பயனர்:Arunthasha t/மணல்தொட்டி

கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரணவாய் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஆலயம் ஆகும். இற்றைக்கு சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னர் திரு.அருணாச்சலம் அவர்கள் "ஓலைக் கொட்டிலும் சாந்து கட்டுமாக இருந்த ஆலயத்தில் திருமெழுகிட்டு பூசையாற்றி வந்தார். எவர் மூப்பெய்திய பின் இவரது குமாரர்கள் கணபதிப்பிள்ளை , சுந்தரம் ஆகியோ ர் தமது பள்ளி பராயத்தில் காலையில் பூசை முடித்து புலோலி ஆண்கள் பாடசாலைக்கு நடந்து சென்று படித்த கதை சொல்வார்கள்..இவர்கள் காலத்தில் தான் எமது ஆலயத்தில் திருப்பணிகளை மேற்கொள்ள விநாயகப் பெருமான் திருவுளங்கொண்டார்.

                             அதன்படி திருப்பணிக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்திற்க்கு நம்மூர் பெரியவர் உயர்திரு.கணபதிப்பிள்ளை , பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் அடியார்கள் கூடி நின்றனர்.ஆகம கிரியைகள் முடிந்து அடிக்கல் நாடும் வேளை வந்ததும் பொன்னம்பலம் அவர்கள் கணபதிப்பிள்ளை  ஐயா அவர்களை "மணியம் வாரும் நீர்தான் நாளுக்கு அடிக்கல்லை வையும் நீர் தான் இன்று முதல் மணியம்  ஆக இருந்து திருப்பணிகளை கவனிக்க வேண்டும்" என்று கூறினார்.அன்று தொடக்கம் அவருக்கு "மணிய ஐயா " எனும் நாமம் வரலாயிற்று. அன்று தொடக்கம் அப் பெரியவர் அருள் வழி நின்று திருதொண்டடாற் றலானார் .இதனை மறுதலையாக கூறுங்கால் திருவருள்  மணிய ஐயாவின் வடிவில் செயற்படத் தொடங்கிற்று எனலாம் 
        மணிய ஐயா அவர்களின் தொண்டின் மகத்துவத்தினால் சுமார் 15 ஆண்டுகளில் நான்கு மண்டபங்கள் வரை வெள்ளைக்கல் திருப்பணி வேலைகள் நிறைவுற்றது. குடமுழுக்கு  விழா ஸ்ரீலஸ்ரீ  வேதாரணிய க்குருக்கள் , சட்டநாத குருக்கள் ஆகியோரால் நிகழ்த்தப்பட்ட்து. அதன் பின் ஸ்ரீலஸ்ரீ கைலாசநாதக்குருக்கள் அவர்களின் சிறிய தந்தையர் நமசிவாயக்குருக்கள் அவர்கள் நித்திய பூசைக்கு வரத்தொடங்கினர். இதன்காரம் குமாராலையே நித்திய பூசைகள் நிகழ்த்தப் பெறுவது யாவரும் அறிந்ததே.

விநாயக வழிபாட்டின் வளர்ச்சி விநாயக வழிபாட்டின் வளர்ச்சி கி.பி. 6 ம் நூற்றாண்டளவில் புராணங்களின் செல்வாக்கினால் விரிந்து வளர்ச்சியடைந்த கணபதி உபநிடதம் ஏரம்ப உபநிடதம் கணபதியை மும்மூர்திகளுள் மேலான பிரம்மமாக காட்டின.கணபதிக்கு பல்வேறு வடிவங்களை முன்னோராகிய ரிஷிகள் காட்டினார். உ ச்சிட்ட கணபதி , மஹா கணபதி, ஊர்தத்துவ கணபதி, பிங்கள கணபதி, இலட்சுமி கணபதி என ஐந்து வடிவங்களை கொடுத்து வழிபடடனர். பார்க்கவ புராணம் சிந்தமணி விநாயகர், கஜநாத விநாயகர், விக்னவிநாயகர், மயூரேச விநாயகர், தூமகேது விநாயகர், கணேசர் , மஹோத்கட விநாயகர், உடுண்டி விநாயகர், வல்லபை விநாயகர் என ஒன்பது வடிவங்களை கொடுக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arunthasha_t/மணல்தொட்டி&oldid=2162920" இலிருந்து மீள்விக்கப்பட்டது