பயனர்:Atigobina/மணல்தொட்டி
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் https://ta.wikipedia.org/s/5uge From விக்கிப்பீடியா
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். Question book-new.svg இந்தக் கட்டுரையில் உசாத்துணைகள் இல்லை. நடுநிலையான உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (சனவரி 2017) நாட்டார் தெய்வங்கள் என்பது நாட்டுப்புற மக்களான கிராம மக்களால் வழிபடப்படுகின்ற தெய்வங்களாகும். இந்த தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் என்றும், சிறு தெய்வங்கள் என்றும் கூறுகின்றனர். இந்த நாட்டார் தெய்வங்களின் வழிபாடு பெருந்தெய்வங்களின் வழிபாடுகளைப் போல் அல்லாமல் மாறுபட்டுள்ளது. இதனை சிறுதெய்வ வழிபாடு என்கின்றனர்.
நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் மொழி பேசுகின்றவர்களால் வழிபடப்படுகின்றன.[சான்று தேவை]
உலகின் எல்லாப் பகுதிகளிலும் நாகரிகத்தின் உயர் நிலையில் வாழ்பவர்களிைடயிலும், நாகரிகத்தின் கீழ்நிைலயில் உள்ளவர்களிடத்திலும் சடங்குகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒரே சாதி, குலம், இனம் சார்ந்த மக்கள் ஒரே வைகயான சடங்குகைளச் செய்வார்கள். சடங்குகைளச் செய்யாவிட்டால் தமது காரியங்கள் இனிேத நிறைவேறாது என்ற நிலையில் இச் சடங்குகைளச் செய்கின்றார்கள். உண்மையில் சடங்குகள் மக்களை இணைத்து வைப்பன என்றே கூறலாம். இச் சடங்பகுகள் வேறு குழுக்களிடம் இருந்து வேறுபடுத்தவும் உதவுகின்றன. பழந்தமிழர் நுால்களிலும், வேதங்களின் பகுதிகளிலும் இச் சடங்குகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. வாழ்க்கையுடன் இணைந்த சடங்குகள் சமயச் சடங்குகள், பிறப்பு சம்மந்தமான சடங்குகள், திருமணச் சடங்குகள், வேளாண்மைச் சடங்குகள், ஈமச்சடங்குகள், பிற சடங்குகள் எனச் சடங்குகள் பலதரப்பட்டனவாகும்.
[1]===திரெளபதியம்மன் சடங்கு===
ஒவ்வொரு சமயியும் நாள்தாேறும் மூன்று நேரங்களிலும் பல சடங்குகளை செய்ய இந்து மதம் வழிவகுக்கின்றது. சமயம் தாேன்றிய பின் அதனுடன் இணைந்து சில சடங்குகள் காணப்பட்டன. அச் சடங்குகள் மந்திரம் சார் சமயச்சடங்குகள் எனப்பட்டன. மேல்நிலையாக்கம் பெற்ற காேயில்களில் நிகழும் சடங்குகள் மந்திரத் தன்மை நிறைந்த சமயச் சடங்குகளாகும். இங்கே பூசகர் சடங்குகைள நடத்துபவராகவும், பக்தர்கள் பாவையாளராகவும் இருப்பர். ஆனால் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மக்களின் நேரடியான பங்களிப்பிைனைக் காணலாம். நாட்டார் தெய்வ வழிபாட்டின் பாேது பண்டம் எடுத்தல், மடைபரவுதல், துாளிபிடித்தல், கதவுதிறத்தல், சந்தனக்காப்பிடல், பலியிடுதல், கலையாடுதல், சூனியம் வெட்டுதல், கச்சுநேருதல், உருவம் நேர்ந்து விடுதல், குழந்தைப் பேறற்ற பெண்கள் சிறு மரத் தொட்டிகைளச் செய்து நேர்த்திக்கடனாகத் தருதல், தீப்பந்தம் ஏற்றுதல், சொற்பொழிவு போன்றன நிகழ்ந்தேறும். இச் சடங்குகள் நாட்டார் தெய்வ வழிபாட்டுடன் இணைந்தன. இச் சடங்குகள் சிலவற்றோடு வேறு புதிய நடங்குகள், முறைகளும் காணப்படுவது திரெளபதியம்மன் சடங்கிலேயாகும்.
