பயனர்:ACRIMDUanubala/மணல்தொட்டி
விவசாயம்
தொகுஇந்தியா பசுமை நிறைந்த நாடு.காடுகள்,வயல்வெளிகள் அனைத்தும் இந்தியாவை அழகாக்குகின்றது.விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகிறது.முக்கியமாக கிராமங்களில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் விவசாயம் என்பது பயிர்கள்,விலங்குகள் அனைத்தையும் மேம்பட்ட முறையில் பயன்படுத்துவதே ஆகும்.தமிழ்நாட்டில் அரிசி முக்கியமான உணவு பயிராகும்.தமிழ்நாட்டில் குறிப்பாக திருவாரூர்,தஞ்சை,நாகை மாவட்டங்களில் அதிகமாக அரிசி பயிரிடப்படுகிறது.தஞ்சை அரிசிக் கிண்ணம் என்றழைக்கப்படுகிறது. கோதுமை வட மாநிலங்களில் முக்கியமான உணவு பயிராகும்.
==
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் எண்ணற்ற புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது.இவை அனைத்தும் விவசாயத் துறையில் பரட்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமல்லாமல் விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பசுமை உரங்கள்,சாணம்,உயிரி உரங்கள்,இரசாயன உரங்கள் பயன்படுத்தி விவசாயம் வளர்ச்சி கண்டுள்ளது. காய்கறிகள் அனைத்தும் பசுமை நிறம் கொண்டவை.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.