பயனர்:DEEDevanathan.Gvpm/மணல்தொட்டி
வேளாண்மை வளர்ச்சியில் சதுப்பு நில நீர்ப்பறவைகள்
முன்னுரை
இந்திய நாடு வேளாண்மைத் துறையில் வளர்ச்சியினை பெற்று தன்னிறைவு அடைந்துள்ளது. எனினும் வேளாண்மையை நேரடித் தொழிலாகக் கொண்டுள்ள பெரும்பாண்மையான விவசாயிகள் , சுற்றுச் சூழல் சங்கிலி , வேளாண்மை வளர்ச்சியில் உயிரிணங்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி இன்னமும் அரியாத நிலையில் உள்ளனர். பொதுவாக நிலங்களில் பயிர்ப்பெருக்கம், வளர்ச்சி, மகசூல் அதிகரித்தல் பற்றி அதிகம் கவலை கொண்டுள்ள அவர்கள் , சதுப்பு நில உயிரினங்களான பறவைகள், தவளைகள், பாம்புகள் போன்றவயின் விவசாயப் பயன்பாடு பற்றி உணருவதற்கான நிலை வரவேண்டும்.
சதுப்பு நிலங்கள்
இந்தியத் துணைக்கண்டத்தில், மலைப்பகுதி, ஏரிகள், சிந்து-கங்கை ஆற்று நீரோட்டம், தக்காணப் பீடபூமி, கடற்கரைக் கழிமுகம், தீபகற்ப ஆற்றுப் பகுதிகள் எனப் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கலாம். மொத்தம் 65,000 நன்னீர் சதுப்பு நிலகள் 4.5 மில்லியன் ஹெக்டேர் அளவில் அமைந்துள்ளது.
வேளாண்மைக்கு பயன் தரும் பறவைகள்
முக்குளிப்பான் , குளத்துக் கொக்கு, மாட்டுக் கொக்கு, இராக்கொக்கு (அ) பச்சைக் கொக்கு, வெண்க்கொக்கு, கோட்டான், கருவாட்டுக்குருவி, மீன் கொத்தி போன்ற பறவைகள் வேளாண்மைக்கு உதவுகின்றன.