பயனர்:D.RENUGADEVI/மணல்தொட்டி

                அறிய மறந்த கல்வெட்டுகள் - சேலம் மாவட்டம்


பொன்பரப்பி திருக்குறள் கல்வெட்டு


     சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ளது பொன்பரப்பிப்பட்டி கிராமம்.இங்குள்ள பொன் சொரிய மலையில் திருக்குறள் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இம்மலையின் நடுவே கன்னிமார் பாழிக்கு மேலே சுமார் 10 அடி உயரத்தில் திருக்குறள்  கல்வெட்டு பொரிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் அறியப்படும் மிக பழமையான கல்வெட்டாகும். இதன் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டாகும். இதில் உயிர்க்கொல்லாமையை வலியுறுத்தும் கருத்துக்கள் உள்ளன.தன் உடல் பெருக்க பிற உயிர்களின் ஊனை உண்பவன் எப்படி சான்றோனாவான் எனக் குறிப்பிட்டுள்ளது.சமணம் தழைத்தோங்கிய காலத்தில் கொல்லாமையை வலியுறுத்திய கல்வெட்டாக இதைக் கருதலாம்.
   
  கல்வெட்டு :
         1.தன்னூன்
         2.பெருக்கற்
         3.குத் தான் பி
         4.பா னெங்ங
         5. நிதூனூண்
         6.ன மாளுமருள்
        ( புலால் மறுத்த அதிகாரம், குறள் எண் 251)
  பொன்பரப்பி மலையடிவாரத்தில் சமணர்கள் மடம் அமைத்து தங்கியிருந்திருக்கிறார்கள்.

அதற்கு சான்றாதாரமாய் இவ்வூரில் ‘ சமண மட சாசனம்’ ஒன்று கிடைத்துள்ளது. சமண மட சாசனக் கல்த்தூணில், ஓவிய எழுத்துக்கள், குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போது இச்சாசனக் கல் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளது. திருக்குறளை முன் உதாரணம் காட்டும் செப்பேடுகள் தமிழகத்தில் பரவலாக கிடைத்திருகின்றன.கபிலமலைச் செப்பேடு, பல்லடம் செப்பேடு,காரையூர் செப்பேடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. மல்லூர் பொன்பரப்பிப்பட்டி ஒரு வரலாற்றுப் பார்வை

       சேலம் மாவட்டம் மல்லூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்பரப்பிப்பட்டி கிராமம்.இவ்வூர் கல்வெட்டுகள் பொன் பரப்பி என்றே வழங்கப்பட்டு வருகின்றது.மன்னர் காலத்தில் பொற்காசுகளை ஏற்றிச் சென்ற வண்டியின் அச்சு முறிந்து விட்டதால் அதிலிருந்த பொற்காசுகள் கீழே சிதறிவிட்டதாம். என்வே அன்றிலிருந்து அவ்வூர் பொன்பரப்பி(ப்பட்டி) என்றாயிற்று. பொன்பரப்பி தலைநகராகக் கொண்டு சோழங்க தேவன் (கி.பி.1218-1261) என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். சோழங்க தேவன் கால கல்வெட்டுகள் சேலம் மாவட்டத்தில் பரவலாக கிடைத்திருகின்றன.அதன் மூலம் சோழங்க தேவன் கோவில்களுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தமை,மானியம் வழங்கியது போன்ற செய்திகளை அறியலாம்.
      இராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் இராசிபுரம் காக்காவேரி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சேலநாட்டு அஞ்சாத பெருமாளான சோழங்கதேவன் பொன்பரப்பினான் என்கிறது.சேலம் நாட்டு சீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:D.RENUGADEVI/மணல்தொட்டி&oldid=1980251" இலிருந்து மீள்விக்கப்பட்டது