பயனர்:Anithasri irkm/மணல்தொட்டி
ஷேக் சர்தார்ஜி : இவர் ஜி.ஏ.ஷேக்சர்தார், ஐ.ஏ.எஸ்.சர்தார் என்ற மாருபட்ட பெயர்களாலும் அறியப்பட்டவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், நாடக இயக்குனர், சாதனையாளர், தேசிய சிந்தனையாளர், சமூக சேவகர், நதிகள் இணைப்பு போராளி என பன்முகம் கொண்டவர். மாணவப்பருவத்தில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை இயற்றுவதிலும், அரங்கேற்றுவதிலும் ஈடுபட்டு வந்தார். சிறுவயதிலிருந்தே இவரது தந்தையால் மனிதநேயம், மத நல்லிணக்கம், தேசபக்தி ஆகியன ஊட்டி வளர்க்கப்பட்டார். அதேபோல் பின்நாளில் தேசத்திற்காக தன் வாழ்கையை அர்பணிக்க வேண்டும் என்று உபதேசித்து தன் தந்தையாலேயே நாட்டிற்காக நேர்ந்து விடப்பட்டார். அதன் பலனாக தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி 1982 ல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டதன் மூலம் தன் சமூகப்பணியை துவக்கினார். இவர் எழுதிய “நான் கண்ட இந்துஸ்தான்” என்ற நூலை தமிழ்நாடு மாநில அரசினால் 2007 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்ட நூலகங்களுக்காக பெறப்பட்டது. மஹாத்மா காந்தியின் உற்ற நண்பரும் பூமிதான இயக்க தந்தையுமான வினோபாஜியால் “உலக நடையாளனாக வரவேண்டும்” என்று நேரில் ஆசீர்வதிக்கப்பட்டவர். தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமையும், கர்வமும் கொண்டவர். அதோடு தன் தாயகத்தின் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற சிந்தனையும், உலக அமைதிக்கான என்னமும் மிக்கவர். “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்” என்ற பாரதியின் கனவை இலட்சியமாகக் கொண்டவர்.
பொருளடக்கம்
•1 வாழ்க்கை குறிப்பு •2 தேசியப் பணியில் •3 நதிகள் இணைப்பு இயக்கம் •4நடத்திய போராட்டங்கள் •5 அப்துல் கலாமுடன் •6 சமுதாயப் பணிகள் •7 பொறுப்புகள் •8 படைப்புகள் •9 பரிசுகள் / விருதுகள் •10 வெளி இணைப்புகள் •11 மேற்கோள்கள்
1. வாழ்க்கைக் குறிப்பு
ஆர்.கே.ஷேக் அமீர், கமுருன் நிஷா தம்பதியினருக்கு மார்ச் 11, 1961ல் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள (அன்றைய சேலம் மாவட்டம்) பருகூர் ஒன்றியத்தில் ஐகுந்தம் புதூர் என்ற கிராமத்தில் ஷேக் சர்தார்ஜி பிறந்தார். இவரின் இயற்பெயர் ஷேக் சர்தார் என்றாலும், ஐ.ஏ.எஸ்.சர்தார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை ஐகுந்தம் புதூர் தொடக்கப்பள்ளியிலும், எட்டாம் வகுப்புவரை ஐகுந்தம் நடுநிலைப்பள்ளியிலும், பள்ளி இறுதி வகுப்பு வரை (அன்றைய எஸ்.எஸ்.எல்.சி. பதினொன்றாம் வகுப்பு) சந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், எம்.ஏ.முதுகளை வரலாறு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர அஞ்சல்வழி மூலமும் பயின்றார்.
தன் சாதனைகளுக்கு துணையாக இருந்த வத்சலா என்ற தமிழினப் பெண்ணை 1984 ஆம் ஆண்டு மணந்தார். 1993 ஆம் ஆண்டு ஜரினா என்ற இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். தேசத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால் தன் அரசு போக்குவரத்து கழக நடத்துனர் பணியை 11 மே, 1995ல் ராஜினாமா செய்துவிட்டு முழுநேரம் சமூகசேவையில் ஈடுபட்டு வந்தார்.
