பயனர்:Dharshini2211181/மணல்தொட்டி
உயிர்வாழ உணவு மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கிய உணவு என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவுகள் தான் நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பது தான் ஆரோக்கிய உணவு என்பதாகும். அப்படிப்பட்ட உணவு வகைகளை நமது சங்க கால மக்கள் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்பததைத்தான் இக்கட்டுரையில் காண போகிறோம். வீட்டுக் கருவிகள் சங்க காலத் தழிழர்கள், வீட்டு வேலைகளைச் செய்வத்றகு இன்று நாம் பயன்படுத்துவதற்கு இணையான கருவிகளைப் பயன்படுத்தினார்கள். வெட்டுக்கருவிகள் அடிமனை கணிச்சி நீர் முகக்கும் கருவி மத்து உரல் உலக்கை மட்பாண்டங்கள் நற்றிணையில் சமையல் முறை: சங்க கால மக்களின் உணவுமுறை மற்றும் சமையல் முறைகள் நற்றிணையில் உள்ளன. அவை அவர்களின் உணவு வகை மக்களின் பருவச் சூழ்நிலை, வாழும் நிலத்தின் தன்மை. விளையுன் பொருள்கள், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. சங்க கால மக்களின் உணவு வகைகள் உடல் நலத்திற்கு ஏற்றவையாக இருந்தன. மேலும் உணவைச் சுவையுறச் சமைப்பதிலும், உண்பதிலும் அம்மக்கள் சிறந்து விளங்கினர்.. பெரும்பாலும் அக்காலத்தில் உணவினை நீரிட்டு, அவித்தல், வறுத்தல், சுடுதல் வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், ஊறவைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றினர். நற்றினைப் பாடல் ஒன்றில் தலைவி இரவில் வந்த விருந்தினருக்கு நெய் விட்டுக் கொழுப்பு உடைய ஊனைச் சமைக்கின்றாள் என்று குறிப்பு உள்ளது. “எல்லி வந்த நல் இசை விருந்திற்கு கிளர் கிழை அரிவை நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி சிறுநுண் பல் வியர் பொறித்த குறு நடைக் கூட்டம் வேண்டுவோரெ” நற்றிணை 41(5,10) உப்புப் பண்டம் புலவு நாற்றத்தைக் கொண்ட மீனை உப்பிட்டுக் காய வைத்து அவற்றைப் புள்ளினங்கள் கவர்ந்து கொண்டு செல்லாமல் காவல் காத்து நிற்பவர்கள் பரதவ குலத்துப் பெண்கள். உழாது உப்பு விளைவிக்கும் உழவர்களாகிய பரதவர் குவித்து நிரப்பி வைத்திருக்கும்; உப்பை விலைக் கொள்ளுவாராகிய உப்புவணிகரை எதிர் பார்த்து நிற்பார்கள். அத்திப்பழம், இலுபைப்பழம் குமிழும் பழம் கொன்றைப் பழம், நாவற்பழம் போன்றவை நற்றிணையில் அதிகமாக கிடைக்கும் பழங்களாகும். குறுந்தொகையில் உணவு முறை சங்க கால மக்கள் அசைவ உணவையே பெரிதும் விரும்பி உண்டனர். பண்டைத் தமிழகம் குறி;ஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பகுக்கப் பெற்றிருற்தது. குறி;ஞ்சி நில மக்கள் மலையில் விளைந்த திணையைச் சோறாக்கியும், நெய்யில் பொறிக்கப்பட்ட இறைச்சியையும் உண்டனர். மருத மக்கள் வெண்சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும், பழைய சோற்றையும் உண்டனர். இவர்கள் அவலைக் கூட உண்டனர். நெய்தல் நில மக்கள். இறால்மீன், வயல் ஆமை ஆகியவற்றைப் பக்குவம் செய்து உண்டனர். பாலைநில மக்கள் இனிய