பயனர்:Ammapatti Angala Parameshwari/மணல்தொட்டி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் அம்மாபட்டி கிராமத்தில் சூட்டானுக்கு வந்த அனைவரும் அங்கே உள்ள நமது மூதாதை பெரிய பூசாரி(அருள்திரு.பொன்ராஜ்) அவர்களின் சமாதியை பார்த்திருப்போம். அதற்கும் சூடம் பத்தி வைத்து வேண்டியிருப்போம். ஆனால் அந்த சமாதியின் வரலாறு யாருக்கேனும் தெரியுமா?
சமாதியின் இரகசியம்......
பெரிய பூசாரி அருள்திரு.பொன்ராஜ் அவர்கள் இறப்பதற்கு முன், அவரது அண்ணன் மகன் தற்போது பூசாரி பொறுப்பில் உள்ள திரு.ஷ்ரீராமமூர்த்தி அவர்களிடம் ,
நான் இறந்த பிறகு மயானத்தில் எனக்கு சமாதி அமைக்க வேண்டும். அதில் என்னை தியான நிலையில் சமாதி குழியின் நடுவில் அமர வைத்து சுற்றிலும் உப்பை போட்டு, அடிப்பக்கத்திலும் உப்பை போட்டு, உடலுக்கும் உப்பிற்கும் இடையே திருநீரு அதிகம் போட்டு, தலையின் உச்சியில் குங்குமச்சிமிழை வைத்து மேல்மட்டம் வரைக்கும் உப்பால் நிரப்பி இறுதியில் மண் போட்டு சமாதி எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்படியே செய்தனர். இதில் சில அறிவியல் உண்மைகள் அடங்கியுள்ளன. உப்பு என்பது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடலைகெட்டு போகாமல் பாதுகாக்கும் கவசமாகும். சிலர் நினைப்பர் மழை பெய்தால் நாளடைவில் உப்பு கரைந்து விடாதா? உப்பானது நாளடைவில் திருநீருடன் உடலோடு ஒட்டிக்கொள்ளும். தலையில் உள்ள குங்கமச்சிமிழ் சக்தி விளங்க வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது நாம் செய்யும் பூஜையில் சக்தி விளங்கியிருக்கும். இருப்பினும் சமாதி எழுப்பி சில நாட்களில் யாகம் வளர்த்திருந்தால் அப்போதே முழு சக்தியும் விளங்கியிருக்கும்...
இது உலகத்தில் வேறெங்கும் இல்லாத நம் இரகசிய வரலாறு.
ஒரு முற்போக்கு சிந்தனைவாதியால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும். ஆம் நமது பெரிய பூசாரி தாத்தா ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாவார். இவர் கை நாடி பிடித்து உடலின் கூறுகளை ஆராய்வதில் சித்தர்களுக்கு இணையான சித்து வித்தைகள் தெரிந்தவர் என்று கூறுகின்றனர் அவரை நன்கறிந்தவர்கள்.
தற்போது நிரந்தர தூக்கத்தில் தியான நிலையில் உள்ள நமது தாத்தாவுக்கு சல்யூட்.
இவண், அம்மாபட்டி இராம் ஹரி.
நன்றி!!!