2. தேசியப் பணியில்
• 1982 இந்திய தேசிய ஒருமைப்பாட்டு ஆண்டில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். நடந்துக்கொண்டே தன் பயண அனுபவங்களை குமுதம் வாரஇதழில் எழுதிய தொடர் கட்டுரை தமிழர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இக்கட்டுரையின் மூலம் தான் ஆந்திராவில் கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த பத்தாயிரம் கொத்தடிமைகளின் விடுதலைக்கு வித்திட்டார். காஷ்மீர் வானொலியிலும், காஷ்மீர் தூர்தர்ஷனிலும் இவரது பேட்டி ஒளிபரப்பானது.
• 1983 ல் சென்னை நகர மக்களுக்கு தேவையான குடிநீரை கிருஷ்ணா நதியில் இருந்து மூன்றாண்டுகளில் சென்னைக்கு கொண்டுவருவதற்காக தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் போடப்பட்டது. அவ்வேளையில், வரைபடமாய் இருந்த அந்த கால்வாய் வரவிருக்கும் வழில் சென்னையிலிருந்து கிருஷ்ணா நதி (ஸ்ரீசைலம் அணை) வரை இவர் நடைப்பயணம் மேற்கொண்டார். இத்திட்டத்தால் ஏற்படவிருக்கும் பலாபலன்களை கண்டறிந்து குமுதம் வாரஇதழில் தொடர்கட்டுரை எழுதினார். பல காரணங்களால் ஏற்படும் காலதாமதத்தால் 10 ஆண்டுகள் வரை கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர வாய்ப்பில்லை என்று எழுதியிருந்தார். அதைப்போலவே நிகழ்ந்தது.
• 1984 ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மைய அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழக அளவிலான இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய முன்னேற்றத்திற்கான பல கோரிக்கைகளை இவர் முன்வைத்தார். அதில் கல்வியில் மாற்றம் வேண்டும், பள்ளிப்பருவத்திலேயே தொழிற்கல்வியை கொண்டுவர வேண்டும், அனைத்துவகை திருமணங்களும் அரசு பதிவு செய்ய வேண்டும், கலப்பு மணம் புரிந்தோருக்கு வேலைவாய்ப்பில் சலுகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு சுயாட்சி போன்றவைகள் அடங்கும்.
• 1985 உலக இளைஞர் ஆண்டில் இந்தியா மற்றும் இளைஞர் முன்னேற்றதிற்காக 20 அம்ச கோரிக்கைகளுடன் தருமபுரியிலிருந்து டில்லிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு, பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களிடம் சமர்பித்து 30 நிமிட நேரம் கோரிக்கைகளை பற்றி இவர் விவரித்தார். அவற்றில் பல நிறைவேறியுள்ளன.
• 1986 உலக சமாதான ஆண்டில் உலக அமைதியை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து டில்லிவரை இவர் உலக சமாதான தொடர் ஓட்டம் மேற்கொண்டார். பாரதப் பிரமர் ராஜீவ்காந்தி அவர்களிடம் உலக சமாதான ஜோதியை சமர்பித்தார். இவர் எழுதிய “உலக சமாதான தொடர் ஓட்டம்” பயணக் கட்டுரை தமிழக அரசு விளையாட்டு துறையின் தமிழர் விளையாட்டு மடல் மாதஇதழில் வெளிவந்திருந்தது.
• 1987 ல் பஞ்சாப் மாநிலத்தில் பெருகிவந்த தீவிரவாதத்தை தடுக்கும் நோக்கில் அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்திய அமைச்சகம் மூலம் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் லாலா லஜபதிராய் பிறந்த ஊர் ஜக்காரனில் ஆகஸ்டு 9 முதல் 15 வரை ஏழு நாட்கள் நடந்த முகாமில் இவர் கலந்துகொண்டார். அங்கிருந்த இந்திய தேசத்தின் அனைத்து மாநில இளைஞர்களிடமும் தேசிய ஒருமைப்பாடு, சகோதரத்துவம் குறித்து பேசினார். ஜக்ரானிலும், ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்த அமிர்தசரஸில் பஞ்சாப்பை சேர்ந்த பல இளைஞர்களை சந்தித்து பேசினார். பஞ்சாபில் பிரிவினைவாத கோஷம் எழும்ப பாகிஸ்தானே மூலகாரணம் என்பதை அறிந்து, “கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன” என்ற கட்டுரையை எழுதினார்.
