீச்சுத் தண்ணி
இருக்கும்; வாங்கிட்டு வரட்டுமா?”
”நீச்சுத் தண்ணி”? என்று தனக்குள் அந்த
வாலிபன் சொல்லிப் பார்த்துக் கொள்வது
தெரிந்த து. கொஞ்ச ம் கை அமர்த்திவிட்டு,
நாமே அங்கே போய்விடலாமே என்பது
போல் அங்கே அவர்களைப் பார்த்தான்.
எழுந்திருப்பதுக்கு ஒத்தாசனையா க நீட்டிய
கையை நன்றியுடன் மறுத்துவிட்டு அவனே
சிரமப்ப ட்டு எழுந்து நின்றான்.
”எங்கிருந்து வர்ரீங்க?”
கேள்விக்குப் பதில், அலுப்புடன் கூடிய ஒரு
இதழ் விரியாத சிரிப்பே பதிலாக வந்தது.
சொல்லுகிறேன் என்றும் இப்பவே அது
தேவைதானா என்றும் இப்ப அதெல்லாம்
எதுக்கு, க ொஞ்ச ம் பொ று எ ன்ப து
போலெல்லாம் இருந்தது அந்தச் சிரிப்பு.
அன்னமய்யா தனது தோளைப் பிடித்துக்
கொண்டு நடந்து வரும்படியாகக் கேட்டப ோதும்
அந்த ஆள் அதே சிரிப் போடு மறுத்துவிட்டு
அவனோடு மெதுவாக நடந்து வந்தான்.
ஒரு வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட
மண் கலயங்கள் இருந்தன. அந்தக் கறுப்புக்
கலயங்கள் அந்தக் கரிசல் மண்தரையில் பாதி
புதைக்கப்பட்டிருந்தன. தேங்கா ய்ப் பருமனுள்ள
கற்களா ல் அந்தக் க ல ய ங ்களின் வாய்
மூடப்பட்டிருந்தது. காகங்கள் வந்து கஞ்சிக்
கலயங்களை உருட்டிவிடாமலும் அலகை
நுழைத்து அசிங்கப்படுத்திவிடாமலும் இருக்க
இந்த ஏற்பாடு என்று அந்த மனிதன் பிறகு
கேட்டுத் தெரிந்து கொ ண்டா ன்.
அன்னமய்யா ஒரு கலயத் தின்மேல்
வைக்கப்பட்ட கல்லை அகற்றினான். ஒரு
சிரட்டையில் காண த்துவையலும் ஊறுகாயும்
இருந்தது. சிரட்டையே அந்தக் கலயத்தின்
வ ா ய்மூடி யா கவும் அ மை ந்திரு ந்த து .
இன்னொரு கலயத்தின் மேலிருந்த கல்லை
எடுத்துப் பார்த்தபோது அதேபோல் இருந்த
சிரட்டையில் மோர்மிளகாய் மட்டுமே இருந்தது.
அதை இந்தச் சிரட்டையில் தட்டினான் .
சிரட்டையைத் துடைத்துச் சுத்தப்படுத்தினான்.
அந்தக் கலயத்தைப் பதனமாகத் தனது வலதுபாதத்தின்மேல் வைத்து, சிரட்டையில்
நீத்துபாகத்தை வடித்து அவனிடம் நீட்டினான்.
கை யில் வ ாங் கி ய து ம் சப் பிக்குடி ப்பதா
அண்ணாந்து குடிப்ப தா என்கிற தயக்கம்
வந்தபோது ”சும்மா கடிச்சிக் குடிங்க” என்றான்.
உறிஞ்சும்போது கண்கள் சொருகின. மிடறு
தொண்டை வழியாக இறங் குவதன் சொகத்தை
முகம் சொல்லியது.'உக்காருங்க. உக்காந்து
குடிங்க' என்று உபசரித்தா ன்.
உ ட்கார்ந்த பி ற கு, ர ண ்டா வ து
சி ரட்டைக்குக் கல யத்தை ப் ப ா த த் தி ன்
பேரிலேயே வைத்துச் சுற்றி ஆட்டியதும்
தெளிவு மறை ந்து சோற்றின் மகுளி மேலே
வந்ததும் அதை வார்த்துக் கொடுத்தான். அதை
உறிஞ்சிக் குடிக்கும் போது ”ஹ!” என்கிற
அனுபவிப்பின் குரல் அவனிடமிருந்து வந்தது.
