பயனர்:Akash Artist/மணல்தொட்டி
கைபந்து ஆட்டம்
சில தவறுகள் இதோ: பந்தை பிடிச்சு தூக்கி போடு. பந்தை எதிராளியின் பக்கம் அடிக்கும் போது அவர்கள் கீழே விடும் பொருட்டு நமக்கு மதிப்பெண் தரப்படும். எதிராளி அடிக்கும் போது தவறி வலையில் கை சிக்கினால் மதிப்பெண் தரப்படும். விளையாட்டில் ஆட்டத்தைத் தொடங்குகின்ற அணியிலிருக்கும் ஒரு வீரர் அவர் பக்க ஆடுகளத்திற்கு வெளியே நின்று அடித்து வலைக்கு மேலாக அடுத்த அணியினரின் ஆடுகளப் பகுதிக்கு அனுப்புகிறார். பந்தைப் பெறுகின்ற எதிரணியினர் பந்தை அவர்கள் பக்க ஆடுகளத்தின் தரையில் விழவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் அணியில் உள்ள மூன்று வீரர்கள் பந்தை மூன்று முறை தட்டுகிறார்கள். ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறைகள் பந்தைத் தட்டக்கூடாது என்ற விதி இங்கு பின்பற்றப்படுகிறது. எதிரணியினரால் அனுப்பப்படும் பந்தை பெறும் முதல் வீரர் கீழ்க்கையால் அல்லது தலைக்கு மேலேயே விரல்களால் பந்தைப் பெற்று பந்து வந்தவேகத்தைக் கட்டுப்படுத்தி இரண்டாவது வீரருக்கு அனுப்புகிறார். மூன்றாவது வீரர் பந்தை விசையுடன் அடித்து அனுப்புவதற்கு தோதுவாக இரண்டாவது வீரர் பந்தை தலைக்கு மேலே உயர்த்தி நிறுத்துகிறார். தாக்குதலுடன் அனுப்பப்பட்ட பந்தை எதிரணியினர் தங்கள் பகுதிக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர். அல்லது முதல் அணியினர் பந்தை அனுப்பியது போல இவர்களும் பந்தைப் பெற்று , தலைக்கு மேல் நிறுத்தி, விசையுடன் அடித்து விளையாட்டைத் தொடர்கின்றனர். எதிரணியினரின் ஆடுகளத்தில் பந்து தரையைத் தொடும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியும்போது தவறு செய்தாலும், வலையைத் தொட்டுவிடுதல் போன்ற மற்ற தவறுகள் இழைத்தாலும் எதிர் அணிக்கு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியப்பட்ட பந்தை திரும்ப எதிர் அணிக்கு திருப்ப முடியாமல் போனாலும் எதிர் அணிக்குப் புள்ளிவழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 25 புள்ளிகளை எந்த அணியினர் முதலில் ஈட்டுகின்றனரோ அந்த அணி வெற்றி பெற்ற அணியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே இருந்து ஓரணியின் வீரரால் அடித்தெறியப்படும் பந்து, இரண்டு அணி வீரர்களாலும் மூன்று மூன்று தட்டல்களில் திருப்பி அனுப்பப்படும் தொடர் நிகழ்வு ராலி எனப்படும். ஓர் அணியின் ஆடுகளப்பகுதியில் பந்து தரையைத் தொடும்வரை, அல்லது மூன்று தட்டல்களால் அடுத்த பகுதிக்கு பந்தை அனுப்பமுடியாத நிலை தோன்றும் வரை இந்த ராலி தொடரும். அடித்தெறியும் அணி ராலியை வெற்றி பெற்று புள்ளிகள் ஈட்டினால் அந்த அணிக்கு மீண்டும் அடித்தெறியும் வாய்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் ராலி தொடரும்.
பொதுவாக கைப்பந்தாட்ட விளையாட்டின் போது பின்வரும் தவறுகள் வீரரகளால் இழைக்கப்படுகின்றன.
•எதிரணியினரின் ஆடுகளத்திற்கு வெளியே தரையைத் தொடுமாறு பந்தை அடித்து விடுதல் •எதிரணியினரின் ஆடுகளத்திற்கு செல்ல முடியாதவாறு பந்தை வலையில் அடித்து விடுதல் •பந்தை கைகளால் பிடித்து விடுதல் •உந்தி தள்ளுவதற்குப் பதிலாக பந்தை பிடித்து எறிந்து விடுதல் •ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை தட்டிவிடுதல் •ஒரே அணியினர் நான்கு முறை பந்தை தட்டி அனுப்புதல் •ராலியின்போது அணி வீரர்கள் வலையை கைகளால் தொட்டு விடுதல் •தொடக்கத்தில் அடித்தெறியும் போது வீரரின் பாதம் ஆடுகளத்தின் எல்லையை தாண்டி விடுதல் போன்றவை தவறுகளாகக் கருதப்படுகின்றன.
பொதுவாக கைகளால் ஆடப்படும் இவ்விளையாட்டில் வீரர்களின் பிற உடல் பாகங்களில் பந்து படுவதும் தவறாகக் கருதப்படுகிறது. கைப்பந்தாட்ட விளையாட்டில் பல்வேறு தேர்ந்த நுணுக்கங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. வலைக்கு மேல் பந்தை நிறுத்தி மேலெழும்பி தாக்கி அடித்தல், மேலெழும்பி வலைக்கு மேலேயே பந்தை தடுத்து திருப்பி அனுப்புதல், அடுத்தவருக்கு பந்தைக் கடத்துதல், தாக்குவதற்கு தோதாக பந்தை தலைக்கு மேலே உயர்த்திக் கொடுத்தல், தனிச்சிறப்பு ஆட்டக்காரருக்கு ஏற்றபடி இடம் அமைத்துக் கொடுத்தல், போன்ற ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்றன. நன்றி !