3. இந்திய நதிகள் இணைப்பு இயக்கம்
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமையும், கர்வமும் கொண்ட இவர் 1982 ல் இருந்து தன் தாயகத்தின் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் இந்திய நாட்டை பலமுறை வளம்வந்தார். நாட்டு நிலையை கண்டு மிகவும் வேதனையுற்றார். வடக்கே வெள்ளத்தாலும், தெற்கே வறட்சியாலும், தேசம் முழுக்க மக்கள் வறுமையினாலும் அல்லல்படுவதையும், ஆங்காங்கே மேற்கண்ட பாதிப்புகளால் விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வதையும் கண்டு நெஞ்சம் பதறினார். இவற்றுக்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வாக ஆங்கிலேயே பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அவர்களின் நதிகள் இணைப்பின் மூலம் நீர்வழி போக்குவரத்துக்கான பத்தாயிரம் மைல் நீளக் கால்வாய்கள் திட்டம் இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்காக தன் அரசுப்பணியை விடுத்து “ இந்திய நதிகள் இணைப்பு இயக்கம் “ நிறுவினார். நதிகள் இணைப்பிற்கான தன் முதல் மனுவை பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் வழங்கினார்.
இதற்காக சாத்வீக முறையில் உண்ணாநிலைப் போராட்டங்கள், நீண்ட தூர நடைப்பயணங்கள், சைக்கிள் பேரணிகள், மோட்டார் சைக்கில் பேரணிகள், வாகனப் பிரச்சாரங்கள் ஆர்பாட்டங்கள் என பல போராட்டங்களை மாநில மற்றும் மைய அரசுகளை நோக்கி முன்னெடுத்து சென்றார். அவ்வேளைகளில் இந்தியப் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, குடியரசுத்தலைவர்கள் அப்துல் கலாம், வெங்கட்ராமன், துணை குடியரசுத்தலைவர் ஹிதாயத்துல்லா, ஆளுநர்கள் . பா.ராமச்சந்திரன், ராம்மோகன்ராவ், மாநில முதல்வர்கள் மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.டி.ராமாராவ், அரசியல் தலைவர்கள் ஜி.கே.மூப்பனார், சோ.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், வைகோ, திருநாவுக்கரசர், குமரிஆனந்தன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், உலக சமாதான ஆலய நிறுவனர் மகாமஹரிஷி பரஞ்சோதியார் போன்றோரை சந்தித்து தேசிய நதிகள் இணைப்பு குறித்து பேசினார். அதற்காக இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறார்.
