பயனர்:Anantha kumar m/மணல்தொட்டி
விளையாட்டுகள் அறிமுகம்:- “ ஓடி ஆடும் விளையாட்டு உடற்கல்வி விளையாட்டு உடலும் உள்ளமும் வளம் பெறவே நித்தம் ஒன்றாய் கூடிடுவோம் நிதானமாய் விளையாடிடுவோம். ” வானத்துக்கு நிலவழகு. மனிதர்களுக்கு விளையாட்டே உலகு. விளையாட்டு மூலமாகப் பெற்றும் தகுதிகள் சமூக விளையாட்டுகளில் உடல் பலம்,ஒட்டுமொத்தச் செயல்திறன்,கட்டுப்பாடு,சுய உணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. விளையாட்டின் நோக்கமும்,பயன்களும்:- விளையாட்டு உடம்புக்கு வலிமை அளிக்கிறது. சீரண இயக்கத்தை மேம்படுத்துகிறது. Rநல்ல உறக்கத்தை வழங்குகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. நோய்ககைத் தடுத்து ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. குழு மனப்பான்மையை உண்டாக்குகிறது. உலகெங்கும் நட்புறவுக்குப் பாலமிடுகிறது. சாதனைகள் மூலம் வாழ்க்கை அர்த்தமுடையதாகிறது. 1.ஓட்டப்பந்தயம்:- விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமானது ஓட்டப்பந்தயம். களப்போட்டிகளுக்கு மூலமாக அமைவது ஓட்டம் ஆகும். ஓட்டப்பந்தய வகைகள்:- 1. குறுகியதூர ஓட்டம் 2. இடைதூர ஓட்டம் 3. தடை ஓட்டம் (ஆண்களுக்கானது) 4. தடை ஓட்டம் 5. தொடரோட்டம் 6. தொலைதூர ஓட்டம் 2.கபடி:- பழம்பெரும் இந்திய விலையட்டுகளில் ஒன்று கபடி. இதனை சடுகுடு,ஹடுடு,சூ-கித்-கித் என்றும் அழைப்பார்கள். ஆட்டவீரர் மூச்சுவிடாமல் ஒரே வார்த்தையை உச்சரித்தப்படி இயங்க வேண்டும்.
ஆட்ட விதிகள்:- • கபடி ஆடுவதற்கான களம் 13 மீட்டர் நீளமும், 10 மீ அளமும் கொண்டதாக இருக்கும்.நடுவில் ஒரு கோடு போட்டு களத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.களம் சம தரையாக, மணற்பாங்காக இருக்க வேண்டியது அவசியம். • `டாஸ் வென்ற அணி பக்கத்தை தெரிவு செய்வதுடன், மூச்செடுக்கவும் தொடங்க்லாம். • ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் பக்கம் மாறலாம்.அப்போது தனது ஆளை மூச்செடுக்க அனுப்பலாம். • ஆட்டத்தின் போது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் `அவுட்` ஆக நேரிடும். • எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப் பகுதி தரையைத் தொட்டாலும் அவுட் தான். • போராட்டத்தின் போது களத்தில் உள்ள நபரையோ, களத்தையோ ஒருவர் நேரடியாகத் தொட்டுக் கொண்டிருந்தால் அவர் அவுட் இல்லை. • மூச்செடுத்து எதிரணியினரின் களத்தினுள் நுழைகிறவர் எதிராளிகளால் பிடிக்கப்பட்டு தன்னுடைய பாட்டை இழப்பாராயின் அவர் `அவுட்` தான். • மூச்செடுத்து சென்றவர் எதிரணியினரால் பிடிபட்டு ஆட்டம் இழந்தாலும் அல்லது ஆட்டம் இழக்காமல் தன்னுடைய களத்திற்கு திரும்பி விட்டாலும் உடனடியாக எதிரணி நபர் மூச்செடுத்து வருவார். • எதிரணியினரின் களத்தில் மூச்சு விட்டுவிடுகிற ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார். • ஆட்டம் இரண்டு சமபகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 20 நிமிட ஆட்டத்தைக் கொண்டதாக இருக்கும்.
பெண்களும் கபடி ஆடலாம். அவர்களுக்கு ஆடுகளம் 11 மீட்டர் நீளமும் , 8 மீட்டர் அகலமும் கொண்டதாய் அமைக்கப்படும்.
3.கோ-கோ ஆட்டம் :-
ஓர் அணியைச் சேர்ந்தவர் எதிரணியைச் சேர்ந்தவரை துரத்திச்சென்று தொடுவதும், எதிரணியாளர் தன்னை தொடப்படாத வ்ண்ணம் ஓடுவதும் ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
அணிக்கு 9 பேர்.
ஓர் ஓட்டம் 14 நிமிடம் கொண்டது. 7 நிமிடம் துரத்துவதற்காகவும், 7 நிமிடம் ஓடுவதற்காகவும் பகிர்ந்து அளிக்கப்படும்.
கோ-கோ விளையாட்டுக்கான ஆடுகளம் 34 மீ நீளமும், 16 மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.
களத்தில் இரண்டு கம்பங்கள் நடப்படும்.அவற்றுக்கு இடையே 24 மீ, 40மீ அளவில் நடுக்கோடு ஒன்று போடப்படும்.
30செ.மீ அகலம் 30 செ.மீ நீளம் கொண்டதாக 8 சதுரக்கட்டங்களை அமைக்கவும்.
அவற்றில் விரட்டும் குழுவைச் சேர்ந்த 8 பேர் திசைமாறிப் பார்த்தவாறு அமர வேண்டும். ஓடுவதற்கு தயாராக விரல்களைத் தரையில் ஊன்றியபடி, குதிகால் மேல் உயர்த்தி அதன்மீது உடல்பாரம் முழுதும் தாங்கிய நிலையில் அமர மேண்டும்.
ஓன்பதாவது ஆட்டக்காரர் கம்பத்தின் அருகே ஆட்டத்தைத் தொடங்க தயாராக நிற்க வேண்டும்.
“கோ” என்பது கட்டளைச் சொல்.விரட்டுவதற்கு தயார் நிலையில் அமர்ந்துள்ளவர் பின்னால் தொட்டுச் சொல்வார்.
கை அல்லது காலைத் தொட்டு “கோ” சொல்லக்கூடாது.
கட்டங்களில் அமர்ந்திருப்பவர் தமக்குரிய இடம் விட்டு விலகி அமரக் கூடாது.
அமர்ந்திருப்பவர் தமக்கு “கோ” கட்டளை கிடைத்த பிறகே எழ வேண்டும்.
`கோ` என்ற கட்டளையிட்டவர், தம்மால் எழுப்பி விடப்பட்டவரின் இடத்தில் அமர்வார்.
ஓடும் அணியினரில் ஒருவரைத் தொட்டுவிட்டால் துரத்தும் அணியிருக்கு ஒரு புள்ளி கிடைக்கும்.
ஓடுபவரும், துரத்துபவரும் அமர்ந்திருப்பவர் மீதுபடாமல் ஓட வேண்டும், துரத்த வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடுபவர் அனைவரையும் துரத்துபவர்கள் தொட்டு வெளியேற்றிவிட்டால் துரத்தும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
மேற்கோள்கள் :-
1.“ கபடி முதல் கிரிக்கெட் வரை – J.S.ஏப்ரகாம் ”