பயனர்:Aparna S 2110487/மணல்தொட்டி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: தொகு

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொன்று நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

திருக்குறள்: தொகு

.திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மூலத்தோடு அச்சிடப்பட்ட ஒரு திருக்குறள் நூல்
நூலாசிரியர் திருவள்ளுவர்
செயற்பாட்டிலுள்ள தலைப்பு குறள்
நாடு தமிழ்நாடு, இந்தியா
மொழி தமிழ்
தொடர் பதினெண் கீழ்க்கணக்கு
பொருண்மை அறம், நன்னெறி
வகை செய்யுள்
வெளியிடப்பட்ட நாள் 1812 (முதன்முதலாக அச்சிடப்பட்டது)
ஆங்கில வெளியீடு 1794

திருக்குறள் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது. அனைத்துப் பாக்களும் குறள் வெண்பா வகையில் அமைக்கப்பட்டதாகும். மேலும் ஒவ்வொரு அதிகாரத்தின் பத்துப் பாக்களும் அவ்வதிகாரத்தின் கருப்பொருளாக விளங்கும் அறநெறியினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன.

பழமொழி நானூறு: தொகு

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. முன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை (துறை இங்கு படித்துரையினைக் குறிக்கும்) + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும். இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

திருக்குறள் மற்றும் பழமொழி நானூறு ஒற்றுமைகள்: தொகு

இந்த இரண்டு நூல்களும் நீதி நூல்கள் என்னும் பிரிவில் அமையும், இந்த இரண்டு நூல்களின் கடைசி வரிகள் மூன்று வார்த்தைகளுடன் முடிவடைகிறது. கடவுள் வாழ்த்து கொண்டு தொடங்கும் வழக்கதை பின்பற்றும். இந்த இரண்டு இலக்கியங்களும் உள்ளடக்கிய சில அடிப்படை தலைப்புகள் இன்னா செய்யாமை, ஒழுக்கம், அறிவுடைமை, கல்வி, சான்றோர் இயல்பு, சான்றோர் செய்கை, நட்பின் இயல்பு, அறம் செய்தல் எனப்படும், இந்த நூல்கள் சமூக மேம்பாட்டை உறுதி செய்வதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

திருக்குறள் மற்றும் பழமொழி நானூறு வேறுபாடுகள்: தொகு

திருக்குறள் உலக போதுமறை எனப் போற்றப்படுகிறது. ஆனால், பழமொழி நானூறு ஒரு சமண சமய நூலாகும். திருக்குறளில் மோதம் 133 அதிகாரங்கள் உள்ளன, 34 அதிகரங்கள் உள்ளன. திருக்குறளின் எழுத்து முறை பால உவமைகள் மட்டும் உருவங்கள் கொண்டபடி திகழும். மறுபக்கம், பழமொழி நானூற்றில், பல்வேறு வரலாற்று மட்டும் புராண குறிப்புகள் உள்ளன. வடிவத்தை கருதினாலும், திருக்குறள் இரண்டே வரிகளில் அமைந்த பாக்கலை கொண்டது. பழமொழி நானூற்றில், மாராக, நான்கு வரிகள் கொண்டு அமையும்.

குறிப்புகள்: தொகு

பதினெண் கீழ்க்கணக்கு. (2023, சனவரி 22). விக்கிப்பீடியா, . Retrieved 17:44, ஏப்ரல் 5, 2023 from https://ta.wikipedia.org/w/index.php?

திருக்குறள். (2023, மார்ச் 4). விக்கிப்பீடியா, . Retrieved 17:47, ஏப்ரல் 5, 2023 from https://ta.wikipedia.org/w/index.php?

பழமொழி நானூறு. (2022, சூன் 6). விக்கிப்பீடியா, . Retrieved 17:47, ஏப்ரல் 5, 2023 from https://ta.wikipedia.org/w/index.php?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Aparna_S_2110487/மணல்தொட்டி&oldid=3690244" இலிருந்து மீள்விக்கப்பட்டது