பயனர்:Bhuvaneshwari N/மணல்தொட்டி

காஞ்சித் திணையில் பெண்களின் நிலை

முன்னுரை:

காஞ்சித் திணை என்பது புறத்திணைகளில் ஒழுக்கங்களில் ஒன்றாகும். காஞ்சி

என்றால் நிலையாமை என்று பொருள்படும். இந்த திணை செல்வம் நிலையாமை, வாழ்க்கை

நிலையாமை பற்றிய கருத்துக்களை கூறுகிறது. நிலையாமை கருத்துக்கள் அனைத்தும்

பெண்களுக்கே உரியதாக கூறப்பட்டுள்ளதை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்

கணவன் இறப்பில் தாமே உயிர்விடும் மகளிர் :

கணவன் போர்க்களத்தில் வேலினால் இறந்து கிடக்கும் போது அவ் வேலினை

பிடுங்கி குத்திக் கொண்டு தானும் இறந்து விடுதல் காஞ்சி கஞ்சி என்னும் துறையாகும்.

" நீத்த கணவர் நீர்த்த வேலின்

பெயர்த்த மனைவி ஆஞ்சியும்"

என்ற தொல்காப்பிய நூற்பாவின் மூலம் பெண்கள் தனது கணவன் போர்க்களத்தில் இறந்தவுடன்

தானும் இறக்கும் நிலை உருவாவதற்கு காரணம் கணவன் இறந்த பிறகு மனைவியால்

இச்சமூகத்தில் சுட்டிக் காட்டுகிறது.

கணவனை இழந்த மனைவியின் நிலை :

மிகுதியான வெப்பமுடைய நிலத்தின் கண் தன் கணவனை இழந்து தவிக்கின்ற ஒரு

மகள் தன் தனிமையை வெளிப்படுத்தி புலம்புகிறாள். இதனை

" நனிமிகு சுரத்திடை கணவனை இழந்து

தனிமகள் புலம்பிய முதுபாலையும் "

என்று தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் கணவனை இழந்த பெண் ஒருத்தி

படுகின்ற அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது.

கணவனை இழந்தபின் மனைவி அடையும் கொடுமையான நிலையை கூறுவது தாபத நிலை. தன்

கணவனை இழந்த மனைவியானவள் உடன் இறக்காமல் வாழதலை பற்றியது இந்நிலை.

இவ்வாழ்க்கை சில வரையறைகளை உடையது. உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிடும்

கட்டுப்பாடுகள் உண்டு. மேலும் கணவன் இறப்புக்குப் பின்பு ஒப்பனை செய்து கொள்ளுதல்

கூடாது. மங்கல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற வரைமுறை அக்காலம் தொட்டு

இக்காலம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை

" காதலன் இழந்த தாமத நிலையும்"

என்கிறது தொல்காப்பியம்.

தன்னுடன் கூடி களித்த கணவனை கூற்றுவன் உயிரைப் போக்கி மறைத்தான். கணவன் இறந்து

வடை தானும் இறவாததை எண்ணி வருந்தினாள் தலைவி. அழகிய வளையலை அணிந்த

தோளினை உடைய தலைவி கணவனின் மாலையோடு தானும் வாடினாள். வெறும் நிலத்திலே

படுத்து உறங்கினாள். தனக்கென அமைத்துக் கொண்ட கரிய இலை உணவினை கையால்

தொட்டால் என்பதை

" கலந்தவனைக் கூற்றம் கர்ப்பக் கழியாறு

அலைந்து இணையும் அவ்வளை தோனி - உலந்தவன்

தார் ஓடு பொங்கி நிலன் அசையித் தான் மிசையும்

கார் அடகின் மேல் வைத்தால் கை "

என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை. இவ் வரிகளில் பெண்கள் தங்கள் கணவனை இழந்த

பிறகு கரிய அரிசியை உண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் கணவனை இழந்த மகளிர் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும் இன்ப சூழலை விரும்பாமல்

உணவு, உடை,உரறையுள் போன்றவற்றை வரையறை படுத்திக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட

கைமின் நிலை அக்காலத்தில் இருந்து இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது.

உடன்கட்டை ஏறிய மகளிர் :

தங்கள் கணவனையே உயிராக எண்ணி வாழ்ந்த பெண்களுள் பலர் தத்தம்

கணவனின் உயிர் நின்ற அக்கணமே இவ்வுலகில் வாழ விரும்பாத தீயினுள் புகுந்து தன் உயிரைப்

போக்கிக் கொண்டனர். இதனை தொல்காப்பியர்

" நல்லோள் கணவனோடு நலியழல் புகீஇ

சொல்லிடை இட்ட பாலை நிலை "

என்கிறார். இதன் மூலம் பெண்கள் தங்கள் கணவன் இறந்த பிறகு அனுசரிக்க வேண்டிய

சடங்குகளுக்கு பயந்து தானும் கணவனின் உடலுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறிய வழக்கம்

இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. மேலும் கட்டாயப்படுத்த பெற்ற சடங்குகள் காரணமாக

மகளிர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மேற்கொண்டு இருந்தனர் என்பதையும் அறிந்து

கொள்ள முடிகின்றது.

