பயனர்:Deealexandervpm/மணல்தொட்டி

                  ஊழலை வேறருப்போம்
    மனிதனின் மனநிலை மாறிவிட்டது.பணம் இருந்தால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறான்.அந்த பணத்தை அடைய எந்த நிலைக்கும் இறங்கும் நிலைக்கு வந்துவிட்டான் என்பதை பல்வேறு நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன.
   மனிதனாய் பிறந்ததே பெரிய பாக்கியம் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.அந்த பெரும்பாக்கியத்தை சரியாக பயன்படுத்துகிறோமா என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளவேண்டிய நேரம் இது.
  பிறந்த குழந்தை பிறந்ததுமுதல் பலவிதமான சூழ்நிலைகளை கடந்து வருகிறது.அன்பு,பாசம்,பரிவு,அணைப்பு,கோபம்,எரிச்சல் போன்ற உணர்வுகளைப்போல ஊழ்லையும் சிறுவயதிலேயே கற்றுக்கொண்டுவிடுகிறது.
  அதற்காக அதனை தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்கும் வரும் என்று விட்டுவிடுவது சரி அல்ல.எது சரி எது தவறு என்று தெறிந்தபின்பும் அதனை விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது மனித இனத்திற்கு நல்லதல்ல.
  படிக்கும் வயதிலும் நம்மை அறியாமல் இந்த ஊழலுக்கு அடிமை ஆகிவிடுகிறோம்.அதுவரை கூட அறியாத வயது,குடும்பச்சூழல் என்று எதாகிலும் காரணத்தை சொல்லி மனதை சமாதானப்படுத்தி விடலாம்.
 ஆனால் ஒரு வேலைக்கு என்று வந்த பின்பும் கையூட்டு வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இப்பொது குடும்ப சூழலை காரணம் காட்டுவது சரியானதாக இருக்காது என்று அனைவரது மனசாட்சிக்கும் தெறியும்.
  சிறிய அரசு அலுவலரிடம் இருந்து பெரிய அதிகாரிகள் வரை இப்படிப்பட்ட அநீதியை செய்வது, மனசாட்சி உள்ள மனிதனால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
 இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான ஆசைகள்தான் என்பதை தெறிந்துகொள்ளமுடிகிறது.
  மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக  60 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டாலும் அது நாட்களில் 60*365=21900 நாட்கள் மட்டுமே நாம் உயிர் வாழப்போகிறோம். வாழ்கின்ற இந்த நாட்களை இனிமையாக வாழுவோம்.இருக்கின்ற பணத்தில் வாழ கற்றுக்கொள்வோம்.
 காலம் முழுக்க அழுக்கு மூட்டையை முதுகில் தூக்கிக்கொண்டு செல்வதைவிட அதனை தூக்கி எறிந்துவிட்டு சுகமாய் பயணிக்க உங்களை அழைக்கிறேன்.
           முயன்று பாருங்கள் !
               கல்லான மனதை உடைக்க முயன்று பாருங்கள் !
                     கண்டிப்பாக உங்களால் முடியும் !
         ஊழலை வேறருக்க கோடாறி கொண்டு வாருங்கள் என்று சொல்லவில்லை.உங்கள் விரல் கொண்டாவது கிள்ளி எறிய உங்களை அழைக்கிறேன்.
                           
                                           அன்புடன்
                                    இ.ஜோசப் அலெக்ஸாண்டர்
                                      பட்டதாரி ஆசிரியர்
                                     ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி
                                     நின்னையூர்
                                    தியாகதுருகம் ஒன்றியம்
                                   விழுப்புரம் மாவட்டம் 606 203
                                    9790444432
                நன்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Deealexandervpm/மணல்தொட்டி&oldid=2263126" இலிருந்து மீள்விக்கப்பட்டது