புளிக்கறி இடப்பட்ட சோற்றையும். கறியையும். இறைச்சியையும், உண்டனர். அரசன், புலவர், மக்கள் ஆகிய அனைவருமே தேறல் உண்ணும் வழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர். வேதியர்களின் வீட்டில் புலால் இல்லாத மரக்கறி உணவை உண்டதாகக் குறிப்பு உள்ளது. இராசன்னம் என்ற ஒருவகை நெல்லில் செய்த சோற்றுடன் மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையும் கலந்து, பசு வெண்ணெயிலே வேக வைத்து பொறியலோடு உண்ட செய்தி பெரும்பாணாவற்றுப்படையில் (304-310) குறிப்பிடப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்தில் உணவு வகை: சங்க காலத் தமிழர்களுடைய வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாய் இருந்தது. அவர்கள் வாழும் சுற்றுச் சுழலுக்கேற்ப அமைந்தது. ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை பல்வகை வேறுபாடு இருப்பதை சங்க பாடல் காட்டுகின்றன. பதிற்றுப்பத்தில் காணப்படும் பாடலொன்று, “உண்மின் கள்ளே அடுமின் சோறே ஏறிக திற்றி ஏற்றுமின் புழக்கே வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப இருள் வணர் ஒலிவரும் புரிய அவிழ் ஐம்பால்” (18:1:6) என்று அமைந்துள்ளது. கள்ளை உண்பீராக, சோற்றைச் சமைப்பீராக, திண்ணப்படும் ஊண் கறியை அறுப்பீராக, கறி வகைகளை உலையில் ஏற்றுவீராக என்பது இதன் பொருள் இப்பாடலை பார்க்கும் போது கள், சோறு, இறைச்சி வகைகள் சேர நாட்டு மக்களி;ன் முக்கிய உணவாக அமைந்தமை பெறப்படும். முக்கிய உணவு திணை வகை, இயற்கை வகை, குடிவகை என்று பகுத்து கூறலாம். தினை வகை சோறு சேரநாட்டு மக்களின் முக்கிய உணவாக இருந்ததை “அடுமின் சோறெ” (18:1) என்ற அடி உணர்த்துகிறது. நெல்லின் வகை நிலத்துக்கு நிலம் மாறுபடும். மருதநில மக்கள் செந்நெல் சோறும் மலை நில மக்கள் வெண்ணெல் சோறும் உட் கொண்டனர். செந்நெல் சிறிய மஞ்சள் நிறமுடைய தானியமென்றும் வெண்ணெல் ஒரு வகையான காட்டரிசி என்றும் கூறுவர் சோற்றைப் பல வகையில் பக்குவப்படுத்திச் சேரர்கள் உண்டதைப் பதிற்றுப்பத்து விளக்குகிறது. சோற்றிலே அவர்கள் நெய் பெய்து சமைத்தார்கள். இறைச்சி வகைகளையும், சோற்றோடு கலந்து சமைப்பது பழந்தமிழரின் மரபாகும். சேர நாட்டுத் தமிழர்கள் ஆட்டிறைச்சியை வெண்ணெல்லோடு கலந்து சமைத்தனர். தின்னும் பக்குவத்துக்குச் சமைக்கப்படும் இறைச்சி திற்றி என்றும் உலையேற்றி வேக வைக்கப்படும் இறைச்சி புழுக்கு என்றும் அழைக்கப்படும். திணைமா திணைமா பண்டைத் தமிழர் விரும்பி உண்ட உணவுப் பொருளாகும். இன்று நாம் வீடு தேடி வரும் விருந்தினர்க்கு இனிப்புப் பண்டங்களை வழங்குவது போல் அன்று திணை மாவைக் கொடுத்தார்கள். திணைமா ‘நுவணை’ எனப்பட்டது. இடித்து நுண்ணிதாகப்பட்ட மாப்பொருள் என்பதனால் இது ‘மென்றினை நுவணை’ எனப்பட்டது. இதைக் கருப்புக் கட்டியைக் கொழித்து பொடியையொக்கும் என்றும் ‘நுண்றுவணை’ என்றும் மலைபடுகடாம் கூ;றும். இது மிகச் சுவையுடையது. இறைச்சிவகை புதிற்றுப்பத்தின் சேரநாட்டு மக்கள் இறைச்சி