4. நடத்திய போராட்டங்கள்
• 1982 ல் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைப்பயணம். • 1983 ல் சென்னை குடிநீருக்கான தெலுங்குகங்கை திட்ட ஆய்விற்காக சென்னையிலிருந்து கிருஷ்ணாநதிவரை நடைப்பயணம். • 1985 ல் இந்திய முன்னேற்றத்திற்கான 20 கோரிக்கைகளுடன் தருமபுரியிலிருந்து டில்லிவரை சைக்கிள் பயணம். • 1986 ல் உலக அமைதியை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து டில்லிவரை உலக சமாதான ஜோதியேந்தி தொடர் ஓட்டம். • 1987 ல் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சந்தூரிலிருந்து மாதேஸ்வரன் மலை வரை சைக்கிள் பயணம். • 1987 ல் இலங்கை தமிழர்களுக்காக 100 இளைஞர்களுடன் சந்தூரில் தீக்குளிப்பு போராட்டம். • 1997 ல் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தொரப்பள்ளியிலிருந்து சென்னைவரை தொடர் ஓட்டம். • 1998 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி பருகூரிலிருந்து தருமபுரி வரை நடைப்பயணம். • 1999 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி பருகூரில் உண்ணாநிலை போராட்டம். • 2௦௦௦ ல் பருகூர் தொகுதியில் உள்ள ஏரிகளை இணைக்கக்கோரி தருமபுரியில் நடைப்பயணமும், உண்ணாநிலை போராட்டமும். • 2002 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை வரை சைக்கிள் பேரணி. • 2004 ல் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி பருகூர் தொகுதி முழுவதும் வாகனப் பிரச்சாரப்பயணம். • 2005 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி கிருஷ்ணகிரியிலிருந்து டில்லி வரை மோட்டார் சைக்கில் பிரச்சாரப் பேரணி. • 2006 ல் ஜீவாதாரங்களை பாதுகாக்கக் கோரி பருகூரிலிருந்து கிருஷ்ணகிரி வரை பிரச்சார நடைப்பயணம். • 2௦௦8 ல் சனத்குமார நதியை பாதிக்கும் கிரானைட் குவாரிகளுக்கு எதிராக ஓசூரில் ஆர்ப்பாட்டம். • 2௦௦8 ல் நீராதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் வேண்டி சென்னையில் ஆர்ப்பாட்டம். • 2008 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி குடியரசுத்தலைவர்க்கு பத்தாயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம். • 2010 ல் நதிகள் இணைப்பிற்கு தொண்டு நிருவனங்களின் ஆதரவு கோரி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம். • 2011 ல் திருச்சியில் நதிகள் இணைப்பு மாநில மாநாடு. • 2012 ல் திருச்சியில் தொண்டு நிறுவன கூட்டமைப்பின் மாநில மாநாடு. • 2014 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி ஓசூர் அடுத்த கர்நாடக எல்லையிலிருந்து சென்னைவரை நடைப்பயணம். • 2014 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி சேலத்தில் உண்ணாநிலை போராட்டம். • 2015 ல் பருகூரிலிருந்து ராமேஸ்வரம் வரை சலாம் 2 கலாம் மோட்டார் சைக்கிள் பிரச்சார பேரணி.
5. அப்துல் கலாமுடன்
2005 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி கிருஷ்ணகிரியிலிருந்து டில்லிக்கு மோட்டார் சைக்கில் பிரசாரப் பேரணியை நடத்தினார். வழியில் அந்தந்த மாநில மொழிகளில் துண்டுபிரசுரங்களை அச்சடித்து மக்களுக்கு வினியோகித்தார். டில்லியில் 10 நாட்கள் தங்கி திராவிடமையம் கட்டிடப் பணிகளுக்காக தன் குழுவினரை கொண்டு தரைதள தண்ணீர் தொட்டியை கட்டிக்கொடுத்தார். குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அய்யாவை சந்தித்து மனுவை சமர்பித்தார். அவ்வேளையில் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2007 ல் தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கான நிதி ஆதாரமும் சிக்கன செலவு முறையும் குறித்த அறிக்கையை டில்லி சென்று சமர்பித்தார்.
அப்துல்கலாம் மறைவிற்குப்பின் வந்த அவரின் பிறந்தநாளை முன்னிட்டு 2015 ல் பருகூரில் இருந்து ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடம் வரை மோட்டார் சைக்கிள் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். அப்துல்கலாம் நினைவிற்காக இந்திய அரசுகள் செய்ய வேண்டிய 10 கோரிக்கைகளை முன்வைத்தார். அதன் நகல்களை அப்துல்கலாம் அவர்களின் சகோதரரிடமும், விஞ்ஞான ஆலோசகர் பொன்ராஜ் அவர்களிடமும் நினைவு மடலாக வழங்கினார்.
