உளவியலும் சுற்றுச்சூழல் மாற்றமும் உளவியலும் சுற்றுச்சூழல் மாற்றமும் ( Psychology and Environmental Change )என்னும் ஆங்கில நூலினை ரேமண்ட் S.நிக்கர்சன் எழுதியுள்ளார். பதிப்புத்தரவுகள் இந்நூலினை லாரன்ஸ் எர்ல்பாம் கழக பதிப்பகம் பதிப்பித்துள்ளது.இந்நூல் 318 பக்கங்களை கொண்டது. உள்ளுறை இந்நூலில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மாறுதலுக்கு செயல் ஒரு காரணி,மனப்பான்மை மதிப்பீடு மற்றும் மாற்றம், நடத்தை மாற்றம்,தொழில்நுட்ப மேம்பாடு,ஆதார கனமான தொழில்நுட்பங்களுக்கு பதிலாக ஆதார இலகுவான தொழில்நுட்பங்கள்,செயற்கை வடிவமைப்பு, ஆபத்து மற்றும் உளவியல் தடுப்பு முறைகள் போன்ற தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ள நூலாகும். நூல் அறிமுகம் இந்நூலில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்தும்,அதற்கு மனிதனின் செயல்கள் எப்படி காரணமாகின்றன குறித்தும் ஆசிரியர் விளக்கியுள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளான உலக வெப்பமயமாதல், அமில மழை,காற்று மாசுபடுதல், ஓசோன் படல வெறுமை,நீர் பற்றாக்குறை மற்றும் மாசுபடுதல், பாலைவனமாதல், காடழிப்பு, பல்லுயிர் குறைப்பு,கதிரியக்க கழிவு,ஈரநில இழப்பு,இயற்கை பேரழிவுகள் குறித்து விளக்கியுள்ளார்.மனப்பான்மை மதிப்பீடு மற்றும் மாற்றம், நடத்தை மாற்றம்,தொழில்நுட்ப மேம்பாடு,ஆதார கனமான தொழில்நுட்பங்களுக்கு பதிலாக ஆதார இலகுவான தொழில்நுட்பங்கள்,செயற்கை வடிவமைப்பு, ஆபத்து மற்றும் உளவியல் தடுப்பு முறைகள் போன்ற தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ள நூலாகும். உளவியல் ரீதியாக மக்களின் மனப்பான்மையை மாற்றுவதன் அவசியம், அவர்களின் செயல்களை மாற்றுவது குறித்தும் விளக்கியுள்ளார். சுற்றுச்சூழலை காக்கும் இலக்கு ஒன்றினை அடைய மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப மேம்பாடு,உளவியல் ரீதியாக நடத்தை மாற்றம் குறித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.