ஈழத்தில் கிராமியப் பெண் தெய்வங்கள் சடங்கை அடிப்பைடயாகக் கொண்டு வழிபடப்படுகின்றன. அற்றுள் காளி, மாரி, பேச்சி, [1], பிடாரி, காெத்தி, சன்னாசி, கண்ணகி, நாச்சிமார், சீதை, திரெளபதி என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திரெளபதி அம்மன் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்த தமிழ் மக்களால் கொண்டுவரப்பட்ட வழிபாடாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஏனெனில் திரெளபதி அம்மன் வழிபாடு பல்லவர் காலத்தில் திரெளபதிக்கு ரதக் கோயில் எடுத்து வழிபட்டதிலிருந்து விஜயநகர நாயக்கர் காலத்திலும் இவ் வழிபாடும் இதனாேடு இணைந்த காளியாட்டமும் காணப்பட்டைவயாகும். ஈழத்தில் காணப்படும் திரெளபதி அம்மன் ஆலயங்கள் என்ற வகையில் மட்டக்களப்பு பிரேதசத்திலே தான் கூடுதலாகக் காணப்படுகின்றன. அவ்வாறான ஈலயங்களுள், பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலயம், ஆரையம்பதி திரெளபதி அம்மன் ஆலயம், புதுார் திரெளபதி ஆலயம், புளியம்தீவு திரெளபதி அம்மன் ஆலயம், மட்டக்குழி திரெளபதி அம்மன் ஆலயம் என்பன குறிப்பிடத்தக்கன. இவற்றை விட புத்தளம் மாவட்டத்தின் உடப்பு என்ற கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் ஆலயமமும் சிறந்த ஆலயமாக கருதப்படுகின்றது. இவ்வாறான திரெளபதி அம்மன் ஆலயங்களின் சடங்கை ஆற்றுப்படுத்துவோர் பூசாரி என்றே அழைக்கப்படுவார். ஆனால் பழுகாமம் திரெளபதி அம்மனை ஆற்றுப்படுத்துவோர் நம்பியார் என்றே அழைக்கப்படுவார்.
ஈழத்தின் திரெளபதி அம்மன் வழிபாட்டில் பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ் வழிபாடு மகாபாரதக் கதையுடன் தொடர்புபட்டது. மகாபாரத பதினெட்டு கைதகைள அடிப்பைடயாகக் கொண்டே திரெளபதி அம்மன் சடங்குகள் மேற்காெள்ளப்படுகின்றன. ஆதலால் பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலய வரலாறு பற்றியும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சடங்குகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலயம் ஆனது வட இந்தியாவின் கொங்கு நாட்டில் இருந்து வந்த தாதன் என்பவனால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் சிங்கள பெளத்த மன்னன் விமலதர்மசூரியன் புனரமைப்புச் செய்தான் என்று பத்ததிகள் என்ற பத்தாசிகள் (பத்ததிகள் என்பது சிறு தெய்வ வழிபாட்டை கூறும் நுாற்தொகுதி ) பாமர மக்களும் மகாபாரதக் கதையை அறிந்துகொள்ளும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம், காலப்போக்கில் அதனை நிறைவேற்றியது. பாடல்களும், கூத்துக்கலை மரபும் இப்பிரதேசத்தின் பெருவழக்குப் பெற்றது. இந்த வழிபாட்டின் சிறப்புப் பற்றி தாதன் கல்வெட்டு கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
" ஆவினங்கற் வாழ அறமுயர்ந்து சாலி எழ
பாவலர் பாடப் பல்லுயிெரல்லாம் வாழ்க
மாதத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்து வா "
என்று இக் கல்வெட்டு கூறுவதால் திரெளபதி அம்மன் வழிபாட்டின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். நோய்கைளப் போக்கவும், பிள்ளைப்பேறு வேண்டியும், வேளாண்மை பெருகவும், பட்டி பெருகவும் இவ் வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆலய வழிபாட்டுச் சடங்குகள் பூசாரியினால் ஆற்றப்படுகின்றன. ஏனைய சடங்குகளில் இருந்து வேறுபட்டது. நாடகத் தன்மை வாய்ந்தது. திரெளபதி, பாண்டவர் விக்கிரகங்கள் கொலைவத்து வழிபடுவது இங்கு வேண்டல்எனப்படும் வந்தனை வழிபாடே நடைபெறுகின்றது. பதினெட்டுதினங்கள் நடைபெறும் இந்த வழிபாட்டில் பெரும்பாலான சடங்குகள் பாண்டவர் வேடம் தரித்து நிற்கும் ஐவர் காெலுவினருக்கே நடைடெபறுகின்றன. மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கேற்ப மனிதனை தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகின்றது.