6. சமுதாயப் பணிகள்
ஷேக் சர்தார்ஜி, முதன் முதலில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் காமர்காவ் என்ற ஊரில் 1979 ல் தங்கி அங்கிருந்த வட்டிக்கடையில் பணியில் சேர்ந்து, அதன் சுற்றுவட்டாரங்களில் கந்துவட்டியில் சிக்கித்தவித்த பலகிராமவாசிகளை மீட்டெடுத்தார். 1982 ல் ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த பத்தாயிரம் தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டார். 1984 முதல் 1988 வரை நேரு யுவக் கேந்திராவில் தன்னார்வலராக இணைந்துக்கொண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சமூகப்பணிகளில் ஈடுபட்டார். 1995 ல் அறிவொளி இயக்கத்தில் இணைந்து முதியோர் கல்விக்காகன விழிப்புணர்வு நாடகங்கள், குறும்படம் போன்றவை இயக்கியும் நடித்தும் வந்தார். 2007 ல் இந்தியாவை நேசி என்ற அறக்கட்டளையை துவக்கினார். அதன்மூலம் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள், வகுப்புவாரியாக தேவைப்படும் அனைத்து நோட்டுகள், எழுதுபொருட்கள், அவர்களுக்கான மருத்துவ முகாம்கள் என செய்துகொண்டுள்ளார். ஏழை கிராமவாசிகளுக்கான மருத்துவ முகாம்கள், உடைகள், போர்வைகள், ஆதரவற்ற விதவைகள் மறுவாழ்விற்காக தையல் எந்திரங்கள், ஆடுகள் போன்றவையும் கொடுத்து உதவிவருகிறார். 2012 ல் மதநல்லிணக்கதிற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐகுந்தம் கிராமத்தில் உள்ள சிவன்கோவிலை ஒருவருட காலம் நிர்வகித்து வந்தார். 2011 ல் தொண்டுநிறுவனங்களின் கூட்டமைப்பின் நேசம் மாத இதழில் பொறுப்பாசிரியராகவும், 2012ல் என்.ஜி.ஓ.எக்ஸ்பிரஸ் மாத இதழில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
7. பொறுப்புகள்
.
1984 – 1988 மைய அரசின் நேரு யுவக் கேந்திராவில் தருமபுரி மாவட்டத்தில் தேசிய தன்னார்வலர்.
1987 – 1990 தருமபுரி மாவட்ட அமைப்புக் குழுவில் உறுப்பினர்.
1989 – 1995 அன்னை சத்யா அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர்.
5.1.1998 ல் இருந்து இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர்.
5.1.2007 ல் இருந்து LOVE INDIA அறக்கட்டளையின் நிறுவனர், நிர்வாக இயக்குனர்.
1.5.2011 ல் இருந்து சமூக தொண்டுநிருவனங்கள் பாதுகாப்பு நலக் கமிட்டியின் இயக்குனர்.
1.4.2010 – 31.3.2014 பர்கூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நல சங்க தலைவர்.
8. படைப்புகள்
• நான் கண்ட இந்துஸ்தான் இந்த நூல் 400 பக்கங்களை கொண்டது. இந்திய நாட்டை பற்றிய அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். இந்திய இளைஞர்களுக்கு தேசபக்தி புகட்டும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்நூலை அனைத்து மாவட்ட நூலகங்களுக்கும் வாங்கி விநியோகித்துள்ளது. அகில உலகிலேயே நாடு முழுவதும் நடந்துக்கொண்டே எழுதிய ஒரே நூல் என்ற தனிச்சிறப்பு இந்நூலுக்கு உண்டு.
• கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் என்ற நடைப்பயண அனுபவ கட்டுரை எழுதி குமுதம் வாரஇதழில் தொடராக வெளிவந்தது.
• கிருஷ்ணாவை நோக்கி என்ற நடைப்பயண ஆய்வு கட்டுரை எழுதி குமுதம் வாரஇதழில் தொடராக வெளிவந்தது.
• உலக சமாதான தொடர் ஓட்டம் என்ற உலக அமைதி குறித்த பயணக் கட்டுரை எழுதி தமிழக அரசின் தமிழர் விளையாட்டு மலரில் வெளிவந்தது.