போர்க்களச் சூழலில் தாய் :

வயது முதிர்ந்த தாயிடம் வீரன் ஒருவன் அவன் மகன் புறம் உருகிட்டு போரில்

இறந்தான் என்று கூறியவுடன் விரைவாக போர்க்களம் சென்று மகனின் வீரத்தை காணும்

தலைப்பெயல் மகளிரை

" அரும்பெரும் சிறப்பிற் புதல்வர் பயந்த

தாய்தப வருஉந் தலைப்ப நிலை "

என்கிறார் தொல்காப்பியர். போர்க்களத்தில் சிறப்பினை எய்திய பின்பு மகன் இறந்து பட்டத்தை

காண தாய் போர்க்களத்திற்கே சென்று கண்டிருக்கிறாள் என்பதை புலப்படுத்துகிறது. மேலும்

தாய்மைக்குரிய மிகப்பெரிய கடன் பிள்ளை பெறுவதாகும். அத்தகைய கடமையை முடிப்பதற்கு

முள் போன்ற கூறிய பள்ளினை உடைய பெண் ஒருத்தி மிகப்பெரிய கண்ணை கொண்ட

புதல்வனை பெற்றெடுத்தாள். பின்பு கொடூரத் தன்மை கொண்ட பெரிய பல்லினை உடைய

கூற்றுவனின் வாயில் சென்று புகுந்தாள்.ஆகையால் அகன்ற இவ்வுலகின் இயல்பு மிகவும்

கொடுமை உடையதாகும். இதனை

" இடம் படும் ஞானத்து இயல்போ கொடிதே

தடம் பெரும் கண் பாலகன் என்னும் - கடன் கழித்து

முள் ஈற்றுப் பேதையால் புக்காள் முரண் அவியா

வள் எயிற்று கூற்றத்தின் வாய் "

எனும் பாடல் மூலம் அறிய முடிகின்றது.

கணவன் இறந்த பின் அவனுடைய வாரிசை உலகில் ஈன்ற பின் மனைவியும் இரத்தலால்

பெண்கள் தன் கணவரின் பிள்ளையை பெற்று தருபவர்களாக இருந்துள்ளனர் என்பது

புலப்படுகிறது.

கையறுநிலை :

போர்க்களத்தில் இறந்தவர்களை எண்ணி இறக்காதவர்கள் புலம்பி அழுவது கையறு

நிலையாகும். இதனை

" கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ

ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் "

என்கிறது தொல்காப்பியம்.

இதற்கு இளம் பூரணர்

" செத்தார் மாட்டு சாவாதார் வருத்தமுற்று புலம்பிய கையறு நிலையும் "

என்கிறார்.

அக்காலத்தில் ஆண்களே போருக்கு சென்றுள்ளனர் அவர்கள் போரில் விழும் பட்டு இறந்த

நிலையில் வீட்டில் இருக்கும் பெண்களே அவர்களை எண்ணி அழுது புலம்பியுள்ளனர் என்பது

புலப்படுகிறது. மேலும் போருக்கு செல்வதற்கு அடிப்படையான காரணம் வீரமாகும்.அது ஆண்

மகனுக்கே உரியது என்றும் பெண்ணுக்கு அவ்வீரம் இல்லை என்பதை தொல்காப்பியம்

சுட்டுகிறது.இதனை

" பெருமையும் உரமும் ஆடுஉ மேன "

என்ற நூற்பா மூலம் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

நீராடல்:

திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து ஆறு, கடல் ஆகிய நீர்

துறைகளில் நீராடுவது நீராடலாகும். இதனையே மதுரைக்காஞ்சி

" ஆயம்

ததைந்த கோதை தாரொடு பொழிய

புணர்ந்து உடன் ஆடும் இசையே "

என்கிறது. இதன் மூலம் பெண்கள் கூட்டம் மலர்கள் நெருங்க கட்டிய மாலைகள் தம் கணவன்

மார்பில் புரளும் மாலைகளுடன் சேர நீராடி விளையாடுவார் என்பதை புலப்படுத்துவதோடு

பெண்கள் ஆடவர்களை மகிழ்விக்கும் ஓர் பொருளாகவே காட்சிப்படுத்தப்படுகிறது அறிய

முடிகின்றது. மேலும் ஆண்கள் தங்கள் மனைவி மட்டும் இன்றி பிற பெண்களுடனும் புனலாடி

மகிழ்ந்துள்ளனர் என்பதையும் தெளிவு படுத்துகிறது.