இந்த திரெளபதி ஆலயப் பிரதான சடங்குகளாக திருக்கதவு திறத்தல், கொடியேற்றம், சுவாமி எழுந்தருளப்பண்ணல், கலியாணக் கல்வெட்டுதல், பாண்டவர்கள் வனவாசம் செல்லல், அருச்சுனன் வருதலைத் தொடர்ந்து நள்ளிரவு பண்டிமறித்தல், கமலக்கன்னி, அருச்சுனன்தலம், அரவான் கறப்பலி, (அருச்சுனனின் மகன் தீக்குறிப்பு (தீப்பள்ளம்) என்பன இடம்பெறும். ஈழத்தில் அதிகூடிய நீள அகலங்கைளக் கொண்ட தீக்குறி இதுவாகும். பதினெட்டுத் தினங்கள் பக்குவமாய் விரதம் இருந்து பாண்டவர்களுடன் தேவாதிகள் தீயில் இறங்குகின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். பெண் தீமிதிப்பில் ஈடுபடுவதில்லை. ஆண்கேள தீக்குளிப்பார்கள். ஆலயத்திற்கு வந்து நின்று தங்கி, இங்கு நடைபெறுகின்ற சடங்கு வழிபாடுகளில் கொலுவில் நின்று பக்வகுமாய் விரதம் இருந்து அனுட்டிப்பவர்கள் மட்டுமே தீயில் இறங்க முடியும். தீமிதிப்பு நடந்து மறுநாள் தீக்குளிக்கு பால் வார்த்தல் சடங்காக நடைபெறும் போது தெய்வம் ஆடுவோரும் காணப்படுவார். தெய்வமாடுவோர் தம்மை மறந்து ஆடாது பாரம்பரிய நாடகப்பாணியில் ஆடுவது சிறப்புக்குரியதாகும். இந்த தெய்வமாடுதல், உடுக்கடித்தல், சிலம்பொலி, பறையடித்தல் மற்றும் மந்திரங்கள் மூலம் பூசாரியால் மேற்கொள்ளப்படுகின்றன. தெய்வமாடுபவர் ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு அருள்வாக்கச் சொல்லுதல், காப்புக்கட்டுதல் போன்றவைகளும் இடம்பெறும். இவ்வாறான சடங்குகள் யாவும் ஆண்டுதோறும் ஆடி மாதம் இந்த ஆலயத்தில் இடம்பெறுகின்றது. இவ்வாறு ஈழத்தின் முதல் திரெளபதி அம்மன் ஆலயமாக பாண்டிருப்ப திரெளபதி அம்மன் ஆலயச் சடங்குகள் கொடி இறக்கத்துடன் நிறைவேறும்.
கண்ணகி வரலாறு[edit source] கிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது.இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம். இத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம். பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.
கண்டியிலுள் தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கயபாகு மன்னன் இந்தியாவின் சேரநாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக்கட்டையாலான விக்கி;ரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது. ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா பத்தினித்தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்டவிழாவேயாகும் மணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித்திருந்தார். சிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழக்காவியமாகும் .
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவது ஊஉம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார் . வேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார். சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழட்டினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் ஒற்றைச்சிலம்புகளே சிலப்பதிகாரமாயின என்று கூறலாம். கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது. வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள். சிறு குடியீரே சிறு குடியீரே ....என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.
சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான். இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது.
கிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே அதன் புகழ் கற்றவர் மத்தியில் பரம்பியது. சிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது.
கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை. வழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் திழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது. வழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது. நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது. சிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர். கிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் காளி துர்க்கை மாரி பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு. இன்று வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது.
கயவாகு காலத்தில் அதாவது கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருந்திற்றபோதிலும் முதல் ஆலயம் எங்கு எப்போது கட்டப்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லை. கயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஜயமிருக்கிறது. அனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்று ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது. தனிப்பட்டவர்கள் கண்ணகை ஆலயங்களை சிறிய அளவில்கட்டி வழிபட்டு வந்தனர்.இதனை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் சுட்டிநிற்கிறது. கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டு;ள்ளது.எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம். தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன. பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர் பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர் செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர் மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே. என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது. நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19ம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. கண்ணகி வணக்கம் முதலில் தனிப்பட்ட குடும்பங்களின் சொத்தாக பூசிக்கப்பட்டுவந்த போதிலும் கண்ணகையை வழிபடுவோர் தொகை அதிகமாக கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.அதற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் படையெடுக்கத்தொடங்கினர். உதாரணமாக செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.இவ்வாலயத்தில் கிரான்குளம் களுதாவளை குருக்கள்மடம் மாங்காடு அம்பிலாந்துறை பழுகாமம் தேத்தாத்தீவு ஆகிய ஏழு ஊர்களைச்சேர்ந்தவர்களுக்கு உரிமை இருந்தது. சடங்கு நிகழ்வுகள் கண்ணகி மதுரையை எரித்தது கயவாகு மன்னன் பத்தினிக்கு விழா எடுத்தது சிங்கள மக்கள் பெரஹரா ஊர்வலம் நடாத்தி பத்தினியை வழிபடுவதெல்லாம் ஆடி மாதத்திலாகும். ஆனால் தமிழர்கள் இதனைத் தவிர்த்து வைகாசி மாதத்தில் கண்ணகிக்கு சடங்கு செய்துவருகின்றனர். வைகாசித்திங்கள் வருவேனென்று வரிசைக்கியைந்து விடைகொடுத்தாரே என குளிர்த்திப் பாடல் கூறுகிறது. இதில் வைகாசித் திங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள்நிலவிவருகின்றன. ஓன்று வைகாசிப் பூரணையைக்குறிக்கும்.மற்றயது வைகாசிப்பூரணைக்கு அடுத்து வருகின்ற திங்களைக் குறிக்கும்.இவை சடங்குகளின் இறுதித் தினமாகக் கொள்ளப்படுகின்றன.இச்சடங்குகள் வைகாசி மாதத்தில் நடப்பதால் வைகாசிப் பொங்கல் என்றும் வைகாசிச்சடங்கு என்றும் வைகாசிக்குளுத்தி என்றும் அழைக்கப்படுவதுண்டு. சடங்கு சடங்கு நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை ஊருக்கு ஊர் வேறுபடும்.சில ஊர்களில் 5 நாட்கள் சில ஊர்களில் 7 நாட்கள் இன்னும் சில ஊர்களில் 9 நாட்களும் நடைபெற்றுவருகின்றன. சடங்கின் ஆரம்பநாள் கதவுதிறத்தல் என்று கூறுவர்.மாரியம்மன் காளியம்மன் சடங்கைப் பொறுத்தவரை இது கும்பம் வைத்தல் என அழைக்கப்படும். ஆரம்பநாள் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு என்றும்' கூறுவர்.அன்று கடல்நீர் எடுத்துவரும்வழியில் ஏலவே பார்த்துவைத்திருந்த இடத்தில் பூவரசு மரம் அல்லது வேம்பு மரக்கிளையை கத்தி பாவிக்காமல்முறித்துஊர்வலமாக வந்து ஆலயத்தில் புடவைகள் சுற்றி நடப்படும்.இது பக்தியுட்டும் நிகழ்வாக சித்திரிக்ப்பட்டுள்ளது. பின்பு பச்சைகட்டல் என்பது பாரம்பரிய நிகழ்வாகும்.மதுரையில் மாதவி வீட்டில் புகுந்த கண்ணகைக்கு சமையல் செய்து கொடுக்கப்பட்டதைக் குறிக்கும்.அன்று வழக்குரையில் அடைக்கலக்காதை பாடப்பெறும்.இக்கதையிற் கூறப்படும் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல கட்டாடியார் அவற்றை எடுத்து அம்மன் முன் காணிக்கையாக வைப்பது இதில் முக்கிய அம்சமாகும். இறுதிநாள் பகலில் வழக்குரையில் கொலைக்களக்காதை பாடப்பெறும்.கோயில் சோகமயமாகவிருக்கும்.அன்று மதியச்சடங்கு நடைபெறமாட்டாது.மாலையில் வழக்குரைக் காதை பாடுவர்.இறுதியில் குளிர்த்திக் காதை பாடியபின் வைகறைப் பொழுதில் திருக்குளிர்த்தி நடைபெறும்.அதன்போது அவ்வவ் ஊர்களிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபடுவது இன்றும் வழக்கிலுள்ளது. இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது மாவிடிக்கக்கூடாது புலால் உண்ணக்கூடாது இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது எனலாம்.
