பயனர்:2211179yokesh/மணல்தொட்டி

வருங்காலத் தூண்கள் “தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்று பராசக்தியிடம் முறையிட்டானே எட்டயபுரத்து இளைஞன் அவன் வழி வந்த இளைஞர்கள் தானே இனி வரும் இந்தியாவின் வருங்காலத் தூண்கள… அருள் கொடுக்கும் அன்பு , பொருள் கொடுக்கும் பண்பு , பெருக்கெடுக்கும் அறிவு , விரிந்து ஒழுகும் சிந்தனை உலகில் இவைகளெல்லாம் உன்னைப்போல் எவருக்காவது உண்டோ …மெச்சிக்கொள்ளடா இளைஞனே ! உன்னைப்போல் இன்னொருவன் இவ்வுலகில் இல்லை ஆக நீயும் உலக அதிசயம் தான்.

உலகின் இளமையான தேசம் இந்தியா . மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிப்பேர் இளைஞர்கள். இளைஞனே உலகில் என்றுமே தீர்ந்து போகாத விஷயங்களில் ஒன்று உழைப்பு. உலகில் உழைப்பை நீக்கி விட்டுப் பார்த்தால்  மிஞ்சுவது கல்லும் மண்ணுமே. உழைக்கத் தயங்காத இளைஞனுக்கு வானமே வசப்படும். முடியும் வரை முயற்சி செய் உன்னாc முடியும் வரை அல்ல, அச்செயல் முடியும் வரை, வெற்றியை நீ அடையும்வரை. இப்படி  வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசிக்கொண்டிருக்கும்  வீண்   வாதங்களிலிருந்து  தனித்திரு, நீயே உன்னை செதுக்கும்   உளியாக மாறு , தடைகளை   படிக்கட்டாக்கு , ஏணியை வானத்தில் போடு, தன்னம்பிக்கையை ஊன்றுகோல் ஆக்கு, வெற்றியை அடையும் வரை குன்றுபோல் நிமிர்ந்து நில்…
உலகமே பார்த்து பயந்து கிடக்கும் இந்திய இளைஞர் சக்தி, சம்பாதித்தால் போதும் சௌகரியமாக வாழ்ந்தால் போதும் என தன்னலம் ஆக குறுகிய வட்டத்துக்குள் சுற்றி வருகிறார்கள். வீட்டுக்கு வெளியே வீதி ஊர் மாநிலம் தேசம் என எல்லைகளை கடந்து வர வேண்டும் .
நம் கண்முன் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க வேண்டிய வீரம் நம்முள் வரவேண்டும்.அடிமைத்தனத்திற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, மனித உரிமை மீறலுக்கு எதிராக துடிக்கட்டும் நம் இதயம். 

இந்திய மண் வீரத்தின் சின்னம்…விவேகத்தின் அடையாளம்… கட்டபொம்மனின் கரம் பட்ட மண்…கண்ணகியின் கற்பு கொண்ட மண் …இமயவரம்பில் வெற்றி கண்ட மண்…ஜல்லிக்கட்டு எங்கள் வீர விளையாட்டு என்று வீரமும் விவேகமும் இணைந்த இளைஞர்கள் அல்லவா நாம் ! ஆனால் இளைஞர்கள் ஆகிய நாம் கவனமாக இருக்க வேண்டும்.கொஞ்சம் கவனம் சிதறினால் கூட நம்முடைய பொறுப்பும் ,அறிவும், திறமையும் , ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் பெயர் தெரியாத செல்லிடப்பேசியிலும், நபர் தெரியாத இணையதளத்திலும் அமிழ்ந்து போய் விடக்கூடிய அபாயம் இருக்கிறது . ஆனால் இன்று நம் நாட்டில் பிறர் உழைப்பை தன் வசமாக்கி பதுக்கும் கருப்பு பணத்தின் களை எடுக்கவே, காரியம் நடக்கவே கையூட்டு கொடுக்கும் கேவலமான பழக்கத்தின் போக்கை தகர்த்து எரியவே என் இளைய சமுதாயமே எழுந்திரு ! விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் ஐயா வரை கண்ட கனவு என்ன ? நாட்டின் நல்ல முதுகெலும்பாய் நற்பண்பு உடைய இளைஞர்கள் தாங்கி நிற்பார்கள் என்பதுதானே ? அவர்களின் கனவுகள் காற்றோடு செல்ல விடலாமா ?

தீமையைக் கண்டு தினவெடுக்கட்டும் உன் தோள்கள்….

அடக்குமுறையை கண்டு அஞ்சாமல் இமயம் என நிற்கட்டும் உன் கால்கள்…. மனதிலே உறுதிகொண்டு…நினைவிலே நற்சிந்தனை கொண்டு…நிமிர்ந்த நன்னடையும்…நேர்கொண்ட பார்வையும்…திமிர்ந்த ஞானச்செருக்கும் உண்மையும் இருப்பின், இந்தியாவின் வருங்காலத் தூண்கலாம் இளைஞர்களின் சிந்தனையிலும் செயலிலும் ஒளிவிடும் வல்லரசு இந்தியா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:2211179yokesh/மணல்தொட்டி&oldid=3604223" இலிருந்து மீள்விக்கப்பட்டது