பயனர்:ACRImdukowsijoan/மணல்தொட்டி

பூ பேசுகிறது

தொகு

இவ்வுலகில் உள்ள நல்ல உள்ளங்களால் பிறந்தேன் நான், சிறு விதையோ செடியாக மாறினேன். செடியோ மொட்டு என்ற வடிவில் என்னை அமர வைத்தது, பின் மெல்ல என் கண்களை திறந்து சிரித்து கொண்டே இவ்வுலகில் பிறந்தேன். என்னுடன் பிறந்த என் சகோதரர்களைக் கண்டு மகிழ்ச்சி கொண்டேன். என் அழகைக் கண்டு அனைவரும் ரசித்தனர். பின் மானிடர்கள் என் உறைவிடத்திலிருந்து என்னை பிரித்து மூன்று வெவ்வேறுஇடங்களில் அமர வைத்தார்கள். முதலில் என்னை ஒரு மாலையாக கோர்த்து இறைவனின் தலையில் சூடினார்கள். நானோ பேரானந்தம் என்ற கடலில் மிதந்து கொண்டு இருந்தேன். பின்னர், மங்கையர்கள் அனைவரும் அவர்களின் கார்மேகம் போன்ற கூந்தலில் என்னை சூடினார்கள்...ஆம் ,, என்னே பிறவி பயனை அடைந்து விட்டதை போல் ஒரு மகிழ்ச்சி..

இதுவோ எமது விதி

தொகு

ஒரு நாள் மானிடன் ஒருவன் என்னை கடைகளில் இருந்து அவசர அவசரமாய் வாங்கி கொண்டு சென்றான். ஒன்றும் புரியாத புதிராய் நானும் அவனுடன் சென்றேன். என்ன ஆச்சரியம், அங்கே மானிடன் ஒருவன் இறந்து விட்டான் அவனை சுற்றி ஒரே அழுகுரல் மட்டுமே கேட்டு கொண்டிருந்ததது. திடிரென்று அந்த மானிடன் என்னை இறந்தவன் கழுத்தில் போட்டான், இவ்வளவு நாள் சிரிப்பு உலகத்தில் வாழ்ந்த எனக்கு சற்றே நொடியில் பெரும் அவமானமாக இருந்தது.

சிரிக்கும் உயிர்

தொகு

அத்துடன் என்னை விட்டு விடவில்லை, மானிடன் இறந்த இடத்திலிருந்து திருமயானம் செல்லும் வரை சாலையில் என்னை வீசிக் கொண்டே சென்றனர் இன்னும் சில மானிடர்கள், சாலையில் விழுந்ததால் வாடிய என்னை மிதித்து கொண்டே சென்றனர் இன்னும் சில மானிடர்கள். இவ்வுலகில் சிரித்து கொண்டே பிறக்கும் ஒரே உயிர் நான் மட்டுமே,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ACRImdukowsijoan/மணல்தொட்டி&oldid=2497941" இலிருந்து மீள்விக்கப்பட்டது