வைரவர் வழிபாடு[edit source] சிவ மூர்த்தங்கள் அறுபத்துநான்கு ஆகும். அவற்றுள் இருத்து ஐந்து மூர்த்தங்கள் முக்கியமானதாகும். இருத்து ஐந்து சிவ மூர்த்தங்களுள் வைரவர் மூர்த்தமும் ஒன்றாகும். வைரவர் மூர்த்தம் தோன்றிய வரலாறு பற்றி ஆகமங்களும் புராணங்களும் எடுத்துக் கூறியள்ளன. வடுகைலவைரவர், காலவைரவர், மகாவைரவர், உக்கிரவைரவர், சுவர்ணக வைரவர், நரசிம்ம வைரவர், ஞான வைரவர் என வைரவர் மூர்த்தங்களை இலக்கியங்கள் வகைப்படுத்தியுள்ளன. இவற்றுள் ஞான வைரவர் மூர்த்தமே எல்லா ஆலயத்திலும் காணப்படுகின்றது.
பிரமனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு சிவனின் அம்சமாக தோன்றியவர். பிரமனின் ஐந்தாவது தலையை தன் நகத்தால் கொய்யப்பட்ட தலை விரலை விட்டு அகலாததால் காசிக்குச் சென்று அருள் பெற்று ஒட்டிய தலையை விரலிலிருந்து அகற்றியவர். காசியிலே காவல் தெய்வமாக எழுந்தழுளியவர். அகோரவடிவத்தவர், பல்வேறு ஆயுதங்கைள ஏந்தியவர். நிர்வாணக் கோலத்தவர். அச்சம்தரும் தோற்றத்தவர். நீலநிற மேனியுைடயவர்.சிலம்பாெலிக்கும் திருவடியுைடயவர். பாம்புடன் கூடிய திரு அரை கொண்டவர். தலைமாலைகள் புரளும் திருமார்பும் சர்ப்பப் பூணுாலும் தரித்தவர். சூலம், மழு, பாசம், தீச்சுடர், கபாலம், உடுக்கு ஏந்திய திருக்கரங்கைள உடையவர். அச்சம் தரும் மூன்று கண்களுடன் தோற்றமளிப்பவர். இரு கோரப் பற்களையும், கோபக்கனல் கொந்தளிக்கும் முகத்தில் அச்சம் தரும் சிரிப்பையும் ஏற்றிருப்பவர். நாயை வாகனமாகக் கொண்டு காட்சி கொடுப்பவர். இராசதம், சாத்வீகம், தாமசம் ஆகிய மூன்று குணங்களுடனும் எழுந்தருளியவர். சங்காரருத்திர மூர்த்தி என்ற சிறப்பு பெயரால் போற்றப்படுபவர். இவ்வாறு வைரவமூர்த்தியின் இலட்சணங்களை ஆகமங்களும் புராணங்களும் வரையறை செய்துள்ளன.