பூத்தொடுத்தல் :

பெண்கள் மலர்களை தங்களை அலங்கரிக்கவும் இறைவழிபாட்டுக்காகவும் பூக்களைத்

தொடுப்பர். இதனை

" மீன் முன் அன்ன வெண் கால் மா மலர்

பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டம் "

எனும் புறநானூற்றுப் பாடலின் வழி அறிய முடிகின்றது.

பெண்கள் தங்களை அழகு படுத்துவதற்காகவும், விற்பதற்கும் தாங்கள் கொண்டாடும்

விழாவிற்குஅலங்கரிக்கவும் மலர்களைத் தொடுத்துள்ளனர். இதன்வழி பெண்கள் மலர்களைத்

தொடுத்து விற்கும் மென்மையான எளிமையான பணியையே செய்து வந்துள்ளனர் என்பதை

புலப்படுத்துகிறது. இன்றும் பெண்கள் இப்பணியை செய்து வருகின்றனர் என்பது

குறிப்பிடத்தக்கது.

கள் விற்கும் மகளிர்:

மது விற்கும் மகளிராகவும் பெண்கள் காணப்படுகின்றனர். இம்மது வினை பெண்கள்

போர் வீரர்களுக்கு போருக்குச் செல்லும் முன்பும் போரில் வெற்றி கண்ட பின்பும்

கொடுத்துள்ளனர். இதனை

" ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய

தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ்ச்சிறந்து

அங்கு இனிது ஒழுகுமதி பெரும "

என்கிறது புறநானூறு.

மகளிரை மையப்படுத்தி வஞ்சினம் கூறல் :

காஞ்சித் திணையில் போரில் எதிர்த்த பகைவரை வெல்வேன் என சபதம் கூறுவது

மரபாக இருந்துள்ளது. பெண்ணை மையப்படுத்தியும் காஞ்சி வீரன் சபதம் கூறியிருப்பதை

புறநானூற்று காஞ்சித்தினை பாடல்களின் வழி அறிய முடிகின்றது.

சேரரும், சோழரும் சிங்கம் போல சினந்து பெரும்படையுடன் வந்து என்னுடன்

போரிடுவோம் எனச் சொல்கிறார்கள். அவர்களை எதிர்கொண்டு போரில் வெல்லாது போனால்

மைுண்ட கண்ணை உடைய என் இல்லாளைப் பிரிவேன் என காஞ்சி வீரன் வஞ்சிரம்

கூறியுள்ளான். இதனை

" ஆரமர் அலறதாக்கி தேரோடு

அவர்ப்பும் காணேன் சிறந்த

பேரமர் உன் கண் இவளினும் பிரிக "

எனும் புறநானூற்று பாடல் வரிகள் இயம்புகின்றன. இதன் மூலம் பெண்ணை மையப்படுத்தியே

போர் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது.

பரத்தையர்:

பரத்தையர் என்போர் ஒருவரையும் மனம் செய்து கொள்ளாமல், மன்னர்,செல்வர்

போன்றோருக்கும் இன்பமும் நல்கும் இயல்பு உடைய பெண்களாக வாழ்ந்து வருபவர்களாக

இருந்துள்ளனர். இன்பம் துய்ப்போர் தரும் பொருளால் வாழ்க்கை நடத்துபவர் இப்பரத்தையர்.

இப்பரத்தை காதல் பரத்தை,சேரி பரத்தை, விருந்தியல் பரத்தை என பல வகையினராக

காணப்படுகின்றனர்.

இவர்களையே இளம்பூரணர்

" பரத்தையர் ஆவார் யாரெனின் ஆடலும் பாடலும் வல்லாராகி அழகும் இளமையும்

காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டும் தங்காதார் "

என்கிறார். இதன் மூலம் அக்காலத் தொட்டி இக்காலம் வரை பெண்கள் பொருளுக்காக

தன்னையே அர்ப்பணம் செய்பவர்களாக இருந்து வந்துள்ள நிலைமையை அறிய முடிகின்றது.

முடிவுரை:

நிலையாமை குறித்து வருகின்ற காஞ்சித் திணையில் பெண்களைப் பற்றியே

நிலையாமை கருத்துக்கள் அதிகம் பேசப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் ஆணின் உடமையாகவும்,

ஆனை மகிழ்விக்கின்ற ஒரு பொருளாகவும், குணத்தில் மென்மையானவர்களாகவும், தன்

கணவனுக்கு பிள்ளையை பெற்றுத் தருகின்ற இயந்திரமாகவும் அஞ்சும் இன்றும் இருந்து

வந்துள்ள நிலையை அறிய முடிகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bhuvaneshwari_N/மணல்தொட்டி&oldid=3677304" இலிருந்து மீள்விக்கப்பட்டது