• இந்தியாவின் 20 கோரிக்கைகள் என்ற பெயரில் சைக்கிள் பயண அனுபவ கட்டுரை எழுதினார்.
• கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்ற பெயரில் பஞ்சாப் மாநில தீவிரவாதம் குறித்து பயண அனுபவ கட்டுரை எழுதினார்.
• இயக்கிய நாடகங்கள்: ஓசூரில் பறக்க தெரியாத பறவைகள், கோடு இல்லாதா கோலங்கள், வெறும் பேச்சு, பகல் நிலவு, பெங்களூருவில் செங்கரும்பு, பாண்டிச்சேரி கம்பன் கலை அரங்கில் புதிய தீர்ப்பு என்ற சமூக நாடகங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
9. பரிசுகள் / விருதுகள்
- தேசிய நடையாளர் (National Walker) என்ற பட்டத்தை சந்தூர் இன்டர் நேஷனல் ஆங்கிலப் பள்ளி இவரின் தேசிய நடைப்பயணத்தை பாராட்டி வழங்கியது. (14.2.1982)
- தேசிய நடை தீரர் என்ற பட்டதை தமிழ் நாடு விளையாட்டுத் துறையின் தமிழர் விளையாட்டு மடல் பாராட்டி வழங்கியது. (ஜூன்,1983)
- தேசிய சாதனையாளர் விருதை ஓசூர் அசோக் லைலேண்டு ஓசூரில் நடத்திய நடையாளர்களுக்கான பாராட்டுவிழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.சீனிவாசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.விஜயகுமார் வழங்கினர்.(20.7.1982)
- இந்திய துணை குடியரசுத்தலைவர் ஹிதாயத்துல்லா அவர்களின் பாராட்டு சான்றிதழ்.(19.5.1982)
- நடை சாதனையை பாராட்டி மைய அரசின் விளையாட்டுத்துறை யின் மூலம் ரூ.3௦௦௦ வழங்கப்பட்டது.(6.6.1983)
- சிறந்த சமூக சேவகருக்கான “டாக்டர்.ராதாகிருஷ்ணன்” விருதை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற, கலையின் குரல் & மஹா ஃபைன் ஆர்ட்ஸ்ஸின் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் நீதியரசர் கே.எம்.நடராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.(13.9.2009)
- பாவேந்தர் என்ற பட்டத்தை சென்னை ஜி.கே. திருமண மாளிகையில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்திய தமிழக அரசுக்கான நன்றி அறிவிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் திருமதி. எஸ்.பி.சற்குண பாண்டியன் அவர்களால் வழங்கப்பட்டது. (31.10.2010)
- சிறந்த சமூக சேவகர் (Best Social Worker Award) என்ற விருதினை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற (IndianBoard Of Integrated Medicines) IBIM-ன் மாற்று மருத்துவத்துக்கான மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் எஸ்.ஜெகதீசன் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் எஸ்.தமிழ்வாணன் ஆகியோரால் வழங்கப்பட்டது.(15.12.2010)
- 2௦12 ல் தேசிய முன்னேற்றத்திற்காக சேவை புரிந்தமைக்காக கோவை, ரத்தினம் பொறியியல் கல்லூரியில் International Development Consultancy And Research Foundation நடத்திய விழாவில் Best Social Worker 2012-India Award என்ற விருதினை டாக்டர். பால் டைலர் CFYM ஆஸ்திரேலியா மற்றும் டாக்டர். ஆர்.டி.லாரன்ஸ் IDC&RF இயக்குனர் அவர்களால் வழங்கப்பட்டது.(15.9.2012)
10. வெளி இணைப்புகள்