வைரவ மூர்த்தத்தின் இந்த இலட்சணங்களின் அடிப்படையில் சகல தத்துவங்களையும் அக்கருத்து ஆன்மாக்களை ஈஆடேற்றும் தன்மை கொண்டவையாகும். உலகப்பற்றை விடினும் உடற் பற்றை விடல் கடினமானதாகும். உடற்பற்றிருந்தால் உடைப் பற்றும் இருக்கும். அந்தப் பற்றையும்விடு என்பதே வைரவ மூர்த்த தத்துவமாகும். வினை விழும் போதுதான் உடற்பற்று அழியும் அலைகைள அழிக்கும் கோலம் தன்னுைடைய கோலமாைகயால் தாமத குணத்தை காட்டும் கோர வடிவினராக காட்சி தருகின்றார்.
இவ்வாறான வைரவர் மூர்த்த ஆகமம் சார்ந்த கிரியை முறையிலும், ஆகமம் சாராசடங்கு முறையிலும் வழிபடப்படுகின்றது. போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலத்தில் சைவக் கோயில்களும் வழிபாடுகளும் அழித்தொழிக்கப்பட்ட காலத்தில் ஈழத்தின் வடக்கு, கிழக்கு, வடமேல் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையே இவ் வழிபாடு சிறப்புற்றிருந்தது. இக் காலத்தில் வீடுகளிலும், மரத்தடிகளிலும் சூலங்களை நட்டு மக்கள் வழிபட்டதாக வரலாறுகள் சான்று பகிர்கின்றன. இத்தகைய வழிபாட்டின் வளர்ச்சி நிலையாக இன்றும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமைல ஆகிய பிரதேசங்களில் பல வைரவர் ஆலயங்கள் சிறப்பு பெற்றுக்காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற வைரவர் ஆலயங்களுள் கொக்குவில் தலையாழி ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம் குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் தலைசிறந்த ஆலயமாகக் காணப்படும் இவ்வாலயத்தில் ஆறுமுகநாவலர் புராணபடனம் செய்து வழிபட்டதாகவும், யோகர் சுவாமிகள் தரிசித்து மகிழ்ந்த தலமாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஞான வைரவர் கோயில் பழமையும் சிறப்பும் புதுமைப் பொலிவும் காெண்ட கோயிலாகும். இந்த ஞான வைரவர் ஆலயம் பசுமையயான மரங்கள் சூழக் கம்பீரமான இராஜ கோபுரத்துடன் கலையழகு மிக்க ஆலயமாகவும் இன்று திகழ்கின்றது. யாழ்ப்பாணம், காரைநகர், திண்ணக்களி வைரவர் ஆலயமும், தினகரன் பிட்டி வைரவர் ஆலயமும் குறிப்பிடத்தக்க வைரவ ஆலயங்களாகும்.
திருகோணமலையில் பாலையூற்று, உவர்மலை, பெருந்தெரு, செங்கலடி ஆகிய இடங்களிலுள்ள ஞானவைரவர் ஆலயங்கள் சிறப்புப்பெற்றவை. கொழும்பு கொட்டாஞ்சேனை ஞானவைரவர் ஆலயம் இப் பிரதேச ஞானவைரவர் ஆலயங்கள் யாழ்ப்பாணப் பிரதேச ஆலயங்கள் போல்லல்லாமல் அலங்கார்த திருவிழாக்களைக் கொண்டனவாக காணப்படுகின்றன. இவ்வாறான ஆலயங்களில் நித்திய பூசைகள்இ விசேடபூசைகள் என்பன நடைெபறுகின்றன. அர்த்தசாமப்பூசையின் போது ஆலயத்தின் திறப்பக்கள் வைரவர் முன் வைக்கப்பட்டு நைவேத்தியம் வைத்துப் பூசைெய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆலயங்களில் இவரைக் குறிக்க சூலம் மட்டும் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும். வைரவருக்குரிய விரத நாட்கள் சித்திைரப் பரணி, ஐப்பசிப் பரணி, தைமாதத்தில் வரும் முதல் செவ்வாய்க் கிழமை என்பனவாகும். இருநாட்களில் விரதமிருந்து சிவப்புப்பட்டு, சிவப்பு மாலை, வடைமாலையால் மக்கள் வழிபட்டு வைரவரின் அருளைப் பெறுவார்.
