பயனர்:Azeemmbm1/மணல்தொட்டி
எனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்
2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.