• மைய அரசின் தருமபுரி மாவட்ட நேரு யுவக் கேந்திராவின் 1984, 1986, 1988 ஆண்டு மலர்களில் பதிவாகியுள்ள ஷேக் சர்தார்ஜி பற்றிய தகவல்கள். • ஷேக் சர்தார்ஜி எழுதிய நான் கண்ட இந்துஸ்தான் • கலைச் சுரங்கம் பத்திரிக்கையில் ஷேக் சர்தார்ஜி பற்றிய கட்டுரை • ஷேக் சர்தார்ஜின் வலைத்தளங்கள் • இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின் இணையதளம் • குமுதம் வாரஇதழில் ஷேக் சர்தார்ஜி எழுதிய தொடர் கட்டுரைகள். • ஷேக் சர்தார்ஜின் வலைப்பூ - கவிதைகள் தொகுப்பு • ஷேக் சர்தார் பற்றிய அணிதாஸ்ரீன் வலைத்தளம் • சங்க கவிதைகள் 2010 – கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஷேக் சர்தாரிஜின் கவிதை. • ஷேக் சர்தார்ஜி நிர்வாகிக்கும் முகநூல் பக்கங்கள், முகநூல் குழுக்கள்,
11. மேற்கோள்கள்
• • “National Walkers Arrive In City“. (Nagpur Times 20 April 1982) • • “कन्या कुमारी से काश्मीर दो पदयात्री नागपुर पहुंचे“. (युग्थार्म नागपुर २२ एप्रल १९८२) • • “Two Youths On Journey Through India On Foot” . (The Times Of India 18 May 1982) • • “குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் தமிழக வாலிபர்கள் சென்னை திரும்பினர்: பிரதமர் பாராட்டு“. (மக்கள் குரல் 12 ஜூலை 1982) • • “TN Boys Cover 2,500 km On Cycle “. (The Hindustan Times 26 October 1985) • • “குமரி முதல் டில்லிக்கு சமாதான தொடர் ஓட்டம்“. (தினமணி 22 நவம்பர் 1986) • • “கங்கை – காவேரி இணைப்பு கோரி நதிகள் இணைப்பு இயக்கம் பேரணி“. (தினமலர் 02 செப்டம்பர் 1998) • • “ஏரிகளை இணைக்கக்கோரி பாதயாத்திரை“. (தினமணி 25 ஏப்ரல் 2000) பார்த்த நாள் ஏப்ரல் 25, 2000. • • “இந்திய நதிகள் இணைப்புகோரி சைக்கிள் பேரணி முடிவில் கவர்னரிடம் மனு“. (தினமலர் 05 டிசம்பர் 2002) பார்த்த நாள் டிசம்பர் 05, 2002. • • “கிருஷ்ணகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நதிகள் இணைப்பு இயக்க குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு நதிகளை இணைக்க கோரி மனு“. (தினத்தந்தி 24 ஜூலை 2005) பார்த்த நாள் ஜூலை 24, 2005. • • “வாழ்வாதாரங்களை காக்க கிருஷ்ணகிரியில் பாதயாத்திரை“. (தினகரன் 31 டிசம்பர் 2006) பார்த்த நாள் டிசம்பர் 31, 2006. • • “இந்திய நதிகள் இணைப்பு குழுவினர் டெல்லி பயணம்“. (தினகரன் 10 ஜூலை 2007) பார்த்த நாள் ஜூலை 10, 2007. • • “Government Asked To Initiate Action Against Granite Quarries". (The Hindu 24 April 2008) பார்த்த நாள் ஏப்ரல் 24, 2008. • • "நதிகளை இணைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு 10,000 கடிதங்கள் எழுதும் இயக்கம்". (தினகரன் 30 டிசம்பர் 2008) பார்த்த நாள் டிசம்பர் 30, 2008. • • "நதிகள் இணைப்பு நடைபயண குழுவினருக்கு ஆற்காடில் வரவேற்பு". (தினமணி 21 பிப்ரவரி 2014) பார்த்த நாள் பிப்ரவரி 21, 2014. • • "மாணவர் எழுச்சி தினம் ராமேஸ்வரத்திற்கு டூவீலர் பயணம் கிருஷ்ணகிரியில் துவங்கியது". (தினகரன் 13 அக்டோபர் 2015) பார்த்த நாள் அக்டோபர் 13, 2015.