பயனர்:Arockiamary/மணல்தொட்டி

ஆப்பம் என்பது தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்றாகும்.இதைப் பெரும்பாலும் காலைச் சிற்றுண்டியாக உண்டு வருகின்றனர்.இது அரிசியும் உளுந்தும் தேங்காயும் கொண்டு தயாரிக்கப்படுமொரு சுவையான உணவாகும்.இதைத் தயாரிக்க நான்கு குவளை பச்சை அரிசியை ஒரு பாத்திரத்திலும் ஒரு குவளை உளுந்தை மற்றொரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும்.மேலும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் உளுந்துடன் சேர்த்து ஊற விடவேண்டும்.மூன்று மணி நேரம் ஊறிய பின்னர் உளுந்தைத் தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அரை மூடி தேங்காயைத் திருகி அரிசியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த உளுந்து மாவையும் அரிசி மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்துக் கரைத்து ஓர் இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும்.பின்னர் காலையில் ஒரு சிட்டிகை சமையல் சோடாவைக் கலந்து , ஒரு கரண்டி மாவை எடுத்து ஆப்பச் சட்டியில் ஊற்றி இரு பக்கமும் பிடித்துக் கொண்டு சுற்றி விடவேண்டும்.பிறகு சுற்றிலும் ஒருதேக்கரண்டி எண்ணெயை விட்டு ஒரு தட்டை வைத்து மூடவேண்டும். வெந்ததும் எடுத்தால் சுவையான ஆப்பம் தயாராகிவிடும்.இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது தேங்காய் பால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.திருகிய தேங்காயுடன் மூன்று அல்லது நான்கு ஏலக்காயைச் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து பாலைப் பிழிந்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.இப்போது சுவையான தேங்காய் பாலும் தயாராகிவிடும்.சுவைத்து மகிழுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arockiamary/மணல்தொட்டி&oldid=2744391" இலிருந்து மீள்விக்கப்பட்டது