க லயத்திலிருந்து சிரட்டை வழியாக
மடக்கு மடக்கா ய் அவனுள் ஜீவஊற்று
பொங்கி நிறைந்து வந்தது.
சிரட்டையைக் கையளித்துவிட்டு அப்படியே
அந்த வேப்ப மரத்து நிழலே சொர்க்க மாய்ப்
படுத்ததும் அவனைத் தென்னல்க் காற்றே
தூக்கமாக வந்து அயரச் செய்தது.
வ ந்த வனுக்கு எப்ப டி ஒரு நிறை வு
ஏற்பட்டதோ அதைவிட மேலான ஒரு நிறைவு
அன்னமய்யாவு க்கு ஏற்பட்ட து . மார்பி ல்
பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே
வயிறு நிறைந்த தும் அப்படியே தூங்கிவிடும்
குழந்தையைப் பார்ப்பதுபோல அவனை ஒரு
பிரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்
அன்னமய்யா.
அந்த வரத்துக்காரனின் சிறு தூக்க ம்
முடியும்வரை அன்னமய்யா காத்திருந்தான்.
அந்தப் பக்க த்தில் தொகுதி தொகுதியாக
அருகு எடுத்துக் கொண்டி ரு ந்தார்கள்.
கரிசல் காட்டுச் சம்சாரிகளுக்கு அருகு ஒரு
அரக்கன். வெட்ட வெட்டத் தலைமுளைப்ப து
போல அவர்களோடு அது விளையாட்டுக்
க ா ட்டிக் க ொண்டி ரு ந்த து. க ள் ளிக்கு
ஒரு வெ ள ்ள பூ ச் சி யை க் கண்டுபிடி த்த
வெள்ளைக்காரன், அருகை அழிக்க ஒரு
மருந்து கண்டுபிடிக்கல்லையே என்கிற கோபம்
சம்சாரிகளுக்கு. ”அருகு எடுக்கிறதுலேயே
நம்ம வாழ்நாள் முக்காவாசி போயிரும்
போல” சடைத்துப் புளித்துப் போவார்
அன்னமய்யாவின் பாட்டனார்.
அ ன்ன ம ய்யா வி ன் பு ஞ்சை க்குப்
பக்கத்துலதான் சுப்பையா வின் புஞ்சையும்.
அங்கே போனால் சுப்பையா வும் இருப்பான்.
இவர் எழுந்திரிச்சதும் அ ங்கே கூட் டி க்
கொண்டு போவோம் என்று நினைத்தப ோது
அந்த ஆளிடம் ஒரு அலுக்க ம் தெரிந்தது.
சரி; முழிப்பு வந்தாச்சி என்று நினைத்துப்
பார்த்தபோது அந்த ஆளிடமிருந்து நன்றி
கலந்த புன்னகை வெளிப்பட்ட து.
எழுந்திரு க்க மன சி ல்லா ம ல்
படுத்துக்கொண்டே பேசினான் அந்த ஆள்.
உங்கள் ஊர் பெயரென்ன? என்று கேட்டான்.
தெரிந்துகொ ண்டப ோ து அந்தப் பெயர்
அவனுக்கு விநோ தமாகத் தெரிந்திருக்க
வேண்டும் போலப் பட்டது.
”எங்கருந்து வர்ரீங்க. எங்க போகனும்?” “ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென்;
எங்கதெ பெரிசு!” என்றான். தம்பீ ஓம்
பெயரென்ன?”
“அன்னமய்யா”
வந்தவன் அந்தப் பேரை மனசுக்குள்
திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக்
கொண்டான். எவ்வளவு பொருத்த ம் என்று
நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது!
’எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்’...
பதிலுக்குப் பெயர் என்ன என்று கேட்க
வேண்டும் போல் தோன்றியதால் அன்னமய்யா
கேட்டான். கொஞ்சம் தயங்கியபின் என்னோட
சொந்தப் பெயர் பரமேஸ்வரன். அதை
இப்போதைக்கு மறந்துரு. இப்பொப் பேர்
மணி. மணின்னே கூப்பிடு. நா எங்கிருந்து
வ ர்றேன்ங் கி றதெல்லா ம் சா வ காச மாச்
சொல்றேன் என்று சொல்லிவிட்டு, ” இப்போ
நாம எங்க போகணும் சொல்லு” என்று
கேட்டான். ”அந்தோ… அங்கெ,” என்று கை
காட்டினான். ”அங்கெ என்னொட பிரண்டு -
சுப்பையா ன்னு பேரு - காலே ஜ்ல படிக்கான்.
