பயனர்:AC.PALANISAMY/மணல்தொட்டி
குறுகிய கால மரம் வளர்ப்பு முறை புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசைதான், ஆனால் சிறிய மரக்கன்றுகளை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும்போது உள்ள சிரமங்கள் தான் மரம் வளர்க்கும் ஆசையை போக்கி விடுகிறது. குறிப்பாக ஆடு மாடுகள் மரக்கன்றுகளை கடிக்காமல் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டி இருப்பாதாலேயே மரம் வளர்ப்பு என்பது சற்று கடினமாகிறது பொருளடக்கம் 1.மரம் வெட்டி நடுதல் 2.மரம் நடும் காலம் 3.மரம் நடும் இடத்தில் செய்ய வேண்டியவை 4.மற்றுமொரு முறை
1.மரம் வெட்டி நடுதல்
விரைவில் மரம் வளர்ககத் கூடிய எளிதான முைற மரத்தை வெட்டி நடுதல் ஆகும். வெட்டி வைத்தால் நன்கு வளரக்கூடிய மரங்களுள் வேப்பமரம் முதன்மையானது. வேப்பமரம் குளுமையான காற்றைத் தருவதோடு மருத்துவ குணமும் உள்ளதால் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படுகிறது.
2.மரம் நடும் காலம்
மரம் வெட்டி நடுவதற்கு மிகவும் ஏற்ற காலம் மழைக்காலத்திற்கு முந்தைய மாதமாகும்ஃ ஏனெனில் வெட்டி நட்ட மரம் வேர் விட ஆரம்பிக்கும் போது மழைக்காலம் தொடங்குவதால் இதமான சூழ்நிலை நிலவும். இந்தச்சூழல் மரம் நன்கு வளர உதவும். மரங்களில் இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரையுள்ள மரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தோட்டங்களில் மொத்தமாக மரங்களை வாங்க முடியும். வேப்ப மரம் ஒன்று 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன. நேராக ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ள மரங்கைளத் தேர்வு செய்ய வேண்டும். மரத்தின் கிளைகளை முதலில் வெட்டி விட வேண்டும். பின்னர் மரத்தின் ஆணி வேர் தவிர மற்ற வெர்களை வெட்டி விட வேண்டும். பின்னர் மண்ணைத்தள்ளி மூடிவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து ஆணிவேரை வெட்டி எடுத்து மரத்தை உடனடியாக நடவேண்டும்.
3.மரம் நடும் இடத்தில் செய்ய வேண்டியவை
மரம் நடும் இடத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு அடி ஆழக்குழியை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தோண்டி வைத்திருக்க வேண்டும். மரம் நடும் நாளில் குழிக்குள் முதலில் மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களைப் போட வேண்டும். பின்னர் செம்மண் கொஞ்சம் போட்டு மூட வேண்டும். அதன்பின் மரத்தை நட்டு குழியை மண்போட்டு மூடவேண்டும். இப்படி நடும் மரங்களில் 100க்கு 99 சதவீத மரங்கள் முளைத்து விடும்.
4.மற்றுமொரு முறை
பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும். ஒரு கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, வெட்டப்பட்ட கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும். கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்த அளவு நீர் ஊற்றி வர வேண்டும். நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. இப்படி பராமரித்தால், 30நாட்களில் தளிர ஆரம்பித்து, 90 நாட்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்து விடும். வேம்பு, அத்தி, மா, புவரசு போன்ற அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
சான்றுகள்: 1. m.tamil.thehindu.com>article 7619196 2. vayalumvazhvum.blogspot.com>2017/03.