இவ்வாறு ஆகமம் சார்ந்த கோயில் வழிபாட்டு முறைகள் இருக்கம் போது ஆகமம் சாராத கோயில்களும் வழிபாட்டுமுறைகளும் இவருக்குண்டு. இவ்வகையில் ஆகமம் சாராத வைரவர் ஆலயங்களில் யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு கோணாவளை வைரவர் சுவாமி கோயில் சிறப்பக்குரியதாகும். ஏறக்குறைய 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலயம் தவிர உரும்பிராய் காட்டு வைரவர் கோயில், சங்கானை நிகரை வைரவர் கோயில் இணையிலி வைரவர் கோயில், வன்னியில் துணுக்காய் அணிஞ்சியற்குளம் நரசிம்ம வைரவர் ஆலயம் என்பன குறிப்பிடத்தக்கன. ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் பொங்கலன்று பண்டம் எடுத்தல், மடைபரவுதல், துாளிபிடித்தல், பரிகலம் அழைத்தல், பலியிடுதல், கலை ஆடுதல், கட்டுச் சொல்லுதல் போன்ற சடங்குகள் பூசாரியொருவரால் மேற்கொள்ளப்படும்.
மட்டக்களப்பு பிரதேசங்களில் அமைந்த வைரவர் கோயில்களில் மட்டக்களப்பு ஸ்ரீ நரசிங்க வைரவர் பெரும் சிறப்புப் பெறுகிறது. விஸ்ணுவின் நரசிங்க அவதாரமும் சிவகுமாரரான வைரவ மூர்த்தமும் ஒன்றாக அமைந்த பெயர் கொண்டு விளங்கும் இவ்வாலயம் விஸ்ணு ஆலய அமைப்பினை ஒத்த சிற்பங்களை உடையதாக உள்ளது. மட்டக்களப்பில் அருள்சநேபுரம்இ தாண்டவன் வெளிஇ பட்டிருப்பு பட்டிப்பளை, பாலமீன்மடு, மட்டக்களப்பு, விவேகானந்தபுரம், கிரான், கிரான்குளம், கூளாவடி போன்ற இடங்களில் பிரசித்தி பெற்ற ஆகமம் சாராத வைரவர் ஆலயங்கள் காணப்படுகின்றன. இவ் விடயங்கள் வீட்டு வாசலில் நிரந்தரமாகேவ வைரவர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும். அவ்வாலயங்களில் அைனத்திவலம் கதவுதிறத்தல்இ மடைபரவுதல்இ காவியம் பாடல்இ நுால் கட்டுதல், திருநீநறு போடுதல், தண்ணீர் ஓதிக்கொடுத்தல், கதவு அடைத்தல் போன்ற சடங்குகள் பூசாரிமாரால் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் வயல்வெளியில் கதிர் கண்ட சடங்கு என்பனவும் இடம் பெறுகின்றன. இப் பிரதேச வழிபாட்டில் ரொட்டி, கரும்பு, பழவைககள், மது என்பனவற்றுடன் பலியிடல் போன்றனவும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழத்துச் சைவர்கள் யாவரும் எவ்வித பாகுபாடுமின்றி தம் விருப்பம் போல் வைரவ விக்கிரகங்களை ஆகமம் சார்ந்த முறையிலும் ஆகமம் சாராத முறையிலும் அமைத்து வழிபடுகின்றனர். இதனால் இறைவனுடன் தம்மை ஈடுபடுத்திக்கெள்ளவும்இ இறைவன் அந்தப் பக்தன் மீது கருணை கொண்டு அவன்பால் அருள் புரியவும் இவ் வைரவத் தலங்களை வழிபடுகின்றனர். ஆதலால் இவ் வைரவத் தலங்கள் சைவசயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகின்றன என்று கூறலாம்.
இவற்றைப்பார்க்க[edit source] நாட்டுப்புறத்தெய்வங்கள் சிறுதெய்வ வழிபாடு Jump up ↑ நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் – பேரா.சு. சண்முகசுந்தரம் - காவ்யா பதிப்பகம்