வகையை மிக விரும்பி உண்டனர். ஆட்டிறைச்சியையும் பெரும்பாலும் கள்ளருந்தும்போது அவர்கள் இறைச்சியை அதிகமாகப் பயன்படுத்தியதாகத் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இறைச்சியைத் துவரை, அவரை போன்றவற்றுடன் அரைத்து ஒரு வகையான துவையலையும் பண்டை நாளில் தமிழர்கள் செய்துள்ளனர். குய்யிடுதல் என்பது தாளிதம் செய்தல் எனப் பொருள்படும்ஃ பண்டைத் தமிழரின் உணவுக் கலையறிவைக் காட்டுகிறது. பழங்கள் கிழங்குகள் சேரநாட்டுத் தமிழர்கள் பழவகைகளையும் கிழங்கு வகைகளையும் உணவுப் பொருளாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். முழவு போன்றமைந்த பெரிய பலாப்பழத்தை அவர்கள் உண்டனர். வழிச் செல்வோருக்கு, அவர்களுடைய களைப்பைப் போக்க தேன் நிறைந்த முட்டை போன்ற வடிவத்தையுடைய முதிர்ந்த பழங்கள் உணவாகியுள்ளன. பழங்களோடு கிழங்கு வகைகளும் சேர நாட்டுத் தமிழர்களின் உணவாக அமைந்துள்ளது என்று பதிற்றுப் பத்து கூறுகிறது. கருப்பஞ்சாறு கரும்புச்சாறை விரும்பி அருந்தினர். மருத நிலத்தில் வாழும் மக்கள் நெல்லுக்கு வேலியாகக் கரும்பை நடுவர். அது வளர்ந்து நெல்லின் வளர்ச்சியைக் கெடுத்தலால் அரிந்து பிழிந்து சாறு பெறுவர். அதை வரும் விருந்தினருக்கு வழங்கினர் இன்று வீட்டு தேடிவரும் விருந்தினருக்கு நாம் சுவைபானம். தருவது போல அன்று கருப்பஞ்சாற்றைத் தந்திருக்கிறார்கள். பெரும்பாணாற்றுப்படைப் பாணன், ‘மருத நிலத்தில் தங்குவராயின் கரும்பின் தீஞ்சாற்றை அருந்தலாம்’ என்று கூறுவது மேற்கண்ட கருத்துக்கு வலுச்சேர்க்கிறது. சங்க கால தமிழர்கள் சைவம், அசைவம் இரண்டு உணவுகளையும் வகை வகையாக சமைத்து உண்டனர் என்பதற்கு சான்றாக சங்க பாடல்கள் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. தனியாக உண்ணும் பழக்கம் தமிழர்களுக்கு என்றுமே கிடையாது என்பதற்கு சான்றாகவும் திணைப்பாடல்கள் கூறுகின்றன. மன்னர்கள் அரண்மணையில் வரும் மக்களுக்கு உணவு அளித்து மகிழ்ந்தனர். சங்க கால மக்கள் அசைவ உணவு மிகுதியாக உண்டனர். பிறகு நீதி இலக்கியங்கள் புலால் உண்ணுதல் மிகவும் பாவ செயல் சைவ உணவுதான் சிறந்தது என்று கூறுகிறது. இக்கருத்துகள் கீழ்வரும் நூல்களில் காணப்படுகிறது.. திருக்குறள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஒளவையார் பாடல் போன்றவற்றில் காணலாம். “உணை தின்று உணை பெருக்குதல் நன்கின்னா” என்று இறைச்சியை உண்டு உங்கள் உடம்பை வளர்த்தல் நல்லது இல்லை என்று கூறுகிறது. இன்றைய விரைவு உணவால் பலவித வயிற்று கோளாறு வருவதை நாம் காணலாம் ஆரோக்கிய இயற்கை உணவு வகைகளையே உண்டு மனித வாழ்வு நீடிக்க வழிவகை செய்ய வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரைவு (குயளவ குழழன)க்கு அடிமையாகி கிடப்பது தெரிந்த உண்மையே சங்க கால உணவு உடல் நலம் காக்கும் உடல் உறுதி பெறும். மேற்கண்டவாறு சங்க கால உணவு முறைகள் உணவு பழக்கம். உணவு வகை, என்று இவைகளைப் பற்றி தெளிவாக பார்த்தோம். இவையே சங்க கால உணவு முறையாகும்..