பயனர்:Dhanalakshmi bala/மணல்தொட்டி

முனைவர். தேவகிருபை தியாகராஜன்

தொகு

முனைவர் தேவகிருபை தியாகராஜன் தமிழ் இலக்கிய ஆய்வுக்களத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். இவர் 11-10-1926 ஆம் ஆண்டு பிறந்தார். 1967 ஆம் ஆண்டு சென்னைப்  பல்கலைக்கழகத்தில் ஸ்டடிஸ் இன் அகத்திணை என்னும் பொருண்மையில் தமது முனைவர் பட்ட ஆய்வினை நிறைவு செய்துள்ளார். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் முதுகலைத் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். இக்கல்லூரி, தமிழ்த்துறையின் முதல் துறைத்தலைவரும் (1949-1975) இவரே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்த் தொண்டாற்றிட கடல் கடந்து சொக்கோசுலேவியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்ட இவர் அங்கு நடந்த சாலை விபத்தில்17-02-1975 அன்று காலமானார்.  இவர் தமது இறுதிப் பயணத்திற்கு முன் நினைவுத்துளிகள் எனும் தலைப்பில் பாரதிதாசன் பற்றி சமர்ப்பித்த கட்டுரை  பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் எனும் நூலில் வெளிவந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் கவிஞர் முருகு சுந்தரம் அவர்கள் இவரின் சிறப்புகளை இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். முனைவர் சு. அமிர்தலிங்கம் அவர்களின் சங்க இலக்கியக் களஞ்சியம் எனும் நூலில் இவரது ஆய்வேட்டினைப் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dhanalakshmi_bala/மணல்தொட்டி&oldid=4094017" இலிருந்து மீள்விக்கப்பட்டது