பயனர்:Bharathi vellaichamy/மணல்தொட்டி
கடவுள் துகள் பிரபஞ்சத்தை அழிக்கும் திறன் வாய்ந்தது என்று வான் இயற்பியல் விஞ்ஞானி "ஸ்டீபன் ஹாக்கின்ஸ்" சொல்லியிருப்பதை தொடர்ந்து அது பற்றி அறிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை.
இதில் எங்கள் அலுவலக Workshop சிவாஜியிலிருந்து அண்டார்டிக்கா விஞ்ஞானி சிவாஜி வரை இதில் அடங்கும்.
ஜியான் ஜ்யூடிஸ் என்ற மற்றொரு விஞ்ஞானி பிரபஞ்சம் கத்தி முனையில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்.
ஸ்கை லாப் பூமியில் விழப் போகிறது என்று விஞ்ஞானிகள் பயமுறுத்திய போது ஆடு மாடுகளை எல்லாம் விற்று கோழிகளை எல்லாம் அடித்து சாப்பிட்டு விட்டு குடும்பத்தோடு கோவிலுக்குப் போய் பிராத்தித்துக் கொண்டவர்கள் நிறையவே உண்டு.
இப்போது மக்களிடையே ஒரு தெளிவு வந்து விட்டது. இருந்தாலும் தெரிந்து கொள்வது நல்லதுதான்.
பெரு வெடிப்பு (Big Bang ) நிகழ்ந்த உடனேயே (one -tenth of a billionth of a second) காலவெளியில் நிலை மாற்றம் (phase transition ) ஏற்பட்டது. அதனால் விண்வெளி முழுவதும் ஹிக்ஸ் புலத்தால் நிரம்பியது.
வெடித்துச் சிதறிய துகள்கள் ஹிக்ஸ் புலத்தோடு மோதி அதன் ஆற்றலை அடைந்தன. அவை அடைந்த ஆற்றல் அவற்றின் எடைக்குத் தக்கவாறு இருந்தன.
ஹிக்ஸ் புலம் இரு வேறு நிலைகளில் மாறும் திறன் உடையது. (தண்ணீரானது திட, திரவ, வாயு நிலைகளில் உள்ளது போல).
அதன் ஒரு நிலை அடர்த்தியில் மிகச் சாதாரணமானது. புவி ஈர்ப்பு விசைக்குக் கீழே நாம் அனைவரும் இருக்கும் பகுதி இந்த ஹிக்ஸ் புலத்தின் இந்த நிலையில்தான் தான் உள்ளது. ஹிக்ஸ் புலத்தின் மற்றொரு நிலை இதனை விட பல பல மடங்குகள் அடர்த்தியானது.
இந்த அடர்த்தியான புலம் இருப்பதுதான் ஆபத்தானது. (அதற்காக ரஜினியை அனுப்பி இந்தப் புலத்தை அழித்து உலக மக்களைக் காப்பாற்றி லிங்கா லிங்கா என்று உலகமே சொல்வதுபோல கற்பனை செய்யக் கூடாது).
அடர்த்தி நிறைந்த இரு வேறு நிலைகள் இருக்கும் போது ஒரு நிலை மற்றொரு நிலையாக மாறுவது இயல்பு.
ஆனால் இந்த இருவேறு ஹிக்ஸ் புல நிலைகளின் இடையே உள்ள ஆற்றல் தடை (energy barrier) மிக அதிக அளவில் இருப்பதால் இதற்கான சாத்தியங்கள் குறைவு. இயற்கையில் இதற்கும் ஒரு வழி உண்டு. இதற்கு சுரங்கப் பாதை விளைவு என்று பெயர்( quantum tunneling effect, M Sc படிக்கையில் எனது செமினார் தலைப்பு).
ஆற்றல் நிலையில் மிக அதிகமான வேறுபாடுகளைக் கொண்ட துகள்கள் (மிகக் குறைந்த ஆற்றல் நிலையிலிருந்து அதிக ஆற்றல் உள்ள நிலைக்கோ மிக அதிக ஆற்றல் நிலையிலிருந்து குறைந்த ஆற்றல் உள்ள நிலைக்கோ) தாண்டி செல்ல முடியாது சுரங்கப் பாதை விளைவு மூலம் ஊடுருவிச் செல்கின்றன.
இதன் இடையில் புவி ஈர்ப்புக்கு வெளியே உள்ள பகுதியின் வெற்றிட நிலைப்புத் தன்மை பற்றிய ஆய்வுகளும் சேர்ந்துக் கொண்டு கொஞ்சம் மிரட்டுகின்றன.
விஞ்ஞானி பூட்டஸோ தலைமயிலான குழுவின் கணிப்பின் படி வெற்றிட நிலைப்புத் தன்மை ஹிக்ஸ் போசோன் மற்றும் அடிப்படைத்துகள் (Top quark ) எடையோடு தொடர்புடையது.
ஹிக்ஸ் போசோன் எடை 125 GeV என்று கண்டறிந்த Large Hadron collider படம் சமீப காலங்களில் ஊடகங்களில் மிகவும் பிரசித்தியானது.
இதுவே பிரபஞ்சம் தற்போது மாறு நிலையில் (meta state) உள்ளது என்பதை உறுதி செய்தது. ஆனாலும் இந்த மாறும் நிலையிலேயே நீண்ட காலம் நிலைக்கலாம் என்கின்றன வல்லுனர்கள்.
அறிவியலில் புதிய கோட்பாடுகள் வரும் போது பழைய கோட்பாடுகள் செல்லுபடி இல்லாமல் போகலாம்