பயனர்:Divyadurga/மணல்தொட்டி
ரா தினகரன்
ராமசாமி தினகரன் (Ramasamy Dhinakaran) சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர். அவர் இப்பதவியை 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை வகித்தார்.
கல்வி மற்றும் தொழில்
தினகரன் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அவர் எண்பதுகளின் தொடக்கத்தில் மெல்வானி குழமத்தைச் சேர்ந்த ஜே ஜி நிறுவனத்தில் நிதிக் கட்டுப்பாட்டு வல்லுநராகச் சேர்ந்தார். 1997-இல், ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அவர் எம் பி மெல்வானி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று, அதன் லாபத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றினார். பல்லாண்டுகளாக அக்குழமத்திற்கு அவர் ஆற்றிய பணிக்காகவும் அதன் கீழ் இயங்கிய நிறுவனங்களை நெருக்கடியான சூழல்களில்கூட லாபகரமாக நடத்தியாலும், மெல்வானி குடும்பத்தினர் 2001-இல், ஜே ஜி மெல்வானி குழமத்தின் அனைத்து நிறுவனங்களுக்குமான நிர்வாக இயக்குநர் பதவியில் அவரை அமர்த்தினர். அதே சமயத்தில் மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தியா, ஜெர்மனி முதலிய நாடுகளுடனான வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் அவர் பொறுப்பாக இருந்தார்.
சமூகத்திற்குப் பங்களிப்பு
தினா என்றும் அழைக்கப்படும் தினகரன் பல தொழில்முறை வர்த்தக சங்கங்களுக்கும் அரசாங்க ஆணைபெற்ற அமைப்புகளுக்கும் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார். சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், சிங்கப்பூர் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தில் உறுப்பினர், யுனிசிம் கல்லூரியின் ஆலோசனைக் குழு உறுப்பினர், சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் முக்கியக் குழுவில் உறுப்பினர், இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவர், தொடர்பு, தகவல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவில் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இவர் ஆற்றி வருகிறார். இவர் தொழில்களைச் சிறப்பாக நடத்துவதில் பெற்ற அனுபவத்தையும் திறனையும் பயன்படுத்தி இலாப நோக்கற்ற நிறுவனங்களை நிர்வகிப்பதிலும் சமூக நலத் திட்டங்களை வழிநடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேற்கோள்கள்
http://www.jaygee.com.sg/html/aboutus-directors-dhinakaran.php
https://www.retail.org.sg/sra-council.php
https://en.wikipedia.org/wiki/Nominated_Member_of_Parliament#NMPs
|