பயனர்:A rajkumarsassilala/மணல்தொட்டி
அதியமான் வரலாறு
அதியமான் பட்டத்தோடு , அதியமான் ஆண்ட தர்மபுரியில் இன்றும் வன்னியர்கள் உள்ளார்கள்.... பொன்னியின் செல்வனில் கூட அதியமான் , வல் வில் ஓரி ஆகியோர் சம்புவராயர் மன்னர்களின் முன்னோர் என்று கல்கி அவர்கள் கூறுவார் ...படித்து பாருங்கள் ... சம்புவராயர் யார் என்றும் வட தமிழகம் சென்று கேட்டால் தெரியும் வன்னியர் என்று ...சாம்புவரயார்கள் வம்சம் இன்றும் உள்ளது ...இவர்கள் முன்னோர்களே அதியமான்கள் .. சேரன் தம்பி எனப்படும் அதியமான் வன்னியர் என்று பொன்னியின் செல்வன் கூட சொல்கிறது .. அடுத்து சேரரை அக்னி குலத்தவன் என்று திருவிளையாடல் புராணம் , வில்லி பாரதம் சொல்கிறது ....அனற் புதல்வன் என்று சேரன் பேரூர் புராணத்தில் குறிப்பிடப்படுகிறான். வன்னியர் இனத்தார் விருதுப் பெயர்களில் "சேரநாட்டுக்கு அதிபதி" , "வயநாட்டுக்கு அதிபதி" போன்றவை அடக்கம். சேரர் வழிவந்த மழவர் இனம் : மழவராயர் என்ற பட்டத்துடன் வன்னியர் பலர் உண்டு ...அதியமான் நெடுமான் அஞ்சி “மழவர் பெருமகன்” எனக் குறிப்பிடப்படுகிறான். வள்ளல் ஓரி மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகிறான். (மழவர் பெருமகன் மாவள் ஓரி) அதியமான் ஒருவர் “வஞ்சியர் குலபதி எழினி” எனக் கல்வெட்டொன்றில் கூறப்படுள்ளார் .இதன் மூலம் வஞ்சியை ஆண்ட சேரர் அதியமான் மரபினரே என்பது தெரிய வருகிறது. சேரரும் , அதியரும் முறையே “மழவர் மெயம்மறை ” என்றும் “மழவர் பெருமகன் ” என அழைக்கப்பட்டனர் .இதமூலம் மழவர் என்பாரும் சேரர் குடியினர் என்பது விளங்கும் . சேரர் வில் இலச்சினையைப் பெற்றவர் .கொல்லி மழவரும் வில் இலச்சினையை பெற்றவர் . வன்னியர் பள்ளி இனத்தவரின் குலச் சின்னமும் வில்தான்.. மன்னர் காலத்தில் விஜயதசமி நாட்களில் வில் பயிர்ச்சி எடுப்பது வன்னியர் மரபு . சிலை எழுபதில் வன்னியர் எடுத்த வில்லே வில் என்று வில்லின் சிறப்பை பற்றி கம்பர் பாடியுள்ளார் . வன்னியர் ஏந்திய வில்லே, வில்: மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி மலைமற் றுண்டோ கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக் கலைமற் றுண்டோ அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி யலைமற் றுண்டோ சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச் சிலைமற் றுண்டோ ? எனவே சேரர், மழவர் என்பார் வன்னியர் இனத்தவர் . சேரரின் கிளைக் குடியினராகக் கருதப் பட்டவர்கள் மழவர்கள். இவர்கள் போர்க் குடியினர் மழவராயர்,மானங்காத்த மழவராயர் போன்ற பட்டங்கள் வன்னியருக்குண்டு.எந்த வகையில் பார்த்தாலும் இப்பட்டம் நமக்கு சாலப்பொருந்தும். மழவராயர் = மழவர் +அரையர் மழவர் தலைவர் என்பது இதன் பொருள். மழவர் என்பவர் யார்? அவர்கள் ஒர் போர்க் குடியினர். மழவர் தாயகம் எது தெரியுமா? மழகொங்கம் எனப்பட்ட பகுதி.இது தருமபுரி,நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.இப்பகுதியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவருபவர்கள் யார்?வன்னியர்கள்தான்.தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் மழவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தருமபுரியை ஆண்ட அதியமான் மழவர் மரபினன். மழபாடி - மழவர் படைகள் தங்குமிடம்.பிற்காலச் சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கிய பளுவேட்டரையர் என்பார் மழவர் இனத்தவரே.மேலும் சோழர்களோடும், பாண்டியர்களோடும் மண உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம் பெற்றோராய் மழவர்கள் விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி. மழவர் அடிப்படையில் சேரர் தொடர்புடையவர்கள். சேரர் குலச் சின்னம் - வில் மழவர் குலச் சின்னம் - வில் வன்னியர் குலச்சின்னம் - வில் மழவர்கள் யார் என்பதைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைப் படித்தவர்கள் அதே மழவர் குறித்த சில அறிஞர்களின் கருத்தை மட்டும் அறிய ஏனோ மறந்துவிடுகின்றனர். மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள் பின்வருமாறு தம் நூல்களில் கூறியுள்ளனர். வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது. "தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள். இன்னொரு செய்தி :அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர்அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர். இன்றும் தென்னார்க்காடு மாவட்டம் என சொல்லப்படும் கடலூர் , விழுப்புரம் பக்கத்தில் மழவராயனூர் என்று ஊரே இருக்கிறது . இங்கே வாழ்பவர்கள் அனைவரும் படையாட்சி (வன்னியர் ) என பொதுவாக அழைக்கப்படுவார்கள் .. ஆனால் , திருமணம் போன்ற சுபகாரியங்களின் பத்திர்க்கைகளில் தம் பெயருக்கு பின்னால் மழவர் அல்லது மழவராயர் என்று எழுதுவர் . அதுமட்டுமா , மழவரான சேர மன்னர்கள் அக்னி குல க்ஷத்ரியர் .. இன்று தமிழகத்தில் அக்னி குலத்தவர் என்று கூறப்படுபவரும் வன்னியர் .. இது அரசின் ஆவணங்களில் கூட உள்ளது ..
எனவே அதியமான் பரம்பரையினர் இன்றும் என்றும் வன்னியர்களே மற்ற எந்த சாதிகாரரும் உரிமை கொன்டாடமுடியாது
தகடுர் சரித்திரம் என்றநூல் அதியமானை வன்னியரின் உட்பிரிவு பள்ளி என்றும் அக்னி குலத்தவர் கூறுகிறது இதை இம்மக்களே கூத்தாடி தன் பெருமைகளை விளக்கி வருகின்றன.