லீவுக்கு வந்திருக்கா ன். அவங்க பிஞ்சை யிலேயும்
அருகெடுக்கிறாங்க, அங்க போவமா?”
”ஓ! போவமே”
அன்னமய்யாவையும் புதுஆளையு ம்
அவர்கள் மந்தகாசத்துடன் வரவேற ்றார்கள்.
புதாளை அவர்கள் தங்கள ோடு உண்ணும்படி
உ பச ரி த்தார்கள். மணி அவ ர்களோ டு
வ ட்ட த்தில் சே ர்ந்து உ ட்கார்ந்தா ர் .
கையை க் கழுவிக் கொள்ளவேண்டு ம்
என்று அவருக்குத் தோன்றியது. ஆனால்
அ வ ர்களில் யா ரு மே சா ப் பி டு வ த ற் கு
முன்னால் கையைக் கழுவிக் கொள்வதாகத்
தெ ரி ய வி ல்லை ! அ வ ர்க ளு க்கா ன து
நமக்கு என்று அவர் கையை நீட்டினார்.
ஒரு கால் உருண்டை கம்மஞ்ச ோற்றை
அவருடைய இடதுகையில் வைத்தார்கள் .
இடது கையிலா என்று தயங்கினார். ஆம்
இடது கையில்த் தான் என்று தெரிந்தது.
அன்னமய்யாவும் சுப்பையா வும் அப்படித்தா ன்
பெ ற் று க்க ொண்டார்கள் . அ வ ர்களை ப்
பார்த்து அவரும் இடதுகைச் சோற்றில் ஒரு
சிறூ பள்ளம் செய்து கொண்டார். அந்தப்
பள்ளத்தில் துவையலை வைத்தார்கள் . சிறிது
சோற்றை எடுத்துத் துவையலில் பட்டதோ
படலைய�ோ என்று தொட்டு கழுக் என்று
முழுங்கினார்கள். யாரோடும் யாரும் எதுவும்
பேசிக்கொள்ளவில்லை. முழுங்குவதிலேயே
கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் ! அவர்கள்
உண்ணுகிற வேகம் ஆர்வம் அனுபவிப்பு
இதெல்லாம் பார்த்தப ோது இந்த உணவு
எவ்வளவு ருசியாக இருக்குமோ என்று பட்டது
மணிக்கு. முதலில் கொஞ்சம் வெறும் சோற்றை
எடுத்து ருசி பார்த்தார். அந்தச் சோற்றின் நெடி
அவரை என்னவோ செய்தது! துவையலோடு
சே ர்த்துச் சா ப் பி ட்டா ல் க ொஞ்ச ம்
பரவாயில்லை என்பது போல்ப் பட்டது. அந்தக்
க டுமையான பசியிலும் அவரால் அ ர ை
உருண்டைக்கு மேல் சா ப்பிட முடியவில்லை.
அன்னமய்யாவும் சுப்பையா வும் ஆளுக்கு
ஒரு உருண்டைதான் சா ப்பிட்டார்கள் . சா ப்பிட்டு
முடித்து அவர்கள் மண்ணினால் கைகளைச்
சு த்தப்ப டுத்தி யதைப் ப ா ர் த் து அ வ ரு ம்
அதேபோல் மண்ணை எடுத்து கைகளில்த்
தேய்த்துச் சுத்தப்ப டுத்திக் கொண்டா ர்.
அவர்கள் சா ப்பிட்டு முடிந்ததும் கொஞ்ச ம்
ஓய்வாக உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேச
ஆரம்பித்தார்கள். சுண்ணாம்பு கேட்கவும்
தீப்பெ ட்டி கேட்க வும் சிலர் பக்கத்துத்
தொ குதிகளிடம் ப ோ ன ார்கள் . ம ணி
திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்களை
மூடிக்கிடந்தார்.