பயனர்:DIET Mathivanan Vpm/மணல்தொட்டி
திட்டப்பிழை
தொகுஒரு புள்ளியியல் அளவையின் மாதிரிப் பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும். இதனை S.E. எனக் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக சராசரி x̄ ன் மாதிரிப் பரவலின் திட்ட விலக்கம் அச்சராசரியின் திட்டப்பிழை ஆகும்.
இங்கு,
V(x̄) = V
∴ சராசரியின் திட்டப்பிழை .
பெருங்கூறுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த புள்ளியியல் அளவைகளின் திட்டப்பிழைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் n என்பது மாதிரியின் அளவு , σ2 என்பது முழுமைத் தொகுதியின் மாறுபாடு மற்றும் P என்பது முழுமைத் தொகுதியின் விகிதசமம் ஆகும். மேலும் Q = 1- P. n1 மற்றும் n2 என்பன இரு மாதிரிகளின் அளவுகளாகும்.
வ.எண் | புள்ளியியல் அளவை | திட்டப்பிழை | |
---|---|---|---|
1 | மாதிரியின் சராசரி | σ/√n | |
2 | கண்டறியப்பட்ட மாதிரி விகிதசமம் | √PQ/n | |
3 | இரு மாதிரிகளின் சராசரிகளின் வித்தியாசம் | √(σ12/n1 + σ22/n2) | |
4 | இரு மாதிரிகளின் விகித சமங்களின் வித்தியாசம் | √(P1Q1/n1 + P2Q2/n2) |
திட்டப்பிழைகளின் பயன்பாடுகள்
தொகு- திட்டப்பிழையானது பெருங்கூறு கோட்பாடுகளிலும் எடுகோள் சோதனைகளுக்கு அடிப்படையாகவும் பயன்படுகிறது.
- பண்பளவையின் மதிப்பீட்டின் நுண்மையின் அளவீடாக செயல்படுகிறது.
- திட்டப்பிழையின் தலைகீழியை மாதிரியின் நுண்மை அல்லது நம்பகத்தன்மையின் அளவாகக் கொள்ளலாம்.
- திட்டப்பிழையானது முழுமைத் தொகுதியின் பண்பளவை அமைவதற்கான நிகழ்தகவு எல்லைகளைக் கண்டுபிடிக்க ஏதுவாக அமைகிறது.
குறிப்பு
தொகுஒரு மாதிரியின் அளவை அதிகரித்து புள்ளியியல் அளவையின் திட்டபிழையைக் குறைக்கலாம். ஆனால் இம்முறையில் செலவு, உழைப்பு மற்றும் நேரம் ஆகியவை அதிகரிக்கின்றன.
மேற்கோள்
தொகு- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், கல்லூரிச் சாலை, சென்னை
- திரு கோ. ஞானசுந்தரம், முதுகலை ஆசிரியர், எஸ். எஸ். வி. மேனிலைப்பள்ளி, பூங்கா நகர், சென்னை
- திருமதி சா. எழிலரசி, முதுகலை ஆசிரியை, பெ. கா. அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை
- திருமதி என். சுசீலா, முதுகலை ஆசிரியை, அண்ணா ஆதர்ஷ் மேனிலைப்பள்ளி, அண்ணா நகர், சென்னை